முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
இஸ்ரேலால் அங்கீகரிக்கப்படாத 45 கிராமங்களில் அல்-அராகிப் கிராமமும் ஓன்று. இங்கு 40 வீடுகள் உள்ளன. அல்-அராகிப் என்ற கிராமம் முழுவதும் புல்டோசர்களால் இடித்து அழிக்கப்பட்டது அங்கு வாழ்ந்த மக்களின் வீடுகள்,கால்நடைகள்,மரங்கள் மற்றும் உடைமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.


அண்மைக் காலங்களில் இஸ்ரேல் பாலஸ்தீன மண்ணுக்கும் அதன் மக்களுக்கும் எதிராக மேற்கொண்டுவரும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கும் அதன் கொள்கை வகுப்புக்களுக்கும் எதிராக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் மனிதாபிமானம் படைத்த யூத செயற்பாட்டாளர்கள் கூட இஸ்ரேலுக்கெதிராக தமது அதிரிப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தகையவர்களில் சிலர் காஸா மீதான இஸ்ரேலின் கடின முற்றுகையினை உடைத்து அதன் பலஸ்தீன ஆக்கிரமிப்பினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அடம்பெறும் நடவடிக்கைகளுக்கு கூட ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.
இவ்வாறு இஸ்ரேலினுடைய பாசிசவாத நடவடிக்கைகளை இஸ்ரேலியர்கள் கூட விமர்சிக்கும், கண்டிக்கும் அல்லது எதிர்த்து குரலெழுப்பும் நிலை ஏற்பட்டுள்ள இவ்வேளை, எந்த யூத மக்களுடைய பெயரால் இஸ்ரேல் இத்தகைய மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை அப்பாவி பலஸ்தீனர்களுக்கெதிராக அரங்கேற்றி வருகின்றதோ அத்தகைய யூத பெரும்பான்மை ஏன் அமைதியாகவுள்ளது அல்லது இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகளை கண்டுகொள்ளதில்லையா என்ற வினா எழலாம்.
ஏனெனில் இஸ்ரேல் தனது குற்றங்களை யூத மக்களின் பெயரால் இழைத்து “பொதுமக்கள் அவசியத்தன்மை (Public necessity)” என்ற எதிர்வாதத்தை சர்வதேச சட்டத்தில் முன்வைத்து தப்பித்துக்கொள்ள முயற்சிப்பது இஸ்ரேலின் வழக்கமான செயற்பாடாகிவிட்டது.
முன்னாள் இஸ்ரேல் ஜனாதிபதியான சைமன் பெரஸ், ஒருமுறை யூதர்களின் புலமைத்துவ செயற்பாடுகளை
(Jewish intellectual activism), ‘யூத மக்களின் விதியை மாற்றியமைக்க திட்டமிடல்’ மற்றும் ‘உலகின் விதியை மாற்றியமைக்க ஒத்துழைத்தல்’ என இரண்டு பிரிவாக பிரித்துக் கூறியிருந்தார்.
ஸனா: கடந்த சிலவாரங்களுக்கு முன் டெட்ராய்ட் விமான நிலையத்தில் அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த முயற்சி தொடர்பாக நைஜீரிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதனால் ஏமன் நாட்டில் இருக்கும் போராளிகளை அழிக்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆள் இல்லாத விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு ஏமனில் உள்ள முஸ்லிம் மார்க்க ஆலிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அல்கொய்தா போராளிகளை ஒழிப்போம் என்ற போர்வையில் ஏமன் நாட்டை தாக்க அமெரிக்க ராணுவத்தை அனுப்பினால் அமெரிக்கா கடும் எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியுருக்கும் மேலும் அதற்கு எதிராக புனிதப்போர் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏமன் தலைநகர் ஸனாவில் நடந்த மாநாட்டில் முஸ்லிம் மார்க்க ஆலிம்கள் பலர் கையெழுத்திட்டு இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். ஆனால் ஏமனுக்கு ராணுவத்தை அனுப்பும் எண்ணம் இல்லை என அமெரிக்கா மறுத்துள்ளது.
HEZBOLLAH - LEBANON
HAMAS - PALESTINE
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நாங்களும் ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போர்புரிவோம் என லெபனானில் ஹமாஸின் அரசியல் பிரதிநிதி அலி பராகா கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, "நாங்கள் இங்கு(லெபனானில்)விருந்தாளியாகவே தங்கியுள்ளோம் ஆனால் எங்கள் கோட்பாட்டில் எந்த மாற்றமுமில்லை. இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தும்பொழுது எங்கள் கைகள் விலங்கிடப்படாது. எங்கள் சகோதரர்களுடன் இணைந்து நாங்களும் போராடுவோம். இஸ்ரேலை துரத்துவோம்." என்றார் அவர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குபகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட இரண்டு ஹமாஸ் உறுப்பினர்களின் நினைவுதினத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதுதான் அலி பராக்கா இதனை தெரிவித்தார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜுலையில் துவங்கி 33 நாள்கள் நடந்த இஸ்ரேல்-ஹிஸ்புல்லாஹ் போரில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 10 லட்சம் லெபனான் மக்களும், 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரையிலான இஸ்ரேலியர்களும் இடமாற்றப்பட்டனர்.ஹிஸ்புல்லாஹ்வின் பலத்தை அழிப்பேன் என்று சபதமிட்டு தாக்குதல் நடத்திய யஹூத் ஓல்மர்ட்டின் திட்டம் தவிடுபொடியானதுதான் மிச்சம்.வேறு எந்த பயனும் விளையவில்லை.
காஸா மீதான இஸ்ரேலிய யுத்தத்தில் உயிருடன் எரிந்துபோன பலஸ்தீன் குழந்தைகள்
ரமல்லா – 2009 ஆம் ஆண்டு 473 குழந்தைகள், 126 பெண்கள் உட்பட 1594 பலஸ்தீனர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை கொன்று குவித்துள்ளது என Tadamun எனும் மனித உரிமைகளுக்கான சர்வதேச ஒருமைப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை (30.12.2009) மேற்படி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 1460 பேர் காஸா மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போதும், ஏனைய 134 பேரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மேற்குக் கரை, காஸா பிரதேசங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதும் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
1967 ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்துவரும் அரபு- இஸ்ரேலிய மோதல் வரலாற்றில் கடந்த ஜனவரி மாதம் மிக மோசமான படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள மாதமாகும். அந்த மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 30 பேர் என்ற வீதத்தில் 1076 பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, மனித உரிமைகளுக்கான பலஸ்தீன் மையம் குறிப்பிடுகையில், கடந்த வாரம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கைகளின்போது ஆறு பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு ஒரு பெண்மணி, ஒரு குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை மேற்படி பலஸ்தீன் மையம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கடந்த ஒருவார காலத்துக்குள் மட்டும் மேற்குக் கரையில் 28, காஸாவில் 2 என அடுத்தடுத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, 26 பலஸ்தீனர்களைச் சுற்றிவளைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸாவின் அனைத்து எல்லைக் கடவைகளையும் மூடிவைத்துள்ளதோடு, ஒருசிலவற்றைத் திறந்தாலும் கடலில் மீன்பிடித் தொழிலுக்காகச் செல்லும் பலஸ்தீன் மீனவர்களை விரட்டிவிடுவதாகவும் அறிவுறுத்தியுள்ளது.
நன்றி: PIC
வயோதிகப் பெண்மணியிடம் வீரம்(!?) காட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர்
நப்லஸ் - கடந்த ஞாயிற்றுக்கிழமை (13.12.2009) அதிகாலையில் நப்லஸ் நகரில் திடீர் தாக்குதலொன்றை மேற்கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, 65 வயதான உம்மு பாக்கிர் என்ற பெண்மணியின் வீட்டுக்குள் பலவந்தமாகப் புகுந்து அவரைக் கைதுசெய்துள்ளதாக கைதிகள் தொடர்பான கற்கை மற்றும் மனித உரிமைகளுக்கான அஹ்ரார் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அஹ்ரார் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உம்மு பாக்கிர் எனும் வயோதிகப் பெண்மணியின் ஐந்து மகன்கள் ஏற்கெனவே இஸ்ரேலிய சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதோடு, கடந்த மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அவருடைய மருமகள் நில்லி அல் ஸஃபாதியையும் இந்த மாதத் தொடக்கத்தில் அவரது எஞ்சியிருந்த ஒரே மகன் உமர் மற்றும் பேரன் பாக்கிர் பாக்கிர் (வயது 19) ஆகிய இருவரையும் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அஹ்ரார் மையத்தின் பணிப்பாளர் ஃபுவாட் அல் ஹஃப்ஷ் இதுபற்றித் தகவல் அளிக்கையில், இஸ்ரேலின் பெட்டாஹ் திக்வா தடுப்புக்காவல் நிலையத்தில் தற்போது அடைத்துவைக்கப்பட்டுள்ள உம்மு பாக்கிர் (வயது 65) பலஸ்தீன் கைதிகளிலேயே மிகவும் வயது முதிர்ந்தவர் என்றும், அவருடைய மூத்த மகன் பாக்கிர், மருமகள் நில்லியின் கண்பார்வையற்ற கணவன் ஆகியோரும் இதே தடுப்புக்காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
கொஞ்சம்கூட மனிதாபிமானமின்றி, மகன்களுக்கு உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஏற்கெனவே பல்வேறு நோய்களால் துன்புற்றுக்கொண்டிருக்கும் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியை இப்படிக் கடத்திச் சென்று தடுப்புக் காவலில் வைத்திருக்கும் மிக இழிவான செயற்பாடானது அதன் மிலேச்சத்தனமான சுயரூபத்தை எடுத்துக்காட்டப் போதுமானதாகும் என்று கடிந்துரைத்த ஃபுவாட் அல் ஹஃப்ஷ், உம்மு பாக்கிரை உடனடியாக விடுவிப்பது தொடர்பில் விரைந்து செயற்படுமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளார்.
திடீர் சோதனை என்ற போர்வையில் தொடர் கைதுகள்
இதே தினத்தில் அல் ஹலீல் நகரத்தில் திடீர் சோதனை என்ற போர்வையில் களமிறங்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை பலஸ்தீன் இளைஞர் ஒருவரைக் கைதுசெய்து அவரது வீட்டிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துள்ளது.
அவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞரின் பெயர் அக்ரம் அல் ஹத்தாத் என்பதாகவும் அவரது வீட்டிலிருந்த நகைகளே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் திருடப்பட்டுள்ளன என்றும் உள்ளூர் வட்டாரங்கள் பலஸ்தீன் தகவல் மையத்திடம் தகவல் தெரிவித்துள்ளன.
நன்றி: PIC
|
|
|
|
ஜெரூசல நகரிலுள்ள பலஸ்தீனர்களின் வீடுகளை இடித்துத் தகர்க்கும் இஸ்ரேலின் செயற்பாட்டினால் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் தமது வாழிடங்களை இழந்து இடப்பெயர்வுக்குள்ளாகும் அபாயநிலை தோன்றியுள்ளதாக ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்படி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனித ஜெரூசல நகரில் உள்ள இஸ்ரேலிய முனிஸிபல் கவன்ஸில் ஸில்வான் பகுதியைச் சுற்றியுள்ள பலஸ்தீனர்களின் வீடுகளைத் தகர்க்குமுகமாக 17 கட்டடத் தகர்ப்பு உத்தரவுகளை அண்மையில் வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
அண்மைக் காலமாக சுமார் 90 பலஸ்தீனர்களின் வீடுகள் தகர்ப்பு உத்தரவுகளைப் பெற்றிருப்பதாகவும் அதனால் அவற்றின் உரிமையாளர்கள் தமது வாழிடங்களை இழந்து இடப்பெயர்வுக்கு ஆளாகும் அவலநிலை தோன்றியிருப்பதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகையில், இஸ்ரேல் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் கிழக்கு
ஜெரூசலத்தில் சுமார் 75 பலஸ்தீனக் கட்டடங்களைத் தகர்த்ததன் மூலம் 131 குழந்தைகள் உட்பட 269 பலஸ்தீனர்கள் தத்தமது இருப்பிடங்களை இழந்து இடம்பெயர நேர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
நன்றி : PIC

கடந்த டிசம்பரில் இஸ்ரேல் பாலஸ்தீன் மீது அநியாயமாக நடத்திய ஆக்கிரமிப்பு போரில் பல பாலஸ்தீன அப்பாவி பொது மக்களை வேண்டுமென்றே கொன்றுள்ளனர் என்றும் பலரை உயிருடன் புதைத்துள்ளனர் என்றும் பாலஸ்தீன மனித உரிமை ஆர்வலர் நஷாத் அல் வாஹிதி தெரிவித்தார்.
வாஹிதி அவருடைய அறிக்கையில், "பாலஸ்தீனிய பொதுமக்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் கைதிகளாக பிடித்து அவர்களை கொன்று குவித்துள்ளனர்" என்று கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, "காசாவின் கிழக்கு பகுதியில் உள்ள அல் ஜைத்தூன் பகுதியை ஆக்கிரமித்த இஸ்ரேலிய படைகள் காயம் பட்ட பல பாலஸ்தீன பொதுமக்களை உயிருடன் புதைத்துள்ளனர்.
மேலும் , காசா மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதலிற்கு பிறகு பல பாலஸ்தீன பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களின் நிலை என்ன என்பது இன்று வரை தெரியாமல் உள்ளது என்று கூறினார்.
இவர்கள் கொல்லப்பட்டுவிட்டனரா இல்லை இஸ்ரேலிய ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனரா என்று தெரியவில்லை.
நன்றிPalestine Info.

















