_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

http://www.stockphotopro.com/photo-thumbs-2/B14DC8.jpg


சினிமா என்பது ஒரு பொழுது போக்கு என்ற நிலை தாண்டி மிக சக்தி படைத்த மக்களின் உள்ளங்களை திசை திருப்பும் ஊடகமாக மாறிவிட்டது என்பதால் அதையும் அவதானிப்பது எமக்கு தவிர்க்க முடியாத விடையமாகி விட்டது உலக வரலாற்றில் குறிப்பிட்ட சமூகத்தின் மீது தங்களுடைய ஆதிக்கத்தை நிறுவ விரும்பும் தனிநபர்கள், குழுக்கள் வன்முறையை மட்டும் கைக்கொண்டு அதை நிறைவேற்றுவதில்லை. பல்வேறு கருத்தோட்டங்களைத் தங்களுக்குச் சாதகமான பின்னணியாகக் கைக்கொள்வதும் உண்டு. அத்தகைய கருத்தோட்டங்களில் சில உண்மைகள் திரித்தும் கலந்துமிருக்கும். சில முற்றிலும் வதந்திகளாகவும் இருக்கும். நம்முடைய சமகாலத்திற்கான எடுத்துக்காட்டாக இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும், இந்து பாசிசத்தையும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்னும் பிரச்சாரத்தையும் கூறலாம்.

இத்தகைய கூற்றுகள் பல அழிவுகளை நிகழ்த்தகூடியது அப்படிபட்ட கருத்தோட்டங்களைத் உருவாக்க முனையும் படம்தான் உன்னைப் போல் ஒருவன்.


உன்னைப் போல் ஒருவன் – இந்துப் பாசிசத்தின் இன்னொரு பிரதி:

ஆரம்பப்பள்ளியின் ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள். தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள். இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல.

இந்திய இந்து மனங்களின் உள்ளாக முஸ்லீம் விரோத மனப்போக்கு கேள்விகளுக்கு அப்பாற்பட்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தைகளின் மனதிலும் முஸ்லீம் விரோத மனப்பாங்கை உருவாக்கும் நிலை.


இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும்,ஒடுக்கப்படும் தேசிய இனமான இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன்.

இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் 'சமூக அக்கறை' விஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது… இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.

'தீவிரவாதத்துக்கு தீவிரவாதம் தீர்வில்லை' என்று குருதிப்புனலில் அகிம்சைப் பேசிய கமல்ஹாசன், இதில் தீவிரவாதத்துக்குத் தீவிரவாதமே தீர்வு என்கிறார். நாட்டில் குண்டு வைத்த நான்கு தீவிரவாதிகளை கடத்தி இவர் குண்டு வைத்து அழிக்கிறார். அந்த நான்கில் மூன்று பேர் முஸ்லீம்கள். ஒரே ஒருவர் மட்டும் இந்து, அவர் அப்பாவி கோயிந்து. அவருக்கு ஒன்றுமே தெரியாது. 'தெரியாதத்தனமாக' தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளை செய்தவர். ஆனால் மற்ற மூன்று முஸ்லீம்களும் 'புனிதப்போர்' என்றும், 'கபீர்களை அழிக்க வேண்டும்' என்றும் எப்போதும் நரம்புப் புடைக்கத் தீவிரவாதம் பேசுபவர்கள். ஆக முஸ்லீம்கள் திட்டமிட்டு குண்டு வைக்கிறார்கள், இந்துக்கள் ஒரு சிலர் 'தெரியாதத்தனமாக' அந்த 'சதிவலை'யில் சிக்கிகொள்கிறார்கள். இதுதான் கமல் சொல்ல வரும் நியதி. அட ங்கோ… குஜராத்தில் 3,000 இஸ்லாமியர்களை தெருத்தெருவாகத் துரத்திக் கொன்றொழித்தீர்களே… அது தெரியாதத்தனமாக நடந்ததா? மாலேகானில் குண்டு வைத்தது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடா?

கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது . தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர் 'ஆரிஃப்' என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். 'ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்' என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.

தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? 'இஸ்லாமியத் தீவிரவாதம்' பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார்.

தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக 'தேவர் மகன்' என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்தி 'போற்றிப் பாடடி பெண்ணே..' என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் (எ) ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது. நடுநிலைமையைக் காப்பாற்றவும், 'பாருங்கப்பா… ஒரு முஸ்லீமே வேலைப் பார்த்திருக்கார்?' என்று சப்பைக் கட்டு கட்டவுமான ஏற்பாடு. இதே வேலையைதான் அப்துல் கலாம் மூலம் பா.ஜ.க. செய்தது. தனது சூலாயுதத்தில் சொட்டிய முஸ்லீம் மக்களின் ரத்தக்கறையை அப்துல் கலாம் என்னும் இஸ்லாமியரைக் கொண்டு பா.ஜ.க. மறைக்க முயன்றதும், உன்னைப்போல் ஒருவன் என்னும் இந்துத்துவ பிரதியின் காவிச் சாயத்தை மனுஷயப்புத்திரனைப் பயன்படுத்தி கமல் சமன் செய்யப் பார்ப்பதும் ஒரே விதமான அரசியல்தான். (ஆனா ஹமீது இதை நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். பாவம் அவருக்கு கமலை புகழ்ந்து விஜய் டி.வி.யில் கவிபாடவே நேரம் இல்லை)

முஸ்லீம்களுக்கு எதிரான வெகுமக்களின் மனநிலையை கட்டி எழுப்புவதிலும்,
பராமரிப்பதிலும் இவர்கள் அனைவருக்கும் சம அளவுக்கு பங்குண்டு. இன்று, 'நான் ஒரு முஸ்லீம்' என்று சொல்லிக்கொண்டு சென்னை உள்பட தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும் அத்தனை சுலபமாக வாடகைக்கு வீடு பிடித்துவிட முடியாது. முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு வாடகைக்குக் கூட வீடு தரப்படுவது இல்லை. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், முஸ்லீம் மாணவன் தாடி வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றதால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், 'இதை அனுமதித்தால் பள்ளிக்கூட வளாகம் தாலிபான் மயமாகிவிடும்' என்று வெளிப்படையாகத் தீர்ப்பே சொல்கிறார். பொதுப்புத்தியில் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்போக்கு மிக வலுவாக அணுதினமும் உருவாக்கப்படுகிறது. இதே வேலையை மேற்கொண்டும் ஒரு படி முன்னேற்றி வைத்ததன்றி இந்த திரைப்படம் சாதித்தது எதுவுமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானதிலேயே மிக மோசமான முஸ்லீம் விரோதத் திரைப்படம் இதுதான்.

உண்மையில் கமல் இப்படி மொட்டை மாடிக்குப் போய் கம்ப்யூட்டரை விரித்து வைத்து, கமிஷனருடன் பேரம் பேசி… ரொம்பவெல்லாம் மெனக்கெடாமல் மிக சுலபமாக கடத்தி கொல்ல வேண்டிய பயங்கரவாதிகள் நிறையப்பேர் நாட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். நரேந்திர மோடி, ராமகோபாலன், துக்ளக் சோ, இந்து ராம், பிரவீன் தொக்காடியா என்று அந்தப் பட்டியல் பெரிது. இவர்கள் அத்தனை பேரும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கை நனைத்தவர்கள்.

ஒரு திரைப்படத்தை வெறுமனே பொழுதுபோக்கு பிரதி என்று அலட்சியமாக அணுக முடியாது

ஏனென்றால் கமல் அவ்வாறு இதை கையாளவில்லை. மாறாக இந்தியாவையே உலுக்கிய பெஸ்ட் பேக்கரி வழக்கை போகிறபோக்கில் ஊறுகாய் மாதிரித் தொட்டுச் செல்கிறார். தன் மனைவியை இந்து தீவிரவாதிகள் கொன்றார்கள் என்பதை முஸ்லீம் ஒருவர் வர்ணிக்கும்போது பின்னாலிருக்கும் சந்தானபாரதி 'அதான் மிச்சம் ரெண்டு இருக்குல்ல…' என்று நக்கல் பேசுகிறார். இவை எவற்றையும் வெறுமனே பொழுதுபோக்காகவும், 'இதுவும் இன்னொரு படமே' என்பதாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. மிக வலுவான பாசிஸ இந்துத்துவ அரசியலை வெளிப்படையாக தூக்கிப் பிடிப்பதன்றி இதன் அரசியல் வேறென்ன? 'இந்த கொடுமையான படம் முடிந்ததே' என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. 'சம்பவாமி யுகே, யுகே..' என்னும் பாடல். 'யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்' என்று அர்த்தமாம். ஒண்ணுக்கேத்… இதுல யுகங்கள் தோறுமா?

ஆழியூரான்






   

 

இந்தியாவில் முஸ்லிம்களாக வாழ்வது ..."இந்தியாவில் தற்கால

முஸ்லிம்களின் நிலை"

புதுதில்லி மாநாட்டுப் பரிந்துரைகள்!

 

கடந்த 3.10.2009 சனிக்கிழமை புதுடெல்லியில் சமூக நல்லிணக்க-ஜனநாயக விழிப்புணர்வு அமைப்பு (Act Now For Harmony and Democracy) நடத்திய "இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை" எனும் கருத்தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் மன வெளிப்பாடுதான் இக்கட்டுரையின் தலைப்பு.

மூன்று நாள்கள் (3-5 அக்டோபர் 2009) தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், "பல்வகைப்பட்ட அச்சங்களைச் சுமந்து கொண்டு வாழ வேண்டிய இக்கட்டான சூழலில் இந்திய முஸ்லிம் சமுதாயம் சிக்கித் தவிக்கிறது. அவற்றுள் தலையாயதும் கவலைக்கு உரியதுமான அரித்தெடுக்கும் அச்சம் யாதெனில், 'விசாரணை' என்ற பெயரில் எந்த நிமிடத்திலும் 'சட்ட நடவடிக்கை'க்காக நாங்கள் 'தூக்கி'ச் செல்லப் படலாம் என்பதே" என்று ஒரே குரலில் கூறினர்.

தீவிரவாதச் செயல்களைச் செய்ததாகவும் தீவிரவாதச் செயல்களில் தொடர்பு உடையவர்களென்றும் பொய்க் குற்றம் சாட்டப் பட்டு, அநியாயமாகச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளவர்களின் உறவினர்கள், தங்களது பாதிப்பு அனுபவங்களை இந்த நடுவுநிலை மாநாட்டுக் குழுவினர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்டனர்.

ஹர்ஷ் மந்தர் - ஜஹான் குடும்பத்தாரோடுஇந்திய முஸ்லிம்களிடம் நிலவி வரும் அச்சம்-அவநம்பிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மேற்காணும் நடுவுநிலைக் குழுவினர் 12 பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அரசின் முன்னாள் உயரதிகாரியும் குழு உறுப்பினர்களுள் ஒருவருமான திரு. ஹர்ஷ் மந்தர், "காவல் துறை, நீதித் துறைகளினால் முழுமையாகக் கைவிடப் பட்டவர்களாக முஸ்லிம்கள் ஆகிவிட்டனர். ஊடகத் துறையினரும் அரசியல்வாதிகளும் ஏறத்தாழ அதே நிலைபாட்டில்தான் உள்ளனர்" என்று கருத்துத் தெரிவித்தார்.

காவல் துறையினரின் சட்ட விரோதமான, அராஜகப் போக்கைப் பற்றிக் குறிப்பிடும்போது, "தற்போது நிகழ்த்தப்படும் 'தீவிரவாதத்திற்கு எதிரான போர்' எனும் (குஜராத்பாணி) நடவடிக்கைகள், குஜராத்தில் மட்டுமின்றி இதர பல மாநிலங்களிலும் பரவலாக நடைபெறுவதைக் காணமுடிகிறது. எவ்விதக் குற்றப் பதிவோ தொடர்போ குற்றச் செயல்களுக்கான ஆதாரமோ இல்லாத முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமான முறையில் சீருடையற்ற போலீசார் மூலம் விசாரணை என்ற பெயரில் கடத்திச் செல்லப் பட்டு, காவல் நிலையமல்லாத ஒதுக்குப் புறமான மர்ம இடங்களில் வைத்துக் கொடூரமான முறையில் பல நாள்கள் சித்தரவதை செய்யப் படுகின்றனர்" என்று திரு மந்தர் தம் வேதனையை வெளிப் படுத்தினார்.

இது போன்ற ஒருதலைப் பட்சமான அணுகுமுறைகளினால் முஸ்லிம்களின் உள்ளத்தில் பல்வேறு பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள வேற்றுமையுணர்வின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு, இம் மாநாட்டுக் குழு ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளது: "நாடு தழுவிய வகையில் தீவிரவாத வழக்குகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் தலைமையில் ஒரு மேல்மட்ட நீதிமன்ற ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும். மேலும், சந்தேகத்திற்கிடமான அல்லது புனையப்பட்டதாகக் கருதப் படும் நிகழ்வுகள், விசேஷ விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு அவ்விசாரணை ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும். இவ்வாறான ரீதியில் விசாரணை நடைபெற்றால் எவ்வித ஆதாரமும் இல்லாமல் நீண்ட காலமாக விசாரணைக் கைதிகளாகப் பலர் அவதிப்படும் நிலையை தவிர்க்கலாம்" என்று பரிந்துரைத்துள்ளது.

மேலும், "மரண தண்டனை வழங்கப்படத் தக்கக்  குற்றங்களின் ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அழித்த காவல் துறையினர் மீது விசாரணையும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும், 'விசாரணைக் கைது' எனும் பெயரால் பாதிக்கப்பட்டு, நிரபராதிகளாகத் தீர்ப்பளிக்கப் பட்டவர்களுக்கு முறையான நஷ்டஈடு வழங்க வேண்டும். காவல்துறை, அரசாங்க சிவில் நிர்வாகத் துறை, நீதித்துறை போன்றவற்றின் எல்லா நிலைகளிலும் அதிகமான எண்ணிக்கையில் முஸ்லிம்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கிடும் முறையான செயல் திட்டம் அமுலுக்கு வர வேண்டும்" என்றும் மாநாட்டுக் குழுவினரால் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

"இக்குழு நடுவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட புகார்களில், முஸ்லிமல்லாதோர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் வீடு வாடகைக்கு எடுக்கும் விஷயத்தில் காட்டப்படும் வேற்றுமையுணர்வு, காழ்ப்புணர்ச்சி, மேலும் பொதுநல அமைப்புகள் முஸ்லிம்களுக்கெதிராகப் பலவிதத்திலும் காட்டும் பாரபட்சம், அதே அடிப்படையில் பத்திரிகைத் துறையினரின் தவறான-திரிக்கப்பட்ட கருத்துகளை பிரதிபலிக்கும் அணுகுமுறைகள் குறிப்பிடத் தக்கவையாகும்.

பாதுகாப்பு, மேலாண்மை, மற்றும் பாதிக்கப்பட்டோர் புனரமைப்பு அறிக்கை (Prevention, Control and Rehabilitation of Victims Bill) போன்ற சமூக நல அமைப்புகளின் சீர்திருத்தக் கருத்துகளுக்கேற்ப இந்தியக் குற்றவியல் சாசனப் பிரிவு 153Aயின் அடிப்படையில், வெறுப்புணர்வையும் வேற்றுமையயும் சமூகத்தில் பரப்பிடும் அமைப்புகளுக்கு எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்காக மாநில அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும்" என்றும் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இக்குழுவின் தமது கோரிக்கையில், தற்போதுள்ள SC/ST Act எனும் தாழ்த்தப்பட்ட இனத்தோர்/ தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்களுக்கு எதிரான சமூக ஏற்றத் தாழ்வுக் குற்றங்களுக்கான சட்டத்தைப் போல், சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இது போன்ற குற்றங்களைக் கண்டுபிடித்து தண்டித்திட சட்டம் வேண்டும் என்றும் மாநாட்டுக் குழு கோரியுள்ளது.

"பத்து உறுப்பினர் கொண்ட ஒரு செயற்குழுவைப் பிரதமர் நியமித்து தேசிய அளவில் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ள இந்த மதவாதத்திற் கெதிரான தீவிரப் பிரச்சாரச் செயல் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பழைய காலத்தில் நடந்த கல்வியறிவுப் பிரச்சாரம், கோயில்கள் நுழைவுப் புரட்சிப் பிரச்சாரத்தினைப் போல் இதுவும் பரவலாக்கப்பட வேண்டும். மேலும் இம்மாநாட்டுக் குழுவின் மூலம் இந்த தேசிய மாநாட்டில் வெளிச்சத்திற்கு வந்த, சமர்ப்பிக்கப் பட்ட, தற்போது சமூகத்தில் தொடர்ந்து நிலவிவரும் இது போன்ற சமூக அவலங்களினையும் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டி ஆவணப்படுத்த வேண்டும்" என்றும் பரிந்துரையில் கூறப்பட்டது.

அச்சம்-அவநம்பிக்கைஇக்குழு மேலும் தனது பரிந்துரையின் மூலம், "இது போன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட, அநீதியிழைக்கப்பட்ட கணிசமான மக்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்க சிறுபான்மை நலத்திட்டம், பழங்குடியினர் நலத் திட்டம் போன்ற அந்தந்தச் சமுதாய எண்ணிக்கை விகிதாச்சாரப்படியான விசேஷ திட்டங்களின் அடிப்படையில்  திட்டம் அமைக்கக் கோரியுள்ளது. மேலும் பத்துப்பேர் அடங்கும் செயற்குழுவுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் மூலம், வஃக்பு வாரியச் சொத்துக்களின் பராமாரிப்பு மூலம் வரும் வருமானங்கள் சீராகவும் முறையாகவும் ஒருமுகப்படுத்திடும் முதலீடுகள் மூலம் அதிகமான வளங்களுக்கு வழி வகுக்க, உறுதி கொடுக்கப்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்டது.

"இந்தியச் சமூகம் தற்போது உண்மையில் மதசார்பற்றதாக இல்லை" என்பதைச் சுட்டிக்காட்டிய, இக்குழு உறுப்பினர்களில் ஒருவரான மஹேஷ் பட் எனும் சினிமா தயாரிப்பாளர், "இது போன்ற பாரபட்சமான மனப்பான்மைக் கெதிரான ( anti-discrimination law ) சட்டம் இயற்றப்பட வேண்டியது உடனடியான தேவையாகும்" என்று கூறினார்.

மூலம் : தி ஹிண்டு The Hindu

தமிழாக்கம் : இபுனு ஹனீஃப்
 
Jazakallah Khairan to http://www.satyamargam.com/1342
 


அமெரிக்காவில் உள்ள திங்டாங் ஆய்வு மையம் உலகில் வாழும் முஸ்லிம் மக்கள் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தி உள்ளது. 1500 வகையான ஆதாரங்களை மையமாக வைத்து இந்த கணக்கெடுப்பை நடத்தி உள்ளது.
அதில் உலகில் மொத்தம் உள்ள 680 கோடி மக்களில் 157 கோடி பேர் முஸ்லிம்கள் என்று தெரிய வந்துள்ளது. அதாவது உலகில் 23 சதவீத மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். 232 நாடுகளில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடு இந்தோனேசியா. அங்கு 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். 2-வது இடம் பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. அங்கு 17 கோடியே 40 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 16 கோடியே 9 லட்சம் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.
இந்திய மக்கள் தொகையில் 13.4 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
உலகில் வாழும் மொத்த முஸ்லிம்களில் 87-ல் இருந்து 90 சதவீதத்தினர் ஷன்னி பிரிவு முஸ்லிம்கள் 10-ல் இருந்து 13 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள்.
ஷியா முஸ்லிம்களில் 68ல் இருந்து 80 சதவிதத்தினர் இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர்.
மக்கள் வாழும் அனைத்து கண்டங்களிலும் முஸ்லிம்கள் உள்ளனர். உலகில் 60 சதவித முஸ்லிம்கள் ஆசியாவில் வசிக்கின்றனர். மத்திய கிழக்கு நாடு மற்றும் வட ஆப்பிரிக்காவில் 20 சதவீத முஸ்லிம்கள் இருக்கின்றனர்.
முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இல்லாத நாடுகளில் மட்டும் 30 கோடி முஸ்லிம்கள் உள்ளனர்.

இந்தோனேசிய மக்கள் தொகையில் 88.2 சதவீதம் பேரும், பாகிஸ்தான் மக்கள் தொகையில் 96.3 சதவீதம் பேரும் முஸ்லிம்கள். வங்காளதேசம், எகிப்து, நைஜீரியா, ஈரான், துருக்கி, அல்ஜீரியா, மொராக்கோ, ஆகியவை அதிக முஸ்லிம் மக்கள் கொண்ட நாடுகள் ஆகும்.
சிரியாவில் உள்ள முஸ்லிம்களைவிட சீனாவில் அதிக முஸ்லிம்கள் உள்ளனர். ஜோர்டான், லிபியா இரு நாட்டு முஸ்லிம்களை விட ரஷியாவில் அதிக முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

Related Posts with Thumbnails
உதயம்