இதுவரை மூன்று வர்த்தகத் தடைகளை சுமந்துவந்த ஈரானிய மக்கள், கடந்த வாரத்திலிருந்து நான்காவது தடையையும் சுமக்க ஆரம்பித்துள்ளார்கள்.


ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் இந்நான்காவது வர்த்தகத் தடையை உபயோகிக்கப்பட்ட 'டிஸ்ஸூ' பேப்பர் என்று வர்ணித்தாலும் சூல்நிலையை சமாளிக்க இது தக்க நடவடிக்கையல்ல! என்று பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்துள்ளது.


ஐ.நாவின் இக்கூட்டத்தை புறக்கணித்த லெபனான் ஒரு பக்கம் இருக்க, இந்த தடைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சமாதானப் பேச்சுவார்த்தையின் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்று 'பெயருக்கு ஏதோ சொல்ல வேண்டுமே' என்ற அடிப்படையில் பிரான்ஸ் மற்றொரு பக்கம் சூளுரைத்தது.