_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

See full size image

யுரேனியம் செறிவூட்டல் விடயங்களில் ஈரான் தொடர்ந்தும் பிடிவாதமாக உள்ளதால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளைக் கொண்டுவர யோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ஈரான் மீது பொருளாதாரத்தடை விதிப்பதற்கான நேரம் இதுவல்ல என்று சீனா தெரிவித்திருக்கிறது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா.வுக்கான சீனத் தூதுவர் இராஜதந்திர ரீதியிலான தீர்வுகளைக் காண இன்னும் காலம் உள்ளது எனவே ஈரான் மீது தடை கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்றிருக்கிறார்.
இரண்டு மாதகால அவகாசம் கொடுக்கப்பட்டு அந்தக் காலக்கெடு முடிவுற்ற போதும் ஈரான் யுரேனிய செறிவூட்டல் விவகாரம் குறித்து சாதகமான முடிவினை வெளியிட்டிராத நிலையில் ஐ. நா.வின் கூட்டம் சீனாவின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே சீனத் தூதுவர் இந்தக்கருத்தினை வெளியிட்டிருக்கிறார். 
ஈரான் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதனைவிடவும் பேச்சுவார்த்தைகளூடான தீர்வுகளைக் காண்பதே சிறந்தது. பேசுவதற்கான காலம் இன்னும் உள்ளதனால் பொருளாதாரத் தடை விதிப்பதனைத் தவிர்க்கலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.
யுரேனியத்தினை செறிவூட்டிய பின்னர் ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் பரிசோதனைக்கு ஒப்படைக்க வேண்டும் என்பது இப்போதைய வரையறையாக இருக்கிறது. இதற்கான முடிவினை ஈரான் அறிவிப்பதற்காக சர்வதேச நாடுகள் வழங்கிய கால அவகாசம் டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடைந்தது.
அதனால் ஈரான் மீது தடைகளை விதிப்பது குறுpத்து ஆராயப்பட்டு வருகின்றது, இந்த நிலையில் சீனா சர்வதேச நாடுகளின் கடுமையான நடவடிக்கைகளுக்கெதிராக பேசத் தொடங்கியிருக்கிறது. சகல நாடுகளும் இணைந்து விட்டுக்கொடுப்புகளுடன் நடந்து கொண்டால் பேச்சுக்களுக்கான சூழலை உருவாக்கலாம் என்று சீனா நம்புவதே இதற்கான காரணமாகும்.
இதே வேளை உலக நாடுகளின் நிபந்தனைகளை ஏற்று பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கான வழிகள் இன்னும் திறந்துள்ளதாக கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
ஆனாலும் மேற்குலகின் கால அவகாசம் முடிவுற்ற நிலையில் தாம் தம்மிடமுள்ள யுரேனியத்தை பார்வையிட அனுமதிக்கத் தயார் எனவும் அதனை தமது நாட்டு எல்லையில் சோதிக்கலாம் என்று தெரிவித்துள்ளதுடன் இதற்கு உடன்படவில்லையானால் தமது நாடு தனி வழி செல்லும் என்றும் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பை யுரேனியம் தெறிவூட்டல் பற்றி 03ஆம் திகதி கருத்து வெளியிட்ட ஈரான் வெளிநாட்டமைச்சர் விடுத்திருக்கிறார்.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பார்வையிடுவதற்காக ரஷ்யாவுக்கும் பிரான்ஸ்சுக்கும் அவற்றை அனுப்ப வேண்டுமென ஐ.நா. ஈரானுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதை நிராகரித்த ஈரான் தனது நாட்டின் எல்லைகளில் வைத்து இவற்றைப் பார்வையிடலாம். வெளி நாடுகளுக்கு அனுப்பும் நோக்கம் இல்லையென்றும் ஆணித்தரமாக அறிவித்திருந்தது. ஈரானின் இந்த முடிவினை ஆராய்வதற்கு இரண்டு மாதகால அவகாசத்தை மேற்கு நாடுகள் கோரியிருந்தன.
இந்த கால அவகாசம் முடிவுற்ற நிலையிலேயே மேற்குல நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு ஆராய்ந்து வருகின்றன. ஈரானின் கோரிக்கைக்கு முடிவினை அறிவிக்காமலேலே தடைக்ள குறித்து ஆராய்வதில் எந்த வகையான நியாயம் உள்ளது என ஈரான் இப்போது கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கிறது.
வெளிநாடுகளில் வைத்துச் சோதனை செய்வது என்ற ஐ.நா.வின் யுரேனியத்தைப் பார்வையிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலழித்த ஈரான வேண்டுமானால் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை துருக்கிஸ்தானில் வைத்து  பார்வையிட அனுமதிக்க முடியுமென கடந்த மாதம் கூறியது. ஆனால் ஈரானால் தெரிந்தெடுக்கப்பட்ட இடம் பொருத்தமற்றதெனத் தெரிவித்த சர்வதேச அணு முகவர் நிலையம் அதனை நிராகரித்தது.
அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ஈரான் யுரேனியத்தை அதிகளவு செறிவூட்டி அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக சந்தேகிக்கின்றது. ஆனால் தமது நாட்டின் சக்திவளப்பயன்பர்டுகளுக்காகவே தாங்கள் யுரேனியத்தைச் செறிவூட்டுவதாக ஈரான் தெரிவித்துவருகிறது. ஐ.நாவால் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தைக் கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதியே ஈரான் நிராகரித்தது.
இதனால் மேற்கு நாடுகள் கோபமடைந்த போதும் இவற்றை எல்லாம் உதாசீனம் செய்யும் ஈரான் தனது வழியில் விடாப்பிடியாக நடந்துகொண்டபடிNயு இருக்கிறது. அத்துடன் மின்சாரத் தேவைகளுக்காக அமைதி வழியில் யுரேனியம் செறிவூட்டப்படுவதை மேற்குலக நாடுகள் சந்தேகத்துடன் நோக்கத்தேவையில்லை. விஞ்ஞான வளர்ச்சிகள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானவை யென்றும் ஈரான் கூறியது.
இருப்பினும் உலகளவில் பெரும் பிரச்சினையாகவும் முக்கியமான விடயமாகவும் உள்ள அணு ஆயுத விவகாரம் மேற்குலக நாடுகளுக்கு மாத்திரமே தேவையானதாகப் பார்க்கப்படுவதே இங்கு நோக்கப்பட வேண்டும். தமது முடிவினை அறிவிக்க 2 மாதங்கள் கால அவகாசம் கேட்டிருந்த ஐ.நா. இன்னமும் எதனையும் தெரிவித்திருக்கவில்லை.
இந்த நிலையில் ஈரான் தனது வழியில் சென்று யுரேனியத்தை செறிவூட்டும் என்ற நிலைமை உருவானால் பெரும் நெருக்கடிகளை ஈரான் சந்திக்க நேரும் என்று மேற்குலகுகள் எச்சரித்தும் உள்ளன. சீனா மற்றுமு; ரஷ்யா போன்ற நாடுகளுடன் அவுஸ்திரேலியவும் ஈரானுக்குச் சாதகமான முடிவுகளுடன் இருக்கின்றன.
இது ஒருவகைளில் ஈரானுக்குச் சாதகமானதே. ஆனாலும் அமெரிக்காவின் முடிவுகளே பெரியளவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் ஈரான் எதிர்காலத்தில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிஏற்படலாம் என்றும் கவலை தெரிவிக்கப்படுகிறது. விடாப்பிடியாக இருக்கும் ஈரான் தமது அணுச் செறிவாக்கல் ஆலைகளைப் பார்வையிடுவதற்கு சர்வதேச ஆணு ஆயுத முகவரமைப்பிற்கு அனுமதி வழங்கியிருந்தது.
அதன் பின்னர் ஈரானில் செறிவூட்டப்படும் யுரேனியத்தைப் பரிசோதிக்க வெளநாடுகளான பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என மேற்குலகால் கோரப்பட்டது. வெளி நாடு என்றில் வைத்து சோதனை செய்வதற்கும் தமது நாட்டு எல்லையில் சோதிப்பதறகும் என்ன வித்தியாசம் இருக்கப்Nபுhகிறது என்பதே ஈரானின் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
ஈரானின் நிலைப்பாட்டிலால பிடிவாதமும் மேற்குலகு மற்றும் ஐ. நா. ஆகியவற்றின் நெருக்குவாரமும் Nமுhதுப்படும் போது எதற்கு வெற்றி கிடைக்கும் எ;னபதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்