_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...
Showing posts with label ஏனையவை. Show all posts
Showing posts with label ஏனையவை. Show all posts
அவதூறு பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் இஸ்லாத்தின் நற்செய்தி அடையாளம் காணப்படும்: யுவான் ரிட்லி


பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை மேற்க்கொண்டாலும் இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின் நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் ஒரு நாள் வந்தே தீரும் என பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.

கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.


World’s renowned Islamic scholar Dr. Zakir Abdul –Karim Naik who is based in Mumbai India is to pay a visit to Sri Lanka on the invitation of ‘Association of Muslim Youth of Sailan (Jammiyath ush Shabab)’ on the 23rd of May 2010. He is to address the gathering in the Sugathadasa out door stadium on the same day at 06.30pm on the theme “Peace through religion”.

DR. ZAKI R NAIK
A Brief Introduction

A medical doctor by professional training, Dr. Zakir Naik is renowned as a dynamic international orator on Islam and Comparative Religion. Dr. Zakir Naik is the president of Islamic Research Foundation, Mumbai. Dr. Zakir clarifies Islamic viewpoints and clears misconceptions about Islam, using the Qur’an, authentic Hadith and other religious Scriptures as a basis, in conjunction with reason, logic and scientific facts. He is 44 years old.

He is popular for his critical analysis and convincing answers to challenging questions posed by audiences after his public talks. In the last 13 years Dr. Zakir Naik has delivered more than 1300 public talks in the U.S.A., Canada, U.K., Italy, Saudi Arabia, U.A.E., Kuwait, Qatar, Bahrain, Oman, Egypt, Australia, New Zealand, South Africa, Botswana, Malaysia, Singapore, Hong Kong, Thailand, Guyana (South America), Trinidad, and many other countries, in addition to numerous public talks in India.

He has successfully participated in several symposia and dialogues with prominent personalities of other faiths. His public dialogue with Dr. William Campbell (of USA) on the topic “The Qur’an and the Bible in the light of Science” held in Chicago, U.S.A., in April, 2000 was a resounding success.

His Interfaith Dialogue with prominent Hindu Guru Sri Sri Ravi Shankar on the topic ‘The Concept of God in Hinduism and Islam in the light of Sacred Scriptures’ held at Palace Grounds, Bangalore, on 21st Jan. 2006, was highly appreciated by people of both the faiths.

In the issue dated 22nd Feb. 2009 of the Indian Express list of the “100 Most Powerful Indians in 2009” amongst the billion plus population of India, Dr. Zakir Naik was ranked No. 82. In the special list of the “Top 10 Spiritual Gurus of India” Dr. Zakir Naik was ranked No. 3, after Baba Ramdev and Sri Sri Ravi Shankar, being the only Muslim in the list.

The Sunday EXPRESS, dated 31st January 2010, published The Indian Express list of the “100 MOST POWERFUL INDIANS IN 2010” amongst the Billion Plus population of India, with 36 names from the “2009 List” deleted, wherein:-

1) Dr. ZAKIR NAIK was ranked No. 89.

2) From amongst the eight Muslims in this list of 100, Dr. ZAKIR NAIK is the ONLY MUSLIM ISLAMIC PREACHER / ORATOR. The others being a Political Secretary, a Politician, a Government Official, a Business Magnate and 3 Film Personalities.

3) Amongst the “Spiritual/Religious Gurus” though he was the only Muslim and No. 3 in 2009 list, this year (2010) Dr. Zakir Naik TOPPED the List of Spiritual / Religious Gurus at No. 89, for preaching of Islam, followed by Jaggi Vasudev (at No. 94, for his trees planting work), Baba Ramdev (at No. 99, for his Yoga work) and Sri Sri Ravi Shankar (at No. 100, for his Sudarshan Kriya breathing technique work) respectively.

4) Dr. Zakir Naik was recently also selected and listed in “The 500 Most Influential Muslims in the World” (without rankings) published by the George Washington University, USA. .

Sheikh Ahmed Deedat, the world famous orator on Islam and Comparative Religion, who had called Dr. Zakir “Deedat Plus” in 1994, presented a plaque in May 2000 with the engraving “Awarded to Dr. Zakir Abdul-Karim Naik for his achievement in the field of Da’wah and the study of Comparative Religion. Son what you have done in 4 years had taken me 40 years to accomplish, Alhamdulillah”.

Dr. Zakir Naik appears regularly on many international TV channels in more than 200 countries of the world. He is regularly invited for TV and Radio interviews. More than a hundred of his talks, dialogues, debates and symposia are available on DVDs and VCDs. He has authored many books on Islam and Comparative Religion.


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் இலங்கைக்கான விஜயம்

இந்தியாவின் மும்பை நகரை தளமாகக் கொண்ட உலகப்புகழ் பெற்ற இஸ்லாழிய அறிஞரான டாக்டர் ஜாகிர் அப்துல் கரீம் நாயக் எதிர்வரும் மே 23ஆம் திகதி இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றியத்தின் (ஜாமியதுஸ் ஸபாப்) அழைப்பின் பேரின் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். “மார்க்கத்தினூடாக அமைதி” எனும் கருப்பொருளில் அதே தினம் பி.ப 6:30 மணிக்கு சுகததாச வெளியரங்கில் பார்வையாளர்களுக்கு உரையாற்றவுள்ளார்.

டாக்டர் ஜாகிர் நாயக் (சுருக்க அறிமுகம்)

தொழில் பயிற்சி ரீதியாக மருத்துவரான டாக்டர் ஜாகிர் நாயக், இஸ்லாம் மற்றும் ஒப்பீட்டு சமயம் என்பவற்றில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆற்றல்மிக்க பேச்சாளராவார். டாக்டர் ஜாகிர் நாயக் மும்பை இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராவார். 44 வயதான டாக்டர் ஜாகிர், நியாயம், தர்க்கம் மற்றும் அறிவியல் உண்மைகள் என்பவற்றோடு இணைத்து, அல்-குர்ஆன், அல்-ஹதிஸ் மற்றும் ஏனைய சமய வேதநூற்களை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாம் பற்றிய தவறான அபிப்பிராயங்களை போக்குவதோடு இஸ்லாத்தின் கருத்தை தொளிவுபடுத்துகிறார்.

டாக்டர் ஜாகிர் நாயக் தனது திறனாய்வுமிக்க பகுப்பாய்வு மற்றும் பகிரங்க உரைகளின் பின்னர் பார்வையாளர்களால் முன்வைக்கப்படும் சவால்மிக்க கேள்விகளுக்கு தான் வழங்கும் திருப்திகரமான பதில்கள் என்பவற்றுக்கு பிரபல்யம் பெற்றவராவார். கடந்த 13 வருட காலத்தில் டாக்டர் ஜாகிர் நாயக் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இத்தாலி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராட்சியம், குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமான், எகப்து, அவுத்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, பொட்ஸ்வானா, மலேஸியா, சிங்கப்பூர், ஹொங் கொங், தாய்லாந்து, கயானா (தென் அமெரிக்கா), திரினிதாத் மற்றும் மேலும் பல நாடுகளில் 1300ற்கு மேற்பட்ட பகிரங்க உரைகளை ஆற்றியுள்ளார். இதைவிட இந்தியாவில் எண்ணற்ற பகிரங்க உரைகளை ஆற்றியுள்ளார்.

ஏனைய சமயங்களின் புகழ்பெற்ற பிரபலங்களோடு அறிஞர் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் பலவற்றிலும் இவர் வெற்றிகரமாக பங்கேற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் வில்லியம் கெம்லோடு 2006 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி அமெரிக்காவின் சிகாக்கோ நகரில் “விஞ்ஞான ஒளியில் குர்ஆனும் பைபிலும்” எனும் தலைப்பில் இடம்பெற்ற இவரின் பகிரங்க கலந்துரையாடல் எதிரைலிக்கும் வெற்றியாக அமைந்தது.


2006ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி பங்க@ர் பலஸ் மைதானத்தல் “புனித வேதநூட்களின் ஒளியில் இந்துமதத்திலும் இஸ்லாத்திலும் கடவுள் கொள்கை” எனும் தலைப்பில் பிரபல இந்து மத குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரோடு இடம்பெற்ற இவரின் சமய நம்பிக்கைகளுக்கிடையிலான கலந்துரையாடல் இரண்டு சமயத்தாராலும் பெருதும் புகழ்ந்துரைக்கப்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் 2009 பெப்ரவரி 22ஆம் திகதி பதிப்பில் வெளியான பில்லியனுக்கும் அதிகமான இந்கிய மக்கள் தொகையில் “ 2009ஆம் ஆண்டின் மிகவும் ஆற்றல்மிக்க இந்தியர்கள்” எனும் பட்டியலில் டாக்டர் ஜாகிர் நாயக் 82வது இடத்தை பெற்றுக்கொண்டார். அத்தோடு “இந்தியாவின் 10 உயர் ஆன்மீக குருக்கள்” எனும் பிரத்தியேக பட்டியலில் பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஆகியோருக்கு ஆடுத்த படியாக பட்டியலின் ஒரே ஒரு முஸ்லிமாக மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் பில்லியனுக்கும் அதிகமான இந்கிய மக்கள் தொகையில் “2010ஆம் ஆண்டின் மிகவும் ஆற்றல்மிக்க இந்தியர்கள்” எனும் பட்டியலை 2009ஆம் ஆண்டு பட்டியலில் இருந்து 36 பெர்கள் நீக்கப்பட்டு 2010 ஜனவரி 31ஆம் திகதி சன்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை பிரசுரித்த போது, அதில்:-

1) டாக்டர் ஜாகிர் நாயக் 89ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

2) 100 பேரைக்கொண்ட இப்பட்டியலில் 8 முஸ்லிம்களில் இருந்து டாக்டர் ஜாகிர் நாயக் ஒரே ஒரு முஸ்லிம் இஸ்லாமிய பேச்சாளர்ஃபோதகராக விளங்கினார். மற்றையவர்;களில் ஒருவர் அரசியல்வாதியாகவும், ஒருவர் அரசியல் செயலாளராகவும், ஒருவர் அரசாங்க அதிகாரியாகவும், ஒருவர் செல்வாக்குமிக்க வர்த்தகராகம், மூவர் திரைப்பட பிரபலங்களாகவும் காணப்பட்டனர்.


3) “ஆன்மீக/சமய குருக்கள்” மத்தியில் இவர் மாத்திரமே முஸ்லிமாக இருந்து 2009இல் மூன்றாவது இடத்தை பொற்றுக்கொண்ட போதிலும், இவ்வருடம் (2010) இப்பட்டியலில் இஸ்லாத்தை போதிப்பதற்காக 89ஆவது இடத்தைப்பெற்று முறையே ஜக்கி வாசுதேவ் (தனது மர நடுகை பணிக்காக, 94ஆவது இடம்), பாபா ராம்தேவ் (தனது யோகாசனப் பணிக்காக, 99ஆவது இடம்) மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் (தனது ‘சுதர்சன் கிரிய’ சுவாசிப்பு பொறிமுறைப் பணிக்காக, 100ஆவது இடம்) ஆகியோருக்கு முன்னணியில் திகழ்கிறார்.

4) அண்மையில் அமைரிக்காவின் ஜேர்ஜ் வெஷிங்டன் பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்ட “உலகில் மிகவும்; செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்கள்” எனும் பட்டியலிலும் (இடக்கணிப்பீடு இன்றி) டாக்டர் ஜாகிர் நாயக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


இஸ்லாம் மற்றும் ஒப்பீட்டு சமயத்தில் உலகப் புகழ் பெற்ற பேச்சாளரான ஷெய்க் அஹமத் தீதாத் 1994இல் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்;களை “தீதாத்திற்கு மேலதிகம்(Deedat plus)” என அழைத்து, 2000ஆம் ஆண்டு “தஃவா துறை மற்றும் ஒப்பீட்டு சமய கற்கையில் தான் அடைந்த சாதனை என்பவற்றுக்கான அன்பளிக்கப்பட்டது. மகனே! 4 வருடங்களில் நீ சாதித்தவற்றை நிறைவேற்றி முடிப்பதற்கு எனக்கு 40 வருடங்கள் கழிந்தன. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.” எனப் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னமொன்றை அவருக்கு வழங்கினார்.

டாக்டர் ஜாகிர் நாயக் உலகின் 200க்கு மேற்பட்ட நாடுகளில் உள்ள பல சர்வதேச தொலைக்காட்சி அலைவரிசைகளில் முறையாக தோற்றமளிப்பவராவார். இவர் தொலைக்காடசி மற்றும் வானொலி பேட்டிகளுக்கு தொடராக அழைக்கப்படுகின்றார். இவருடைய நூற்றுக்கும் மேற்பட்ட உரைகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள், அறிஞர் விவாதங்கள் என்பன கானொளி குறுந்தகடு (VCD) மற்றும் டிஜிடல் குறுந்தகடுகளிலும் (DVD) கிடைக்கத்தக்கதாக உள்ளன.

The translation: by S.H Mohamed Rizvy

இன்று கேமரா என்றதும் நம் நினைவிற்கு வருவது கைத்தொலைபேசிதான். ஆனால் நாம் கொஞ்சம் கூட சந்தேகம் கொள்ளாத, நாம் தினமும் பயன்படுத்தி வருகின்ற பொருட்களான பேனா, சாவிகொத்து, மூக்கு கண்ணாடி, கைக்கடிகாரம், சட்டை புத்தான், சுவரில் இருக்கும் ஆணி, மின்சார பிளக், chewing gum என எதிலெல்லாமோ இன்று கேமரா வந்துவிட்டது. இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்றாலும் கூட இதனால் நிறைய பாதிப்புகளும் உண்டு. எதுக்கும் கள்ளக்காதல், லஞ்சம், ஊழல்பேர்வளிகள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. ஆக நம்மை யார், எங்கு கண்காணிக்கிறார்கள் அல்லது படம் பிடிக்கிறார்கள், என்பது நம்மால் கண்டுபிடிக்க முடியாதபடி நிலைமையுள்ளது.

கீழே உள்ள படங்களை பாருங்கள். சாதாரணமாக அணியும் கைக்கடிகாரத்தில் சக்தியுள்ள காமெரா உள்ளது.

அடுத்ததாக பேனா, நாம் தினமும் பயன்படுத்தக்கூடியது. இந்த வகை கேமரா கையில் இருந்தால் யாராவது சந்தேகப்படுவார்களா?

அடுத்தது நாம் அணியும் கண்ணாடி. இதை பார்த்தால் பாஷன் கண்ணாடி போல தோன்றும். ஆனால் அதனுள் இருப்பது சக்தி வாய்ந்த கேமரா.

கீழேயுள்ளது பார்ப்பதற்கு கார் சாவிகொத்து போல தெரியும். அதனுள்ளும் அதி நவீன கேமரா இருக்கிறது. காரில் பயணம் செயும்போதும்கூட கவனம் தேவை.

இந்த கேமரா திருகு ஆணியின் தோற்றம் உடையது. எதோ ஆணி என நினைப்போம். ஆனால் இதுவும் நம்மை படம் பிடித்துக்கொண்டு இருக்கும்.

இது நம் சட்டையின் புத்தானை போலவே இருக்கும். சட்டைபையில் போட்டிருக்கும் கருவிக்கும் இதற்கும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். இதுவும் ஒரு சக்தி வாய்ந்த கமெராதான்.

இதைப்பாருங்கள் சாதாரண மின்சார பிளக் போலவே இருக்கும். அதனுள்ளும் கேமரா.

இப்படி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காமெராக்களை கண்டு பிடிக்கும் கருவியும் உள்ளது. ஆனால், அதன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு செயல்படும் காமெராக்கள் நிறைய உண்டு. நாம் இனி எங்கேயும் ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை!எனவே கவனமாக இருக்கவேண்டியது அவசியம். இது காலத்தின் கட்டாயம்.லண்டனில் போலீஸ்காரர்கள் மற்றும் கார் பார்க் செய்வதை கண்காணிப்பவர்கள், தங்கள் தொப்பியில் நவீன சிறிய காமெராவை பொருத்தியுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிட தக்கது.

Source: http://www.tamilcatholican.com/2009/07/blog-post_07.html

உலகில் பல நாடுகளிடம் உள்ள ஆயுதங்களை பார்க்கிலும் அதிக ஏவுகணை, ஏறிகணைகளை ஹஸ்புல்லாஹ் அமைப்பினர் தமது வசம் வைத்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். சிரியாவும் ஈரானும் அதிக அளவிலான ஆயுதங்களை லெபனானிய இஸ்லாமிய அமைப்பான ஹஸ்புல்லாஹ்விற்கு வழங்குவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபர்ட் கேட்ஸ் குற்றச்சாட்டியுள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகள் பிராந்தியத்தின் அனைவரையும் பாதிக்கும் என ரொபர்ட் கேட்ஸ் இஸ்ரேலிய தலைவர்களுடன் கலந்துரையாடும்போது தெரிவித்துள்ளார்.ஹஸ்புல்லாஹ் அமைப்பினருக்கு சிரியா ஏவுகிற ஏறிகணைகளை வழங்குவதாக ரொபர்ட் கேட்ஸ் குறிப்பிடாதபோதிலும் இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது.

2006 ஆம் ஆண்டு ஹஸ்புல்லாஹ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 34 நாட்கள் இடம்பெற்ற மோதலில் ஆயிரத்து 200 இற்கும் அதிகமான லெபனானியர்கள் பலியானதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்களாவர் இஸ்ரேலைச் சேர்ந்த 560 பேர் இந்த மோதலில் கொல்லப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிரியாவும் ஈரானும் ஹஸ்புல்லாஹ் அமைப்பினருக்கு அதிக எறிகணைகளை வழங்குவதாகவும், அவர்களிடம் இந்த ஆயுதங்கள் அதிக அளவில் இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஏவூத் பராக்கை வொஷிங்டனில் சந்தித்து கலந்துரையாடிய போதே ரொபர்ட் கேட்ஸ் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார். 

உலகில் பல அரசாங்கத்திடம் உள்ளவற்றை விட அதிக அளவிலான ஆயுதங்கள் ஹஸ்புல்லாஹ் அமைப்பினரிடம் இருக்கின்றனது பாரிய அச்சுறுத்தல் எனவும் எனவே அதனை மிக கவனமாக அவதானித்து வருவதாக ரொபர்ட் கேட்ஸ் பென்டகனின் செய்தியாளர்களிடம் உரையாடியபோது குறிப்பிட்டுள்ளார்.



சீனாவின் பெருஞ்சுவர் பழுதடைந்துள்ள நிலையில் அதனை புனரமைக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவர் கிறிஸ்துவிற்கு முன்னர் 770-476ஆம் ஆண்டுகளில் 8851 கிலோமீற்றர் நீளத்திற்கு குய் மன்னர் வம்சத்தினரால் நிர்மாணிக்கப்பட்டது.யுயெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பாரம்பாரிய சின்னத்தை பார்வையிடுவதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் சீனாவிற்கு வருகை தருவது யாரும் அறிந்ததே.பாதுகாப்பு அரணாக செயற்பட்ட இந்த சுவர் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சேதமாகியுள்ள இடங்கள் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்தே இந்த சுவரை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சீன ஷாண்டாங் மாகாணத்தின் 620 கிலோமீற்றர் தொலைவிற்கு ஜினான் நகரிலிருந்து குயிங்டோ வரையான பெருஞ்சுவர் பகுதி சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இதற்கமையவே விரைவில் சீன பெருஞ்சுவர் புனர் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




கடந்த நூற்றாண்டில்(1900-1999) புகைத்தல் நளினமானதாக நாகரிகத்தின் வெளிப்பாடாக சிலருக்கு ஒரு ஆண் தன்மையாக கூட தோன்றியது. திரைப்படம் விளம்பரங்கள், புதுமை, கவர்ச்சி, புகைவிடும் அழகு எல்லாமே கவர்ந்திழுக்க புகைக்கதொடங்கியவர்கள் தொட்டால் தொடருமாக விட முடியாது தவித்தார்கள்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிகரட் கம்பனிகளாகிய பெரிய பணத்திமிலங்களினால் மூடிவைக்கப்பட்ட பல உண்மைகள் சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட்டன.அதில் முக்கியமானது புகைத்தல் அடிமையாக்கும் என்பது. சுவாச நோய்களை உருவாக்கும் என்பது நீண்ட காலமாக தெரிந்திருந்தாலும் அதன் மற்றைய தாக்கங்கள் பற்றிய தெளிவுவரவும் அதை சட்ட ரீதியாக்கவும் அண்மையில்தான் முடிந்திருகிறது. இதில் முக்கியாமானது புகைபிடிப்பது புகைபவரை காட்டிலும் சூழ இருப்பவரை கடுமையாக பாதிக்கும் என்பதுதான். அதனால் பொது இடத்தில் புகைத்தல் ஒரு சமூகவிரோதச் செயலாகிவிட்டது. அனேக நாடுகளில் அது சட்டவிரோதம் ஆக்கப்பட்டுவிட்டது.

ஒரு புள்ளிவிபரம் பிரித்தானியாவில் 120000 பேர் புகைபிடித்ததின் காரணமாக ஆண்மைக் குறைப்பாட்டுக்கு ஆளாகி உள்ளனர். இளவயதில் புகைக்கத்தொடங்கி நடுத்தர வயது வரும்போது ஆண்மைகுறைவால் ஆணுறுப்பு விறைக்காமை வந்துவிடுகிறது என்கிறது ஆய்வு.


.


உலகிலேயே மிகப்பெரிய அதிநவீன சொகுசு கப்பல் டைட்டானிக். 1517 பேருடன் பயணம் செய்த இக்கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் மரணம் அடைந்தனர். 


இக்கப்பலில் பயணம் செய்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடித தொடர்பு வைத்திருந்தனர். அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கடிதம் லண்டனில் ரூ. 38 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த கடிதத்தை கப்பலில் முதல் வகுப்பில் பயணம் செய்த அடோல்ப் சபீல்டு என்பவர் தனது மனைவிக்கு அன்புடன் எழுதியிருந்தார். டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த அனுபவம் குறித்து அதில் எழுதப்பட்டிருந்தது. கப்பல் மூழ்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பு இக்கடிதம் எழுதப்பட்டது. லண்டனில் உள்ள ஒரு அருங்காட்சியகம் இக்கடிதத்தை ஏலத்தில் எடுத்தது. ஏலத்தில் எடுத்த அருங்காட்சியகத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.


 

அமெரிக்கா உலகில் மிக முன்னேறிய ஜனநாயக நாடு என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஹைத்தியின் நிலநடுக்கத்தில் அந்த நம்பிக்கை நொறுங்கி விட்டது. நிலநடுக்கத்திற்கு மறு நாள், "நிவாரணப் பணிக்கென 2000 மரைன் துருப்புகளை இன்னும் சில நாட்களில் அனுப்புவதாக" செய்தி தெரிவித்தது. "இன்னும் சில தினங்களில்?" திருவாளர் ஒபாமா அவர்களே, அமெரிக்காவில் இருந்து ரொம்ம்ம்ப தூரத்தில் இருக்கும் ஐஸ்லாந்து ஜனாதிபதி ஒலாபூர் கிராம்சொன் உங்களை முந்திக் கொண்டு உதவினார். உங்கள் அறிவிப்பை உலகத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதற்கு முன்னரே, 4000 மைல் தூரத்தில் உள்ள ஐஸ்லாந்தில் இருந்து உதவி வந்து சேர்ந்து விட்டிருந்தது. வெறும் 700 மைல் தூரத்தில் இருக்கும் அமெரிக்காவில் இருந்து உதவி கிடைப்பதற்கு "இன்னும் சில தினங்கள்" காத்திருக்க வேண்டும். 8000 மைல் தொலைவில் உள்ள சீனா 48 மணி நேரத்திற்குள் மோப்பம் பிடிக்கும் நாய்களையும், பிற உதவிப் பொருட்களையும் அனுப்பி வைத்தது. ஹைத்திக்கு மிக அருகாமையில் மியாமியிலும், புவேட்டோரீகொவிலும் (700 மைல்) அமெரிக்க தளங்கள் உள்ளன. அங்கிருந்து மரைன் துருப்புகளின் உதவியைப் பெறுவதற்கு நாம் இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும்.

ஒபாமா அவர்களே! ஹைத்தியின் மீட்பு பணிக்கும், நிவாரணத்துக்கும் எத்தனையோ மில்லியன் டாலர்கள் ஒதுக்கியிருப்பதாக அறிவித்தீர்கள். உண்மையிலேயே மிகப் பெரிய தொகை தான். ஆனால் அந்த தொகை கூட, நீங்கள் ஈராக்கில் ஒரு மாதத்திற்கு செலவிடும் தொகையின் சிறு பகுதி என அறியும் போது மனதை நெருடுகின்றது. யுத்தம் என்று வந்துவிட்டால், காற்றிலும் விரைவாக அமெரிக்க படையினர் அனுப்பப்படுவார்கள் என்பதை அறிந்திருக்கிறேன். ஹைத்திக்கு நீங்கள் அனுப்பிய உதவி மூன்று தினங்களில் வந்து சேர்ந்தது. அது ஒரு விமானம் தாங்கிக் கப்பல். (USS Carl Vinson) அந்தக் கப்பலில் எந்த வித அவசர கால உதவிப் பொருளையும் காணாதது ஏமாற்றமளித்தது. அதற்கு பதிலாக 19 ஹெலிகாப்டர்களும் ஏவுகணைகளும் இருந்தன.

ஒருவேளை நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்ப மறந்து விட்டீர்களா, ஒபாமா? கவலை வேண்டாம். ஏற்கனவே சர்வதேச மீட்புக் குழுக்கள் (அமெரிக்கர்களுக்கு முன்னர்)களத்தில் இறங்கி விட்டன. பத்து மெட்ரிக் தொன் உணவுப்பொருட்கள், குடிநீர், கூடாரங்கள், பிற மீட்பு உபகரணங்கள் எல்லாம் சின்னச்சிறு நாடான ஐஸ்லாந்தில் இருந்து வந்து சேர்ந்து விட்டன. உடனடியாக எமக்கு உதவிய ஐஸ்லாந்து, கடந்த வருட நிதி நெருக்கடியில் சிக்கி பொருளாதாரம் திவாலாகும் நிலையில் இருந்தது. "அமெரிக்கா உடனடியாக உதவி அனுப்பாததற்கு காரணம், ஹைத்தியில் நிலவிய பாதுகாப்புக் குறைபாடு..." உங்களது பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். ஆமாம், ஏற்கனவே பஞ்சத்தில் அடிபட்ட ஹைத்தி ஏழைகள் நீங்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களை கொள்ளயிட்டால் என்ன செய்வது? அதைத் தடுக்க ஆயுதந் தரித்த Blackwater கூலிப்படையினரை அனுப்பியிருக்கிறார். சபாஷ்! நாம் கேட்டது drinking water , கிடைத்ததோ Blak water.

திரு. ஒபாமா அவர்களே ஹைத்தியின் அவலத்திற்கு நிலநடுக்கம் மட்டும் காரணமல்ல. எல்லாவற்றுக்கும் இயற்கை அன்னையை குறை கூறாதீர்கள். அமெரிக்க ஆசியுடன் ஹைத்தியை மூன்று சகாப்தங்களாக ஆட்சி செய்த கொடுங்கோலன் டுவாலியர் காலத்தில் தான் பெருமளவு கட்டடங்கள் கட்டப்பட்டன. எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுப் போட்ட சர்வாதிகாரியின் கீழ், ஊழல் செய்து கட்டிய தரங்குறைந்த கட்டிடங்கள் எவ்வாறு பூகம்பத்தை எதிர்த்து நிற்கும்? சர்வதேச நிதி உதவியில் என்பது சதவீதம் டுவாலியர் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்துகளாக மாறின. மிகுதியை ஐ.எம்.எப்.பின் சலுகைக் குறைப்பு திட்டம் செய்து முடித்தது. ஐ.எம்.எப். நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கட்டப்பட்ட சேரி வீடுகள் இடிந்து விழுந்து லட்சக்கணக்கான மக்களை பலி எடுத்துள்ளன. சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஹைத்தி முழுவதற்கும் இரண்டே இரண்டு தீயணைப்பு நிலையங்கள் மட்டுமே இருந்தன. குடிநீர் விநியோகமோ, வைத்தியசாலைகளோ இன்றி அவதிப்பட்ட மக்களின் துன்பத்தை நிலநடுக்கம் முடித்து வைத்தது.

தசாப்த கால சர்வாதிகார ஆட்சியின் முடிவில் வந்த 1991 பொதுத் தேர்தலில் மக்கள் அரிஸ்டீட்டை தெரிவு செய்தார்கள். அவர் ஐ.எம்.எப். நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, அமெரிக்க அரசு படை அனுப்பி ஆட்சியைக் கவிழ்த்தது. (அப்போது மட்டும் என்ன விரைவாக படைகள் வந்தன?) 2004 ம் ஆண்டு, அரிஸ்டீட்டை மக்கள் மீண்டும் ஜனாதிபதியாக்கினார்கள். இம்முறை உங்கள் படைகள் தலையிட்டு அவரை கடத்திச் சென்று விட்டன. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ், இராணுவ நடவடிக்கையை நியாயப் படுத்தி என்னனவோ எல்லாம் பேசினார். எமது நாட்டின் ஜனநாயகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்த அமெரிக்கர்களின் கடமை உணர்ச்சி எம்மை புல்லரிக்க வைத்தது.

இராணுவத் தலையீடு என்று வந்து விட்டால் மட்டும் உங்கள் படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்திறங்கி விட்டன. அப்போது மட்டும் உங்கள் அரசின் விரைவான நடவடிக்கை எம்மை வியப்பில் ஆழ்த்தின. ஆனால் இப்போது உங்கள் பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்: "தவிர்க்கவியலாத காரணங்களால் மீட்புப் பணிகள் தாமதமடைகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் கடற்படையின் நடமாடும் மருத்துவமனை அனுப்பி வைக்கப்படும்." கடவுளே! அமெரிக்க மருத்துகள் வரும் வரையில் ஹைத்திய மக்கள் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்க வேண்டும்.

ஒபாமா அவர்களே! ஹைத்தி உலகில் மிகவும் வறிய நாடு என்று உங்கள் ஊடகங்கள் எம் மேல் அனுதாபப்படுகின்றன. அவர்களின் அனுதாபத்திற்கு நன்றி கூறும் தருணத்தில், அறியாமையையும் இடித்துக் கூற வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் எமது தாயகமான ஹைத்தி செல்வந்த நாடாக இருந்தது. 18 ம் நூற்றாண்டு பிரெஞ்சு சிந்தனாவாதி வோல்டேயர் ஹைத்தியின் செல்வம் "கறுப்புத் தங்கம்" என அழைக்கப்படும் அடிமைகள் தான் என்றார்.

அந்தோ பரிதாபம்! ஹைத்தியின் கறுப்பின அடிமைகள் பிரெஞ்சு காலனிய எஜமானுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். அடிமைகளின் புரட்சி வென்றது. நவீன உலகின் முதலாவது அடிமைகளின் குடியரசு உருவானது. ஏதோ காரணத்தால், ஹைத்தியை விட்டோடிய பிரெஞ்சுப் படைகள் திரும்பி வரவேயில்லை. ஆனால் அதற்காக அவர்கள் ஹைத்தியின் சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தமா? இல்லை. இல்லவே இல்லை. 1825 முதல் 1947 வரை, ஹைத்தி பிரான்சுக்கு நஷ்டஈடு கட்டுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டது. எதற்காக அந்த நஷ்டஈடு? அடிமைகள் கிளர்ச்சி செய்து விடுதலை ஆனதால், எஜமானர்களுக்கு பெருந்தொகை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். அந்த நஷ்டத்தை அடிமைகள் சந்ததி சந்ததியாக அடைத்து வர வேண்டுமாம்.

மனிதர்களை தனித்தனியாக அடிமைகளாக வைத்திருப்பதை விட, முழு தேசத்தையுமே அடிமையாக வைத்திருப்பது லாபகரமானது. இதைத் தான் பிரான்ஸின் "நவ-காலனித்துவம்" என்கிறார்களா? எமது உழைப்பில் பிரெஞ்சு மக்கள் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்களா? அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய அரசியல் அவ்வளவுதான். ஒரு வேளை எமது மக்களின் வறுமைக்கான காரணியை, 18ம் நூற்றாண்டு காலனிய சரித்திரத்தில் தேட வேண்டுமா?


 

அமெரிக்கா உலகில் மிக முன்னேறிய ஜனநாயக நாடு என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஹைத்தியின் நிலநடுக்கத்தில் அந்த நம்பிக்கை நொறுங்கி விட்டது. நிலநடுக்கத்திற்கு மறு நாள், "நிவாரணப் பணிக்கென 2000 மரைன் துருப்புகளை இன்னும் சில நாட்களில் அனுப்புவதாக" செய்தி தெரிவித்தது. "இன்னும் சில தினங்களில்?" திருவாளர் ஒபாமா அவர்களே, அமெரிக்காவில் இருந்து ரொம்ம்ம்ப தூரத்தில் இருக்கும் ஐஸ்லாந்து ஜனாதிபதி ஒலாபூர் கிராம்சொன் உங்களை முந்திக் கொண்டு உதவினார். உங்கள் அறிவிப்பை உலகத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதற்கு முன்னரே, 4000 மைல் தூரத்தில் உள்ள ஐஸ்லாந்தில் இருந்து உதவி வந்து சேர்ந்து விட்டிருந்தது. வெறும் 700 மைல் தூரத்தில் இருக்கும் அமெரிக்காவில் இருந்து உதவி கிடைப்பதற்கு "இன்னும் சில தினங்கள்" காத்திருக்க வேண்டும். 8000 மைல் தொலைவில் உள்ள சீனா 48 மணி நேரத்திற்குள் மோப்பம் பிடிக்கும் நாய்களையும், பிற உதவிப் பொருட்களையும் அனுப்பி வைத்தது. ஹைத்திக்கு மிக அருகாமையில் மியாமியிலும், புவேட்டோரீகொவிலும் (700 மைல்) அமெரிக்க தளங்கள் உள்ளன. அங்கிருந்து மரைன் துருப்புகளின் உதவியைப் பெறுவதற்கு நாம் இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும்.

ஒபாமா அவர்களே! ஹைத்தியின் மீட்பு பணிக்கும், நிவாரணத்துக்கும் எத்தனையோ மில்லியன் டாலர்கள் ஒதுக்கியிருப்பதாக அறிவித்தீர்கள். உண்மையிலேயே மிகப் பெரிய தொகை தான். ஆனால் அந்த தொகை கூட, நீங்கள் ஈராக்கில் ஒரு மாதத்திற்கு செலவிடும் தொகையின் சிறு பகுதி என அறியும் போது மனதை நெருடுகின்றது. யுத்தம் என்று வந்துவிட்டால், காற்றிலும் விரைவாக அமெரிக்க படையினர் அனுப்பப்படுவார்கள் என்பதை அறிந்திருக்கிறேன். ஹைத்திக்கு நீங்கள் அனுப்பிய உதவி மூன்று தினங்களில் வந்து சேர்ந்தது. அது ஒரு விமானம் தாங்கிக் கப்பல். (USS Carl Vinson) அந்தக் கப்பலில் எந்த வித அவசர கால உதவிப் பொருளையும் காணாதது ஏமாற்றமளித்தது. அதற்கு பதிலாக 19 ஹெலிகாப்டர்களும் ஏவுகணைகளும் இருந்தன.

ஒருவேளை நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்ப மறந்து விட்டீர்களா, ஒபாமா? கவலை வேண்டாம். ஏற்கனவே சர்வதேச மீட்புக் குழுக்கள் (அமெரிக்கர்களுக்கு முன்னர்)களத்தில் இறங்கி விட்டன. பத்து மெட்ரிக் தொன் உணவுப்பொருட்கள், குடிநீர், கூடாரங்கள், பிற மீட்பு உபகரணங்கள் எல்லாம் சின்னச்சிறு நாடான ஐஸ்லாந்தில் இருந்து வந்து சேர்ந்து விட்டன. உடனடியாக எமக்கு உதவிய ஐஸ்லாந்து, கடந்த வருட நிதி நெருக்கடியில் சிக்கி பொருளாதாரம் திவாலாகும் நிலையில் இருந்தது. "அமெரிக்கா உடனடியாக உதவி அனுப்பாததற்கு காரணம், ஹைத்தியில் நிலவிய பாதுகாப்புக் குறைபாடு..." உங்களது பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். ஆமாம், ஏற்கனவே பஞ்சத்தில் அடிபட்ட ஹைத்தி ஏழைகள் நீங்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களை கொள்ளயிட்டால் என்ன செய்வது? அதைத் தடுக்க ஆயுதந் தரித்த Blackwater கூலிப்படையினரை அனுப்பியிருக்கிறார். சபாஷ்! நாம் கேட்டது drinking water , கிடைத்ததோ Blak water.

திரு. ஒபாமா அவர்களே ஹைத்தியின் அவலத்திற்கு நிலநடுக்கம் மட்டும் காரணமல்ல. எல்லாவற்றுக்கும் இயற்கை அன்னையை குறை கூறாதீர்கள். அமெரிக்க ஆசியுடன் ஹைத்தியை மூன்று சகாப்தங்களாக ஆட்சி செய்த கொடுங்கோலன் டுவாலியர் காலத்தில் தான் பெருமளவு கட்டடங்கள் கட்டப்பட்டன. எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுப் போட்ட சர்வாதிகாரியின் கீழ், ஊழல் செய்து கட்டிய தரங்குறைந்த கட்டிடங்கள் எவ்வாறு பூகம்பத்தை எதிர்த்து நிற்கும்? சர்வதேச நிதி உதவியில் என்பது சதவீதம் டுவாலியர் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்துகளாக மாறின. மிகுதியை ஐ.எம்.எப்.பின் சலுகைக் குறைப்பு திட்டம் செய்து முடித்தது. ஐ.எம்.எப். நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கட்டப்பட்ட சேரி வீடுகள் இடிந்து விழுந்து லட்சக்கணக்கான மக்களை பலி எடுத்துள்ளன. சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஹைத்தி முழுவதற்கும் இரண்டே இரண்டு தீயணைப்பு நிலையங்கள் மட்டுமே இருந்தன. குடிநீர் விநியோகமோ, வைத்தியசாலைகளோ இன்றி அவதிப்பட்ட மக்களின் துன்பத்தை நிலநடுக்கம் முடித்து வைத்தது.

தசாப்த கால சர்வாதிகார ஆட்சியின் முடிவில் வந்த 1991 பொதுத் தேர்தலில் மக்கள் அரிஸ்டீட்டை தெரிவு செய்தார்கள். அவர் ஐ.எம்.எப். நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, அமெரிக்க அரசு படை அனுப்பி ஆட்சியைக் கவிழ்த்தது. (அப்போது மட்டும் என்ன விரைவாக படைகள் வந்தன?) 2004 ம் ஆண்டு, அரிஸ்டீட்டை மக்கள் மீண்டும் ஜனாதிபதியாக்கினார்கள். இம்முறை உங்கள் படைகள் தலையிட்டு அவரை கடத்திச் சென்று விட்டன. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ், இராணுவ நடவடிக்கையை நியாயப் படுத்தி என்னனவோ எல்லாம் பேசினார். எமது நாட்டின் ஜனநாயகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்த அமெரிக்கர்களின் கடமை உணர்ச்சி எம்மை புல்லரிக்க வைத்தது.

இராணுவத் தலையீடு என்று வந்து விட்டால் மட்டும் உங்கள் படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்திறங்கி விட்டன. அப்போது மட்டும் உங்கள் அரசின் விரைவான நடவடிக்கை எம்மை வியப்பில் ஆழ்த்தின. ஆனால் இப்போது உங்கள் பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்: "தவிர்க்கவியலாத காரணங்களால் மீட்புப் பணிகள் தாமதமடைகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் கடற்படையின் நடமாடும் மருத்துவமனை அனுப்பி வைக்கப்படும்." கடவுளே! அமெரிக்க மருத்துகள் வரும் வரையில் ஹைத்திய மக்கள் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்க வேண்டும்.

ஒபாமா அவர்களே! ஹைத்தி உலகில் மிகவும் வறிய நாடு என்று உங்கள் ஊடகங்கள் எம் மேல் அனுதாபப்படுகின்றன. அவர்களின் அனுதாபத்திற்கு நன்றி கூறும் தருணத்தில், அறியாமையையும் இடித்துக் கூற வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் எமது தாயகமான ஹைத்தி செல்வந்த நாடாக இருந்தது. 18 ம் நூற்றாண்டு பிரெஞ்சு சிந்தனாவாதி வோல்டேயர் ஹைத்தியின் செல்வம் "கறுப்புத் தங்கம்" என அழைக்கப்படும் அடிமைகள் தான் என்றார்.

அந்தோ பரிதாபம்! ஹைத்தியின் கறுப்பின அடிமைகள் பிரெஞ்சு காலனிய எஜமானுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். அடிமைகளின் புரட்சி வென்றது. நவீன உலகின் முதலாவது அடிமைகளின் குடியரசு உருவானது. ஏதோ காரணத்தால், ஹைத்தியை விட்டோடிய பிரெஞ்சுப் படைகள் திரும்பி வரவேயில்லை. ஆனால் அதற்காக அவர்கள் ஹைத்தியின் சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தமா? இல்லை. இல்லவே இல்லை. 1825 முதல் 1947 வரை, ஹைத்தி பிரான்சுக்கு நஷ்டஈடு கட்டுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டது. எதற்காக அந்த நஷ்டஈடு? அடிமைகள் கிளர்ச்சி செய்து விடுதலை ஆனதால், எஜமானர்களுக்கு பெருந்தொகை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். அந்த நஷ்டத்தை அடிமைகள் சந்ததி சந்ததியாக அடைத்து வர வேண்டுமாம்.

மனிதர்களை தனித்தனியாக அடிமைகளாக வைத்திருப்பதை விட, முழு தேசத்தையுமே அடிமையாக வைத்திருப்பது லாபகரமானது. இதைத் தான் பிரான்ஸின் "நவ-காலனித்துவம்" என்கிறார்களா? எமது உழைப்பில் பிரெஞ்சு மக்கள் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்களா? அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய அரசியல் அவ்வளவுதான். ஒரு வேளை எமது மக்களின் வறுமைக்கான காரணியை, 18ம் நூற்றாண்டு காலனிய சரித்திரத்தில் தேட வேண்டுமா?




Adam Deen: RENOWNED Swiss politician Daniel Streich has now embraced Islam.

ஸ்டாக்ஹோம்:சுவிட்சர்லாந்து நாட்டில் முஸ்லிம் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கெதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்ததாக கூறப்படும் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் இஸ்லாத்தை தழுவினார்.மினாராக்கள் கட்டுவதை தடைச்செய்யவேண்டுமென்றூம்,மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை துவக்கியவர்தான் ஸ்ட்ரீக்.இவர் சுவிஸ் பீப்பிள்ஸ் பார்டியின் முக்கிய நபர்.மினாராக்கள் கட்டுவதை எதிர்த்த அரசியல் தலைவர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியது சுவிஸ் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது.தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்தார்.தற்ப்போது சுவிஸ் நாட்டில் 4 மஸ்ஜிதுகளே உள்ளன.ஐந்தாவது மஸ்ஜிதின் அடிக்கல் நாட்டுவது தானாக வேண்டுமென்பது ஸ்ட்ரீக்கின் விருப்பமாகும்.மதரீதியான பொறுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பிரச்சாரகராக தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவிக்கிறார்.ஐரோப்பியர்களுக்கு இஸ்லாத்தை குறித்து புரிந்துக்கொள்ள விருப்பமுண்டு என்று முஸ்லிம்களின் நலனுக்காக செயல்படும் அரசு சார்பற்ற அமைப்பான ஒ.பி.ஐயின் தலைவர் அப்துல் மஜீத் அல்தாயி தெரிவிக்கிறார்.சிலர் ஸ்ட்ரீக்கைப்போல் பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலுள்ள தொடர்பைக்குறித்து அறிய முயற்சிக்கின்றனர்.இஸ்லாத்தை எதிர்ப்பதற்காகவே ஸ்ட்ரீக் குர்ஆனை படித்தார்.குர்ஆனை ஆழமாக சிந்தித்தபோது முடிவு எதிர்மறையாக மாறியது-அல்தாயி கூறுகிறார்.சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச்செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

courtesy to rpaalaivanathoothu.tk



பாரிஸ் :   "பிரான்சில் பொது இடங்களில் பர்தா  அணிந்து நடமாடினால் 50
ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்ற புதிய சட்டம்  பிரான்ஸ்
பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, பிரான்ஸ் அதிபர்
நிக்கோலஸ் சர்கோசி, "பர்தா  அணிவது அடிமைத் தனத்தைக் குறிக்கிறது. ஆண்,
பெண் இருவருக்கும் சம உரிமை அளிக்கப்படும் பிரான்சில், இதுபோன்ற உடைகளை
அனுமதிக்க முடியாது' என்று அறிவித்திருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனம் வந்தாலும், இம்மாதம்
முதல்வாரத்தில் பிரான்ஸ் பார்லிமென்டில், "பொது இடங்களில் பர்தா  மற்றும்
நிக்கா  உடை அணிந்து வந்தால், 51 ஆயிரம் ரூபாய் (750 யூரோ) அபராதம்
விதிக்கப்படும்' என்ற மசோதா கடும் வாக்குவாதங்களுக்கிடையில் சட்டமாக
நிறைவேற்றப்பட்டது.

அதிபர் கட்சியின் பார்லிமென்ட் குழுத் தலைவர் ஜீன் பிரான்காய்ஸ் கோப் இது
குறித்து கூறியதாவது: உடலை முழுவதுமாக மறைத்து, கண்களுக்கு மட்டும்
திரையிடும் பர்தாவுக்கும், உடலை மறைத்து கண் மட்டும் தெரியும் வகையில்
உள்ள  நிக்கா உடைக்கும் இந்த அபராதம் பொருந்தும். கலாசார விழாக்கள்
மற்றும் கொண்டாட்டங்களில் மட்டும் இதற்கு விதிவிலக்கு உண்டு. இந்த சட்டம்
மத அடிப்படையில் அல்ல. மத மற்றும் மதச்சார்பின்மை சார்ந்த அறிஞர்களிடம்
நாங்கள் பேசிய போது, பர்தா  என்பது மத அடிப்படையில் உருவானதல்ல என்று
அவர்கள் உறுதிபடுத்தினர். இவ்வாறு கோப் தெரிவித்தார்.

 


ஸனா: கடந்த சிலவாரங்களுக்கு முன் டெட்ராய்ட் விமான நிலையத்தில் அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த முயற்சி தொடர்பாக நைஜீரிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதனால் ஏமன் நாட்டில் இருக்கும் போராளிகளை அழிக்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆள் இல்லாத விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கு ஏமனில் உள்ள முஸ்லிம் மார்க்க ஆலிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அல்கொய்தா போராளிகளை ஒழிப்போம் என்ற போர்வையில் ஏமன் நாட்டை தாக்க அமெரிக்க ராணுவத்தை அனுப்பினால் அமெரிக்கா கடும் எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியுருக்கும் மேலும் அதற்கு எதிராக புனிதப்போர் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏமன் தலைநகர் ஸனாவில் நடந்த மாநாட்டில் முஸ்லிம் மார்க்க ஆலிம்கள் பலர் கையெழுத்திட்டு இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். ஆனால் ஏமனுக்கு ராணுவத்தை அனுப்பும் எண்ணம் இல்லை என அமெரிக்கா மறுத்துள்ளது.


 

எகிப்தின் அடாவடித்தனத்தை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

 

லண்டன் – கடந்த செவ்வாய்க்கிழமை (05.01.2010) இரவு அல் அரிஷில் இருந்த லைஃப் லைன் -3 சர்வதேச நிவாரண உதவிக்குழு உறுப்பினர்கள்மீது எகிப்தியப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அடாவடித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்குமுகமாக ஐரோப்பியத் தலைநகரங்களிலுள்ள எகிப்தியத் தூதுவராலயங்கள் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பாவிலுள்ள பலஸ்தீன் ஆதரவாளர் கூட்டணி அழைப்புவிடுத்துள்ளது.

 

14 ஐரோப்பிய அமைப்புக்களை உள்ளடக்கிய மேற்படி கூட்டணி வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பாவின் பல பாகங்களிலும் தாம் மேற்கொள்ளவிருக்கும் எதிர்ப்புப் பேரணிகள் யாவும் ஒரே நேரத்தில் இடம்பெறும் என்றும், லைஃப் லைன் நிவாரணக் குழுமீது மேற்கொண்ட அடாவடித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்குமுகமாகவும், கெய்ரோவுக்கு அழுத்தங்கொடுப்பதன் மூலம் அக்குழுவினரை எகிப்திய அதிகாரத்தரப்பினர் அச்சுறுத்தி மிரட்ட முனைவதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கிலுமே இந்தப் பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேற்படி கூட்டணி வெளியிட்ட ஊடக அறிக்கையில், மனித உரிமைகள் அமைப்பினர், பலஸ்தீன் அனுதாபிகளான வெளிநாட்டவர், ஐரோப்பாவிலுள்ள பலஸ்தீனர்கள், அரபிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்வர் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 

பலஸ்தீன் அனுதாபிகளான துருக்கியர்கள்

 

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்தில் இடம்பெற்ற அடாவடித்தனமான சம்பவத்தில் சர்வதேசச் செயற்பாட்டாளர்கள் பலர் காயமடைந்ததையடுத்து, துருக்கியத் தலைநகர் இஸ்தான்பூலில் உள்ள எகிப்தியத் தூதுவராலயத்தின் முன்னால் ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான துருக்கியர்கள், எகிப்தின் இதயமற்ற போக்கினை வன்மையாகக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

கோபத்தில் கொந்தளித்த ஆர்ப்பாட்டக்காரர்களுள் ஒரு பிரிவினர் எகிப்தியத் தூதுவராலயத்தை நோக்கிக் கற்களை எறிந்ததோடு, எகிப்திய அதிகாரத்தரப்பு மீண்டும் ஒருதரம் நிவாரண உதவிக்குழுவினர் மீது கைவைக்கத் துணிந்தால், எகிப்தியத் தூதுவராலயக் கட்டிடம் நொறுக்கப்படும் என்றும் அச்சுறுத்தல் விடுத்தனர்.

 

காஸா நோக்கிச் சென்றுள்ள மேற்படி சர்வதேச நிவாரண உதவிக்குழுவில் ஐந்து துருக்கியப் பாராளுமன்ற உறுப்பினர்களும் நிவாரணப் பொருட்களுடன்கூடிய நூற்றுக்கணக்கான துருக்கிய ட்ரக் வண்டிகளும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நன்றி: PIC




 

ஃபிரான்ஸிலுள்ள ஷெய்க் யாஸீன் அமைப்பின் எதிர்ப்புப் பேரணி

 

பரிஸ் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.01.2010) ஃபிரான்ஸில் உள்ள ஷெய்க் யாஸீன் அமைப்பினர் காஸாவின் எல்லையில் மாபெரும் சுவரொன்றை நிர்மாணித்துவரும் எகிப்தின் இதயமற்ற போக்கைக் கண்டித்துத் தமது எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாக பரிஸிலுள்ள எகிப்தியத் தூதுவராலயத்தின் முன் பேரணியொன்றை ஒழுங்குசெய்திருந்தது.  

 

ஃபிரான்ஸிலுள்ள மேற்படி அமைப்பு தமது அறிக்கையில், தமது பேரணி, காஸாவுக்கு ஆதரவான உலக ஒருங்கிணைப்புப் பேரணிக்குத் தடைவிதித்த எகிப்தின் கடும்போக்கினை எதிர்ப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

 

எகிப்தியத் தூதுவராலயத்தின் முன் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான அரபு மற்றும் வெளிநாட்டு சமாதான ஆர்வலர்கள், காஸா மீதான மனிதாபிமானமற்ற முற்றுகையை எதிர்க்கும் வகையிலமைந்த சுலோகங்களையும், காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனர்களின் புகைப்படங்களையும் தமது கரங்களில் ஏந்தியிருந்தனர்.

 

ஷெய்க் யாஸீன் அமைப்பின் தலைவர் அப்துல் ஹகீம் அல் ஸஃப்ரிவி காஸாவை முற்றுகையிலிருந்து விடுவிக்கக்கோரி ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்துகொண்டோர் மீது தாக்குதல் நடாத்திய எகிப்திய நிர்வாகத் தரப்பின் மனிதாபிமானமற்ற போக்கினை மிக வன்மையாகக் கண்டித்தார்.

காஸா எல்லையில் எகிப்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் பெருஞ்சுவர்

 

அவர் மேலும் குறிப்பிடுகையில், காஸாவை நோக்கிச் சென்றுள்ள வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களைத் தடுத்து நிறுத்தாமல், அவர்கள் தமது பயணத்தைத் தொடர்வதற்குரிய சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, மேற்படி உலக மனிதாபிமானச் செயற்பாட்டாளர்களின் பிரதான இலக்கு மனிதாபிமான உதவி வழங்குவதே. எனவே, அதனை எகிப்தின் தேசிய நலன்கள் என்ற அம்சத்தோடு குழப்பிக்கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

 

இதேவேளை, கடந்த ஞாயிறன்று ஜோர்தான் தலைநகர் அம்மானில் உள்ள எகிப்திய தூதுவராலயத்தின் முன்பு பல்வேறு ஜோர்தானிய அமைப்பினர் ஒன்றிணைந்து நடாத்த முற்பட்ட எதிர்ப்புப் பேரணியை, அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் தடுத்துநிறுத்தியுள்ளனர்.

 

அத்துடன், எகிப்திய அரசாங்கத்துக்குச் சார்பாக காஸா எல்லையில் அமைக்கப்படும் பெருஞ்சுவருக்கு ஆதரவாக ஃபத்வா வழங்கியுள்ள அல் அஸ்ஹர் இஸ்லாமிய ஆய்வு அமையத்தின் செயலை கெய்ரோவிலுள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.

 



டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப்(கருவியல்) பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.

மருத்துவ விஞ்ஞானம் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக மார்தட்டிக்கொண்டாலும் மனித உடலில் விடைகாண முடியாத, கண்டறியப்படாத அபூர்வ அம்சங்கள் பல இருக்கின்றன என்பதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர்.
அந்தவகையில் அன்றைய மருத்துவ விஞ்ஞானம் கண்டறியாத கருவியல் தொடர்பான உண்மைகளைக் கூறும் முக்கியமானதொரு அல்குர்ஆனிய வசனம் Dr.கீத்மூரது கண்களில் பட்டது. ஆழமாகப் படித்தார். "படைப்பினங்கைளப் படைத்த உமதிரட்சகனின் பெயரைக்கொண்டு ஓதுவிராக! அவன் எத்தகையவனென்றால் அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து மனிதனைப் படைத்தான்."
Dr.கீத்மூருக்கு இவ்வசனம் பெரும் வியப்பையூட்டியது. "அட்டைப் பூச்சிபோன்று ஒட்டிக்கொண்டிருக்கும்" என்ற இவ் விஷயத்தை ஆய்வுசெய்ய முடிவுசெய்த அவர் ஆய்வுகூடத்தை அடைந்து அதி சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டி மூலம் ஒரு கருவின் ஆரம்பப்படிநிலை வளர்ச்சியை ஆய்வு செய்யலானார். அக்கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பு நோக்கினார். என்ன அற்புதம். கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயற்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் தொழிற்பாடுகளும் ஒரேவிதமாக இருந்தன. ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சிபோன்றதென இதற்குமுன் Dr.கீத்மூர் அறிந்திருக்கவில்லை. ஆதனை அல்குர்ஆனிய வசனம் அச்சொட்டாகக் கூறியதைப் பார்த்து வியந்தார். இது இத்துறையில் அவரை மேலும் ஆய்வுகள் செய்யத் தூண்டியது.
அதனைத் தொடர்ந்து "உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களில் வைத்து அவனே உங்களைப் படைத்தான்." என்ற வசனத்தை ஆய்வுக்குட்படுத்தினார். எவ்வித மருத்துவத் தொழில்நுட்பமோ நவீன கருவிகளோ அற்ற 1400 ஆண்டுகளுக்கு முன்பு கருவறையின் படிமுறைச் செயற்பாடுகளைக் கூறியிருக்கும் இவ்வற்புத வசனத்தைக் கண்டு அவர் ஆச்சரியத்திலாழ்ந்தார். அவரது நீண்ட ஆய்வுக்குப்பின் அம்மூன்று இருள்களின் விளக்கம் என்ன என்பதுபற்றி இவ்வாறு விளக்கிக்காட்டினார்.

1) தாயின் அடிவயிறு (Abdominal wall)
2) கருப்பையின் சுவர் (Uterine wall)
3) குழந்தையைச் சுற்றியிருக்கும் சவ்வுப்படலம் (Amniotic Membrane)

இதன்பின்பும் அவர் பல அல்குர்ஆனிய வசனங்களை ஆய்வுசெய்து அற்புதத் தகவல்களை மருத்துவ உலகுக்கு வழங்கினார். இவ்வாய்வுகளில் அவர் ஈடுபட முன்பு "The Developing Human – மனித வளர்ச்சி"என்ற ஒரு நூலை எழுதியிருந்தார். எனினும் அல்குர்ஆனின் முளையவியல் பற்றிய இவ்வசனங்களை ஆய்வுசெய்து பெற்றுக்கொண்ட உறுதியான முடிவுகளைவைத்து அந்த நூலை மீள்பரிசீலனை செய்து 1982ம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டார். ஒரு தனிநபரால் வெளியிடப்பட்ட சிறந்த மருத்துவ நூல் என்றவகையில் அதற்கு உயர் விருதும் வழங்கப்பட்டது. அந்நூல் பல்வேறு மொழிகளுக்கும் மாற்றப்பட்டு முளையவியல் கற்கையில் முக்கிய பாடநூலாக அங்கீகரிக்கப்பட்டது.
ஆய்வுகள் முடிந்து நூலாக வெளிவரமுன்பு 1981ம் ஆண்டு சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் நடைபெற்ற ஏழாவது மருத்துவ மாநாட்டில் Dr.கீத்மூர் கலந்து உரைநிகழ்த்துகையில் பகிரங்கமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"It has been a great pleasure for me to help clarify statements in the Qur'an about human development. It's clear to me that these statements must have come to Muhammad from god because almost all of this knowledge was not discovered until many centuries. Late this proves to me that Muhammad must have been a messenger of the god."
(Dr. Keith more)

"அல்குர்ஆனில் உள்ள மனித கருவளர்ச்சி பற்றிய தகவல்களை ஆய்வுசெய்து அதனை விளக்கிக்கூற என்னால் உதவ முடிந்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள இந்தத் தகவல்கள் யாவும் இறைவனி (அல்லாஹ்வி)டமிருந்துதான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வந்திருக்க முடியும் என்று எனக்குத் தெளிவாகியுள்ளது. ஏனென்றால் கருவியல்பற்றிய அறிவார்ந்த ஆய்வு முடிவுகளில் பெரும்பாலனவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஆராய்ச்சியே முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இறைவனி(அல்லாஹ்வி)ன் தூதர் என்பதை நிரூபித்துவிட்டுள்ளது." என்றார்.

நிச்சயமாக அல்குர்ஆன் தெய்வீகத் தன்மைபொறுந்திய வேத வெளிப்பாடு என்பதை என்றும் உணர்த்தி நிற்கும்.





 

அமெரிக்காவில் டெட்ராய்ட் அருகே டியர்பார்ன் எனும் இடத்தில் உள்ளூர் பள்ளி இமாம் அமெரிக்க உளவு படையால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது அமெரிக்க முஸ்லீம்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலைக்கும் உள்ளூர் அல்லது சர்வதேச தீவிரவாதத்திற்கும் எவ்வித தொடர்புமுமில்லை என அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் கூட்டமைப்பின் (CAIR) தலைவர் தாவூத் வலீத் கூறினார்.

53 வயதான லுக்மான் அமீன் அப்துல்லா டியர்பார்னில் உள்ள சரக்கு கிடங்கில் புலனாய்வு துறையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க அட்டர்னி அலுவலகம் கூறுகிறது. கொலை செய்யப்பட்ட அப்துல்லாவை அமெரிக்காவில் ஒரு இஸ்லாமிய அரசை ஏற்படுத்த முயற்சி செய்த மிக முக்கியமான தீவிர போக்கு கொண்ட சுன்னி தலைவராக ஃஎப்.பி.ஐ கூறுகிறது.

ஆனால் அப்துல்லாவை அதிகாரிகள் பல தடவை திருடு போன பொருட்களை விற்றதாகவும் சட்ட விரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாகவும் கைது செய்ய முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
CAIR தலைவர் வலீத் அப்பள்ளியில் எவ்வித சட்ட விரோத காரியமும் நடைபெறவில்லை என்றும் தாம் அறிந்த வரையில் அப்துல்லா ஒரு சிறந்த மனிதர் என்றும் கூறினார். அப்துல்லா பல தடவை தன்னிடமுள்ள உடைமைகளை பிறருக்கு அன்பளிப்பு செய்துள்ளதாகவும் அவர் மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உணவளிப்பதாகவும் அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்துவர்கள் என்றும் வலீத் கூறினார்.

மேலும் வலீத் அப்துல்லாவை பற்றி கூறுகையில் "அப்துல்லா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதுடன் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். நிறைய இளைஞர்களை சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றியுள்ளார்" என்றும் புகழாரம் சூட்டினார்.
 
source:foxnews,inneram
இடுகையிட்டது பாலைவனத் தூது

 

லண்டனில் நடந்த கொடூரம்


 

லண்டனில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தினராலேயே கூட்டு கற்பழிப்பு செய்யப்பட்டிருக்கிறார்.

இவரை இவருடைய சித்தப்பா, மாமா, இவர் மாமாவின் மகன் ஆகியோர் அந்த பெண்ணின் ஐந்தாவது வயதிலிருந்தே கற்பழித்துள்ளனர். இவர் அவருடைய 14 வது வயதில் முதலில் கருத்தரித்துள்ளார்.

பல வருடங்களுக்கு பின்னர் தற்பொழுது தான் இந்த கொடுமை வெளிவந்துள்ளது. இந்த மூன்று குற்றவாளிகளும் சிறையிடப்பட்டுள்ளனர்.

இந்த கொடுஞ்செயலில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தற்பொழுது 27 வயது. இந்த பெண்ணிற்கு நடந்த கொடுமைகளை அவரின் தாய் மறுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த கார்டிஃப் நீதிமன்றத்திடம், இந்த பெண் கருத்தரித்ததை மறைக்க அவரை ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை அவர்களது சொந்த குழந்தையை போன்று காட்டியுள்ளனர். அந்த பெண்ணை இந்தியாவிற்கு திருமணத்திற்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர்களின் திட்டப்படி அது நடக்கவில்லை.

இந்த கொடுமைகளை அனுபவித்து வந்த அந்த பெண் கடந்தவருடம் தன்னுடைய நண்பர் தைரியம் கொடுத்ததின் பேரில் தனது மவுனத்தை உடைத்து போலீசிடம் புகார் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் சித்தப்பா (55 வயது), மாமா (50 வயது) விற்கு தலா 20 வருட சிறை தண்டனை விததிக்கப்பட்டுள்ளது. இவருடைய மாமாவின் மகனிற்கு 12 வருட காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் குடும்பத்தினர் சட்டத்திற்கு புறம்பாக இங்கிலாந்தில் குடியேறியவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களின் தண்டனைக்காலம் முடிந்ததும் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பெற்றெடுத்த குழந்தைக்கு மரபணு சோதனை செய்யப்பட்டதில் அது அவரின் மாமாவின் குழந்தை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாட்ரிக் குர்ரான் கூறுகையில், அந்த பெண்ணின் மீது நீங்கள் பாலியல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதல்லாமல் மற்றவர்களையும் அந்த பெண்ணை காசில்லாத, விருப்பமில்லாத விபச்சாரி போன்று நடத்த ஊக்கமளித்திருக்கின்றீர்கள். பின்னர் நீங்கள் அனைவரும் அவரை கூட்டுக் கற்பழிப்பு செய்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.

நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ்


 

2005 ல் நடத்தப்பட்டு வெளியிடப்படாத கருத்துக்கணிப்பு ஒன்று அல்பேனிய மக்கள் தொகையில் 80% மக்கள் முஸ்லீம்கள் என்று கூறியுள்ளது. இந்த சதவிகிதம் முன்பு இருந்ததை விட அதிகம்.

National Institute for Statistics 2005 ல் நடத்திய The Multiple Indicator Cluster Survey அல்பேனிய மக்களின் தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. இந்த கருத்துக்கணிப்பில் அந்த மக்களின் மதம் குறித்த கேள்விகளும் கேட்கப்பட்டன.

மொத்தமாக 5000 குடும்பங்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 79.9% மக்கள் இஸ்லாமியர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 70% மக்கள் இஸ்லாமியர்கள் என்றும் 20% மக்கள் கிறித்தவர்கள் என்றும், 10% மக்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள் என்றும் கணக்கிடப்பட்டது.

புதியதாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் சில மக்கள் திரானாவை மையமாக கொண்ட சியா பெக்தாசி இஸ்லாம் என்ற வழிபாட்டிலும் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தனி மதம் என்பதாகக் கூறப்படுவதால் இது இஸ்லாமிய மக்கள் தொகையில் சேர்க்கப்படவில்லை.

அல்பேனியாவில் 1967 ல் நடந்த கம்யூனிச ஆட்சியின் போது வணக்க வழிபாடுகள் தடை செய்யப்பட்டன. நவம்பர் 1990 ல் கம்யூனிசம் வீழ்ந்த போது மக்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளை பின்பற்ற தொடங்கினர். அன்றிலிருந்து அல்பேனியா இஸ்லாமிய நாடா இல்லையா என்ற விவாதம் வலுக்கத்தொடங்கியது.

இப்போது கிடைத்த இந்த கருத்துக்கணிப்பு முடிவின் படி முஸ்லீம்கள் மொத்தமுள்ள 3.1 மில்லியன் மக்களில் 2.5 மில்லியன் பேர் இருக்கின்றனர். இந்த கணக்கெடுப்பு கம்யூனிசம் வீழ்ந்த பின்னர் மேற்கு ஐரோப்பாவிலிருந்து அல்பேனியாவிற்கு வந்த ஒரு மில்லியன் மக்களை கணக்கில் சேர்க்கவில்லை.

நன்றி
ABNA.

"உய்குர் முஸ்லிம்கள் 6 பேருக்கு மரண தண்டனை கொடுப்பது உய்குரின் பிரச்சனைக்கு முடிவு காணும் வழி அல்ல, மாறாக இது மக்களிடையே கோபத்தை தூண்டி பிரச்னையை இன்னும் அதிகமாக்கும்" என்று நாடுகடத்தப்பட்ட உய்குர் மக்கள் பிரிவின் தலைவர் ரெபியா கதீர் தெரிவித்தார்.

பல வருடங்களாக சீனாவின் சிறைகளில் இருந்த இவர் தனது நியுசிலாந்து பயணத்தின் போது, "மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்த ஆறு பேர்களின் விசாரணை சீன சட்டதின்படியோ அல்லது சர்வதேச சட்டத்தின் படியோ நீதமாக நடத்தப்படவில்லை" என்று தெரிவித்தார்.

"இது அந்த பகுதியில் அமைதியையும் நிலையான தன்மையையும் உருவாக்கப்போவதில்லை, மாறாக உய்குர் மக்களை இது கோபமுறச்செய்யும்" என்று அவர் கூறினார். இந்த செய்தியை அவர் 6 பேரின் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட தினத்தின் மறுநாள் கூறினார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்த ஆறு பேரும் கடந்த ஜூலை மாதம் உய்குரின் ஜிங்க்ஜியாங் பகுதியில் நடந்த கலவரத்தின் போது மிகவும் தீவிரமான குற்றச்செயலில் ஈடுபட்டதாக சீனாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் நடந்த கலவரத்தில் ஏறத்தாழ 200 பேர் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உய்குர் கலவரக்காரர்களால் கொல்லப்பட்ட சீனாவின் ஹான் பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆறு பேர்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் பெயர்களின் அடிப்படையில் அவர்கள் உய்கூரை சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகின்றது.

கடந்த ஜூலை 5 ஆம் தேதி பொம்மை தொழிற்சாலையில் வேலைசெய்த பணியாளர்கள் தாக்கப்பட்டு இரண்டு பேர் கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது.
இந்த தீர்ப்பினை அடுத்து உரும்கி பகுதியில் பலத்த காவல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கிடைத்த தகவலின் படி ஏறத்தாழ 700 பேர் கலவரம் செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் தண்டிக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.
source:Aljazeera
Related Posts with Thumbnails
உதயம்