_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...



 

அமெரிக்காவில் டெட்ராய்ட் அருகே டியர்பார்ன் எனும் இடத்தில் உள்ளூர் பள்ளி இமாம் அமெரிக்க உளவு படையால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது அமெரிக்க முஸ்லீம்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலைக்கும் உள்ளூர் அல்லது சர்வதேச தீவிரவாதத்திற்கும் எவ்வித தொடர்புமுமில்லை என அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் கூட்டமைப்பின் (CAIR) தலைவர் தாவூத் வலீத் கூறினார்.

53 வயதான லுக்மான் அமீன் அப்துல்லா டியர்பார்னில் உள்ள சரக்கு கிடங்கில் புலனாய்வு துறையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க அட்டர்னி அலுவலகம் கூறுகிறது. கொலை செய்யப்பட்ட அப்துல்லாவை அமெரிக்காவில் ஒரு இஸ்லாமிய அரசை ஏற்படுத்த முயற்சி செய்த மிக முக்கியமான தீவிர போக்கு கொண்ட சுன்னி தலைவராக ஃஎப்.பி.ஐ கூறுகிறது.

ஆனால் அப்துல்லாவை அதிகாரிகள் பல தடவை திருடு போன பொருட்களை விற்றதாகவும் சட்ட விரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாகவும் கைது செய்ய முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
CAIR தலைவர் வலீத் அப்பள்ளியில் எவ்வித சட்ட விரோத காரியமும் நடைபெறவில்லை என்றும் தாம் அறிந்த வரையில் அப்துல்லா ஒரு சிறந்த மனிதர் என்றும் கூறினார். அப்துல்லா பல தடவை தன்னிடமுள்ள உடைமைகளை பிறருக்கு அன்பளிப்பு செய்துள்ளதாகவும் அவர் மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உணவளிப்பதாகவும் அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்துவர்கள் என்றும் வலீத் கூறினார்.

மேலும் வலீத் அப்துல்லாவை பற்றி கூறுகையில் "அப்துல்லா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதுடன் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். நிறைய இளைஞர்களை சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றியுள்ளார்" என்றும் புகழாரம் சூட்டினார்.
 
source:foxnews,inneram
இடுகையிட்டது பாலைவனத் தூது

 

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்