_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...
தெஹ்ரான், அக். 19:தங்கள் நாட்டில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில்
பாகிஸ்தான் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்டிருப்பதாக ஈரான்
குற்றஞ்சாட்டியிருக்கிறது.

ஈரானில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்புப் படை
அதிகாரிகள், பழங்குடியினத் தலைவர்கள் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். பலர்
காயமடைந்தனர்.

பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பலூசிஸ்தான் மாகாணத்தை
ஒட்டிய எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பிஷீன்
பகுதியில் ஈரான் ராணுவ சிறப்புப் பிரிவு அதிகாரிகளின் கூட்டத்தைக்
குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம்
தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா தான் காரணம் என்று
ஈரான் நாடாளுமன்றத் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்