_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

 


ஐ.நா வின் அணுசக்தி நிறுவனம், இரான் சமீபத்தில் அறிவித்த அணு சக்தி நிலையத்தின் நோக்கம் குறித்து, இன்னும் பதிலளிக்கப்படவேண்டிய கேள்விகள் இருப்பதாகக் கூறியுள்ளது.

முன்னதாக, கோம் என்ற இடத்தில் ஒரு யூரேனியச் செறிவூட்டும் உலை ஒன்று இருப்பது குறித்து இரான் அறிவிக்கத் தவறியமை, இரானில் வேறு ரகசியமான அணுசக்தி உலைகள் இருக்கும் சாத்தியக்கூறு குறித்த கேள்விகளை எழுப்புவதாக, தனது அறிக்கையில் ஐ.நா மன்ற அணுசக்தி நிறுவனம் கூறியது.

இந்த இடத்திற்கு தனது கண்காணிப்பாளர்கள் செல்ல முழு சுதந்திரம் கடந்த மாதம் தரப்பட்டது என்றும், அவர்கள் இந்த உலையின் கட்டுமான வேலைகள் பெருமளவு முடிந்துவிட்ட நிலையில் இருப்பதாகவும், இந்த உலை 2011 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கும் என்றும் கூறப்பட்டதாக ஐ.நா வின் அணுசக்தி நிறுவனம் கூறியது. இந்த உலை இருப்பதை இரான் செப்டம்பர் மாதத்தில்தான் அறிவித்தது.


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்