ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் - ஜெரூசலவாசிகள், வெளிநாட்டு சமாதானச் செயற்பாட்டாளர்கள்
பலஸ்தீனர்களின் வீடுகளை இடித்துத் தகர்க்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை
உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் புனித நகரில் உள்ள பலஸ்தீனர்களின் வீடுகளை இடித்துத் தகர்க்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையின் 'அழிப்புக் கொள்கை'க்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் பேரணியொன்றை நடாத்தினர்.
செய்க் ஜர்ராஹ் பிரதேசத்திலிருந்த தமது வீடுகளை இழந்து தவிக்கும் ஃகாவி, ஹனூன் குடும்பத்தினர்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்குமுகமாகவே கடந்த வெள்ளிக்கிழமை (20.11.2009) இந்தப் பேரணி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
செய்க் ஜர்ராஹ் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் புனித நகரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கொண்டுவந்து குவிக்கப்படுவதை எதிர்த்தும், இஸ்ரேலிய
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் 'அழிப்புக் கொள்கை
ஆக்கிரமிப்பு அதிகார சபையின் அழிப்புவேலைகளை நிறுத்துமாறு கோரியும், புனித நகரில் வாழையடி வாழையாக வாழ்ந்துவரும் மண்ணின் மைந்தர்களை பலவந்தமாக வெளியேற்றி, அவர்களை இடப்பெயர்வுக்கு நிர்ப்பந்திப்பதைக் கண்டித்தும் பதாதைகளை ஏந்திச் சென்றனர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையின் பலவந்தமான யூதக் குடியேற்றத் திட்டத்திற்கமைய, பலஸ்தீனக் குடும்பங்களை தமது வீடுகளிலிருந்து பலவந்தமாய் வெளியேற்றுவதை இடைநிறுத்துமாறு கோரியும் யூதக் குடியேற்றவாசிகள் ஃகாவி, ஹனூன் குடும்பத்தினரை அவரவர் வீடுகளிலிருந்து வெளியேற்றியதைக் கண்டித்து அவர்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் பெற்றுத் தருமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதேவேளை, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் 'அழிப்புக் கொள்கை'யின் இறுதிக்கட்டம் புனித பைத்துல் முகத்திஸ் பள்ளிவாயிலை இடித்துத் தகர்ப்பதாகவே அமையும் என்றும், அரபு-முஸ்லிம் நாடுகளின் நீண்ட மௌனத்தை இஸ்ரேல் தனக்குச் சாதகமானதாகத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளது என்றும் ஹமாஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஸமீரா அல் ஹலைக்கா அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (20.11.2009) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரபு-முஸ்லிம் நாடுகளை அடக்கியொடுக்கி மேலாதிக்கம் செலுத்த
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையின் இறுதி இலக்கு அல்-அக்ஸாவை இடிப்பதே!
முனையும் 'மரண தேசமான' இஸ்ரேல், தனது திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீவிரமான எதிர்ப்புகள் எவையும் கிளம்பாததால் ஜெரூசல நகரில் அது தனது இலக்கினை அடைந்துகொள்ளும் கடைசிக் கட்டத்தை அண்மித்துவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டி, இது தொடர்பில் இதுவரை கைக்கொண்ட மௌனத்தைக் கலைத்து முழு அரபு-முஸ்லிம் உலகும் ஒன்றிணைந்து குரலெழுப்ப முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நன்றி: PIC
0 comments:
Post a Comment