காஸா – 'கோல்ட்ஸ்டோனின் அறிக்கையைத் தொடர்ந்து, 'தம்மைப் பற்றி சர்வதேச சமூகம்
ஹமாஸ் பாராளுமன்றப் பேச்சாளர் கலாநிதி ஸலாஹ் அல்-பர்தாவில்
எத்தகைய எதிர்வினையைக் கொண்டுள்ளது' என்பதைப் பரிசீலிக்குமுகமாகவே காஸா மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல் நடவடிக்கைகள் அமைந்துள்ளன' என்று ஹமாஸ் பாராளுமன்றப் பேச்சாளர் கலாநிதி ஸலாஹ் அல்-பர்தாவில் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழைமை (22.11.2009) ஊடக அறிக்கையொன்றில் அவர் இதுபற்றிக் குறிப்பிடுகையில், இஸ்ரேல் பல புதிய அக்கிரமங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருப்பதாலேயே சமீபத்தில் மீண்டும் இவ்வாறான அத்துமீறிய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதன் மூலம், எதிர்காலத்தில் பலஸ்தீன் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளவிருக்கும் மற்றுமோர் அத்துமீறிய தாக்குதலின்போது உலகநாடுகள் அதனை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதைப் பரிசீலித்துப் பார்ப்பதே அதன் நோக்கமாகும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலைப் பொறுத்தவரையில் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விடுவதுதான் அதன் பொதுவான
"எம் பணி கொலைசெய்து குவிப்பதே!"
இயல்பு என்பதால், காஸா மீது அது அண்மையில் மேற்கொண்ட அட்டூழியச் செயல்களை நியாயப்படுத்த வேண்டும் என்ற எந்தத் தேவையும் அதற்கில்லை என்று கண்டித்துப் பேசிய அவர், இனிமேலும் இவ்வாறான எந்தவோர் அக்கிரமச் செயல் தொடர்பாகவும் அரபுலகம் கண்டுகொள்ளாமல் இருக்குமா என்பதைப் பரிசீலிக்குமுகமாகவுமே இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை முன்னோட்டமாய் நடத்திப் பார்க்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலின் இத்தகைய அடாவடித்தனங்களை முறியடிப்பதற்குள்ள மிகச் சிறந்த வழி பலஸ்தீனர்களின் ஐக்கியமே என்று தெரிவித்த ஹமாஸ் பாராளுமன்ற உறுப்பினரான பர்தாவில், பலஸ்தீனின் ஸ்திரப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட விடுதலைப் போராட்டத்தின் மூலம் மீள்
காஸாமீது குண்டுமழை பொழியும் இஸ்ரேலியப் போர் விமானம்
ஒருங்கிணைப்பைக் கட்டியெழுப்ப அணிதிரளுமாறு பலஸ்தீனின் சகல தரப்பினரையும் நோக்கி அழைப்புவிடுத்தார்.
நன்றி: PIC
0 comments:
Post a Comment