காஸா – காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின்போது காஸா சிறுவர்கள் மிகக்
காஸா சமூக மனநல நிகழ்ச்சித் திட்டம்
கடுமையாகப் பாதிக்கப்பட்டு இன்றுவரை சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு மேலதிகமாக, உலகின் ஏனைய சிறுவர்கள் அனுபவிப்பதுபோல் காஸா சிறுவர்களுக்கும் தமது குழந்தைப் பருவத்துக்குரிய இயல்பான குதூகல வாழ்க்கைக்கு உத்தரவாதமளிப்பதன் மூலமே அவர்களுக்கு உரிய நியாயம் வழங்கப்பட முடியும். அச்சிறுவர்கள் தமது பாதிப்புகளிலிருந்து மீண்டு முற்றாகக் குணமடைவதற்குள்ள ஒரேவழியும் அதுதான் என்று கடந்த வியாழக்கிழமை (19.11.2009) காஸா சமூக மனநல நிகழ்ச்சித் திட்டம் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்படி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கம் போல் இது பற்றியெல்லாம் வெறுமனே
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்
பேசுவதையும் கோஷமிடுவதையும் விட, காஸா சிறுவர்களின் உரிமைகளைக் காப்பது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும், இஸ்ரேல் பலஸ்தீன் சிறுவர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட முறையில் மேற்கொண்டு வரும் குற்றச்செயல்களை எதிர்க்கும் வகையில் தங்களது காத்திரமான பங்களிப்பினை வழங்குமுகமாக சர்வதேச அமைப்புக்களை ஓரணியில் திரண்டுவருமாறு அழைப்புவிடுத்த மேற்படி அமைப்பு, சுமார் மூன்று வருடங்களாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மனிதாபிமானமற்ற முற்றுகையினால் காஸா பிரதேசம் படிப்படியாக உயிர்ப்பிழந்து கொண்டிருப்பதால், உடனடியாக இந்நிலை நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், ஆயிரக்கணக்கான பலஸ்தீன் சிறுவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் பொஸ்பரஸ்
இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற முற்றுகையால் தமது இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கும் காஸா சிறுவர்கள்
குண்டுத் தாக்குதலாலும் தத்தமது வீடுகளின் மீதான குண்டுத் தாக்குதலின் போதும் ஏற்பட்ட ஆழமான பாதிப்புக்களால் இன்னமும் துன்புற்றுவருவதோடு, பல நூற்றுக்கணக்கான பலஸ்தீன் சிறுவர்கள் இஸ்ரேலியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், ஐ.நா.வின் அறிக்கைப்படி குறைந்தபட்சம் 60 சதவீதமான காஸா சிறுவர்கள் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்து வருகின்றனர் என்றும் மேற்படி அமைப்பு விபரித்திருந்தது.
நன்றி: PIC
0 comments:
Post a Comment