_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

 

 

வயோதிகப் பெண்மணியிடம் வீரம்(!?) காட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர்

வயோதிகப் பெண்மணியிடம் வீரம்(!?) காட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர்

 

நப்லஸ் - கடந்த ஞாயிற்றுக்கிழமை (13.12.2009) அதிகாலையில் நப்லஸ் நகரில் திடீர் தாக்குதலொன்றை மேற்கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, 65 வயதான உம்மு பாக்கிர் என்ற பெண்மணியின் வீட்டுக்குள் பலவந்தமாகப் புகுந்து அவரைக் கைதுசெய்துள்ளதாக கைதிகள் தொடர்பான கற்கை மற்றும் மனித உரிமைகளுக்கான அஹ்ரார் மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 

அஹ்ரார் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உம்மு பாக்கிர் எனும் வயோதிகப் பெண்மணியின் ஐந்து மகன்கள் ஏற்கெனவே இஸ்ரேலிய சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதோடு, கடந்த மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அவருடைய மருமகள் நில்லி அல் ஸஃபாதியையும் இந்த மாதத் தொடக்கத்தில் அவரது எஞ்சியிருந்த ஒரே மகன் உமர் மற்றும் பேரன் பாக்கிர் பாக்கிர் (வயது 19) ஆகிய இருவரையும் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

அஹ்ரார் மையத்தின் பணிப்பாளர் ஃபுவாட் அல் ஹஃப்ஷ் இதுபற்றித் தகவல் அளிக்கையில், இஸ்ரேலின் பெட்டாஹ் திக்வா தடுப்புக்காவல் நிலையத்தில் தற்போது அடைத்துவைக்கப்பட்டுள்ள உம்மு பாக்கிர் (வயது 65) பலஸ்தீன் கைதிகளிலேயே மிகவும் வயது முதிர்ந்தவர் என்றும், அவருடைய மூத்த மகன் பாக்கிர், மருமகள் நில்லியின் கண்பார்வையற்ற கணவன் ஆகியோரும் இதே தடுப்புக்காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.  

 

கொஞ்சம்கூட மனிதாபிமானமின்றி, மகன்களுக்கு உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஏற்கெனவே பல்வேறு நோய்களால் துன்புற்றுக்கொண்டிருக்கும் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியை இப்படிக் கடத்திச் சென்று தடுப்புக் காவலில் வைத்திருக்கும் மிக இழிவான செயற்பாடானது அதன் மிலேச்சத்தனமான சுயரூபத்தை எடுத்துக்காட்டப் போதுமானதாகும் என்று கடிந்துரைத்த ஃபுவாட் அல் ஹஃப்ஷ், உம்மு பாக்கிரை உடனடியாக விடுவிப்பது தொடர்பில் விரைந்து செயற்படுமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளார். 

திடீர் சோதனை என்ற போர்வையில் தொடர் கைதுகள்

திடீர் சோதனை என்ற போர்வையில் தொடர் கைதுகள்

 

இதே தினத்தில் அல் ஹலீல் நகரத்தில் திடீர் சோதனை என்ற போர்வையில் களமிறங்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை பலஸ்தீன் இளைஞர் ஒருவரைக் கைதுசெய்து அவரது வீட்டிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துள்ளது.

 

அவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞரின் பெயர் அக்ரம் அல் ஹத்தாத் என்பதாகவும் அவரது வீட்டிலிருந்த நகைகளே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால்  திருடப்பட்டுள்ளன என்றும் உள்ளூர் வட்டாரங்கள் பலஸ்தீன் தகவல் மையத்திடம் தகவல் தெரிவித்துள்ளன.

நன்றி: PIC


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்