நப்லஸ் - இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை, டொக்டர் மாஜிதா ஃபிதாவின் நிர்வாகத் தடுப்புக்
டொக்டர் மாஜிதா ஃபிதா
காவலைத் தொடர்ந்து நீடிக்க உத்தரவிட்டுள்ளது. அவர்மீது இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாததோடு, எவ்வித வழக்கு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், கடந்த மூன்று மாதகாலத்துள் ஐந்தாவது முறையாக இந்த நீடிப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு மேலும் குறிப்பிடுகையில், கடந்த ஆகஸ்ட் (06.08.2009) மாதம் மிகச் சொற்பநேர விசாரணையொன்றை மேற்கொண்ட நிலையிலேயே ஃபிதா நிர்வாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளது.
டொக்டர் ஃபிதா நப்லஸ் மாநகரசபை உறுப்பினர்களுள் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சில தினங்களுக்கு முன்பு 1948 இல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன்
பலஸ்தீன் தொழிலாளர்களைக் கைதுசெய்யும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை
நிலப்பிரதேசத்தில் 'அனுமதியின்றி உட்புகுந்தார்கள்' என்ற பெயரில் மேற்குக் கரையைச் சேர்ந்த 132 பலஸ்தீன் தொழிலாளர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டனர்.
'மேற்குக் கரையைச் சேர்ந்த பலஸ்தீன் தொழிலாளர்களுக்கு உதவிகளையும் இருப்பிட வசதிகளையும் அளித்தார்கள்' என்ற குற்றச்சாட்டின் பேரில், 1948 இல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் ஆறு பலஸ்தீனர்கள் ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
மாதாந்தம் சராசரியாக 800 – 1000 பலஸ்தீன் தொழிலாளர்களைக் கைதுசெய்துவரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ், தமது கைது நடவடிக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்ட மத்திய பலஸ்தீனை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளது.
நன்றி: PIC
0 comments:
Post a Comment