_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...
இஸ்ரேலிய அரசு 300க்கும் மேற்பட்ட பிதுவின்-அரேபிய பழங்குடியின கிராமங்கள் உள்ள தெற்கு நெகவ் பாலைவனப் பகுதியில் உள்ள வீடுகளை இடித்து தரை மட்டமாக்கியது.

இஸ்ரேலால் அங்கீகரிக்கப்படாத 45 கிராமங்களில் அல்-அராகிப் கிராமமும் ஓன்று. இங்கு 40 வீடுகள் உள்ளன. அல்-அராகிப் என்ற கிராமம் முழுவதும் புல்டோசர்களால் இடித்து அழிக்கப்பட்டது அங்கு வாழ்ந்த மக்களின் வீடுகள்,கால்நடைகள்,மரங்கள் மற்றும் உடைமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

Negev Co-existence Forum-ன் டைரக்டர் ஹை நோச் கூறுகையில்; "இஸ்ரேலிய 5 புல்டோசர்கள் காலை 5.30 மணியளவில் கிராமத்திற்குள் புகுந்தன. 3 முதல் 4 மணி நேரத்திற்குள் எல்லா வீடுகளையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டன என்று அதிர்ச்சியுடன் கூறினார்.


கிராம மக்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் வீடுகளை இடிப்பதை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் இஸ்ரேலிய காவல் துறையினரால் காயப்படுத்தப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர்.

வீடுகளை இழந்த அப்பகுதி மக்கள் பீர்செபா என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ள இடுகாடுகளுக்கு நகர்ந்து அங்கு கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர்." என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது "30க்கும் மேற்பட்ட சிறிய வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன நூற்றுக்கணக்காண மக்கள் ராஹட் என்ற இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். 3 நபர்கள் அதிகமாக கேள்வி கேட்டதற்காக கைது செய்யப்பட்டனர் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இஸ்ரேலிய அரசு அல்-அராகிப் கிராமவாசிகளுக்கு வீடுகளை காலி செய்ய சொல்லி ஜூன் 15 அன்று நோட்டீஸ் விநியோகித்தது. இந்த சூழலில் இப்பகுதி எப்பொழுது வேண்டுமானாலும் அளிக்கப்படலாம் என்ற அச்சத்துடனேயே மக்கள் வாழ்ந்து வந்தனர்.

தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டிகளையும் இடித்து விட்டனர். மின்சாரத்திற்காக வைத்திருந்த ஜெனரேடர்களையும் அப்புறப்படுத்தி விட்டனர். இது போர் தொடுக்கும் நடவடிக்கையைப் போன்று உள்ளது.மேலும் எங்களை இந்த பகுதிகளில் வாழவும் விடமாட்டார்கள் இது நினைத்து கூடப் பார்க்க முடியாதது.

கிராம மக்கள் தற்போது அடிப்படை உதவி மற்றும் மாற்று ஏற்பாடாக தங்குவதற்கு கூடாரம் அமைப்பதற்கான உதவிகளையும் எதிர்பார்த்து உள்ளனர்."என்றும் நோச் கூறுகின்றார்.

இதுகுறித்து இஸ்ரேலிய காவல்துறை செய்தித் தொடர்பாளர் மிக்கி ரோசன் பிளட் என்பவர் கூறுகையில்; "இங்கு உள்ள வீடுகள் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளன. நீதி மன்றத்தின் தீர்ப்பு 11 வருடங்களாக செயல்படுத்தப்படவில்லை. இவர்களுக்கு வீடுகளை காலி செய்வதற்கான நோட்டீஸ் கொடுத்தும் காலி செய்யாததால் நீதிமன்ற உத்தரவுப் படி இவர்களை இடம்பெயர்த்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்." என்றார்.

Negev Co-existence Forum-ன் படி 1,55,000 பிதுவின்-அரேபிய பழங்குடிகள் நெகவ் பகுதியில் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் இஸ்ரேலிய பகுதியின் குடிமக்கள் தாம். இவர்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். ஆனால் இஸ்ரேலிய அரசு இவர்களை அங்கீகரிக்க வில்லை மேலும் குடிதண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை எனவும் கூறுகின்றனர்.

நன்றி : பாலைவனத் தூது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்