_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...


காஸாவுக்கான மனிதாபிமான உதவிக் கப்பலுக்கெதிராக அண்மையில் இஸ்ரேல் மேற்கொண்ட மனிதாபிமானமற்ற இராணுவ நடவடிக்கை உலகம் பூராகவும் மட்டுமன்றி இஸ்ரேலினுள்ளேயும் பலமான கண்டனக் குரல்களை எழுப்பியிருந்தது.



அண்மைக் காலங்களில் இஸ்ரேல் பாலஸ்தீன மண்ணுக்கும் அதன் மக்களுக்கும் எதிராக மேற்கொண்டுவரும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கும் அதன் கொள்கை வகுப்புக்களுக்கும் எதிராக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் மனிதாபிமானம் படைத்த யூத செயற்பாட்டாளர்கள் கூட இஸ்ரேலுக்கெதிராக தமது அதிரிப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தகையவர்களில் சிலர் காஸா மீதான இஸ்ரேலின் கடின முற்றுகையினை உடைத்து அதன் பலஸ்தீன ஆக்கிரமிப்பினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அடம்பெறும் நடவடிக்கைகளுக்கு கூட ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.

இவ்வாறு இஸ்ரேலினுடைய பாசிசவாத நடவடிக்கைகளை இஸ்ரேலியர்கள் கூட விமர்சிக்கும், கண்டிக்கும் அல்லது எதிர்த்து குரலெழுப்பும் நிலை ஏற்பட்டுள்ள இவ்வேளை, எந்த யூத மக்களுடைய பெயரால் இஸ்ரேல் இத்தகைய மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை அப்பாவி பலஸ்தீனர்களுக்கெதிராக அரங்கேற்றி வருகின்றதோ அத்தகைய யூத பெரும்பான்மை ஏன் அமைதியாகவுள்ளது அல்லது இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகளை கண்டுகொள்ளதில்லையா என்ற வினா எழலாம்.

ஏனெனில் இஸ்ரேல் தனது குற்றங்களை யூத மக்களின் பெயரால் இழைத்து “பொதுமக்கள் அவசியத்தன்மை (Public necessity)” என்ற எதிர்வாதத்தை சர்வதேச சட்டத்தில் முன்வைத்து தப்பித்துக்கொள்ள முயற்சிப்பது இஸ்ரேலின் வழக்கமான செயற்பாடாகிவிட்டது.

முன்னாள் இஸ்ரேல் ஜனாதிபதியான சைமன் பெரஸ், ஒருமுறை யூதர்களின் புலமைத்துவ செயற்பாடுகளை (Jewish intellectual activism), ‘யூத மக்களின் விதியை மாற்றியமைக்க திட்டமிடல்’ மற்றும் ‘உலகின் விதியை மாற்றியமைக்க ஒத்துழைத்தல்’ என இரண்டு பிரிவாக பிரித்துக் கூறியிருந்தார்.




இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இவருடைய இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் உலகம் பூராக யூதர்களின் செயற்பாடு அமைந்திருந்தது. ஐரோப்பா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற இடங்களில் தமது பலமான இருப்பைக் கொண்டுள்ள குறிப்பாக அத்தகைய யூத சமூகம், யூத தேசியவாதம்(Jewish nationalism) மற்றும் அனைத்துலக மனிதத்துவம்(universal humanism) என்ற இரு பேக்குகளுக்கிடையே பிரிந்து காணப்படுகின்றது. இதில் முதலாவது வகை யூத சமூகம் தமது யூதத்துவத்தை(Jewishness) தேசியவாதமாகவும், இரண்டாவது வகை யூத சமூகம் தமது அனைத்துலகத் தன்மையை(Universality) உலகப் பிரஜைகள் எனவும் கோடிட்டுக் காட்டி நிற்கின்றது.

இந்த இருமுனை நோக்கு இரண்டாம் உலக மகா யுத்தம் மற்றும் அதன் அழிவுகளை தொடாந்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து ஏற்பட்ட அபிவிருத்தியுடன் கடினமடைய ஆரம்பிக்கிறது. எனினும் இஸ்ரேல் என்ற அரச உருவாக்கத்திற்கான நடவடிக்கையை யூதர்கள் முற்கொண்டு செல்றனர்.

இதற்கிடையே, ஐரோப்பாவில் மனிதப் படுகொலைகளிலிருந்து யூதர்கள் நிறையவே படிப்பினை பெறவேண்டியுள்ளதெனவும் கடந்தகால யூத வரலாற்றில் பாரிய மாற்றம் இடம்பெற வேண்டும் எனவும் ஷியோனிஸ்டுகள் நம்பினர். இதன்விளைவாக மூன்றில் இரண்டு மடங்கு பலஸ்தீனர்களை அகதிகளாக்கி பலஸ்தீனத்தின் 78 சதவீதமான நிலப்பரப்பை யூதர்கள் தமது நாடாக பிரகடனப்படுத்தினர். இந்த யூத அரசுப் பிரகடனத்தை தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட பலஸ்தீன மக்களின் நகரங்களும் கிராமங்களும் உடைத்து தகர்க்கப்பட்டன.

சைமன் பிரஸ் தனது பங்களிப்பாக இஸ்ரேலுக்கு பலம்பெயர்ந்து யூதர்களை தேசியவாதிகளாகவும் (nationalists) நிகழ்வு ரீதியாக காலநித்துவ வாதிகளாகவும் (de facto colonialists) உருமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஷியோனிஸ்டுகளோடு இணைந்து செயட்பட்டார்.

பிரஸே இஸ்ரேல் இராணுவத்தின் அணுவாயுதத் திட்டத்திற்கும் அது தொடர்பில் காலநித்துவ அதிகாரங்களான பிடிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் தந்திரோபாய உறவுகளை ஏற்படுத்தவும் வித்திட்டவராவார். இத்திட்டமே 1956இல் எகிப்தின் மீது மேற்கொள்ளப்பட்ட முத்தரப்பு தாக்குதலில் முடிவுற்றது.

தார்மீக ரீதியில் உயர்ந்த அந்தஸ்தை உலக மக்கள் மத்தியில் பேணிக்கொள்ளவதற்காக இஸ்ரேல் தலைவர்கள் எப்பொழுதும் தமது செயற்பாடுகளை மனிதாபிமானம் மற்றும் ஜனநாயகம் என்ற போர்வைகளால் மறைக்கும் முயற்கியிலேயே ஈடுபட்டு வந்துள்ளனர்.

முன்னாள் இஸ்ரேல் பிரதமர் கோல்டா மீர், தாம் பலஸ்தீன் சிறுவர்களுக்கெதிராக இழைத்த குற்றங்களை அரபிகள் மீது சுமத்தி அவற்றிலிருந்து பாதுகாப்பு பெற முயற்சித்தமை இதற்கு சிறந்த உதாரணமாகும். இதன்போது அவர் கூறியதாவது, “நமது குழந்தைகளை கொலை செய்தமைக்காக நாம் அரபிகளை மன்னிக்க முடியும். ஆனால் அவர்களுடைய குழந்தைகளை கொலை செய்ய எம்மை தூண்டியமைக்காக நாம் அவர்களை மன்னிக்க முடியாது.”

ஆனால் காலனித்துவ ஷியோனிஸம் யூத மதத்தை தனியுரிமைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் நாட்டிலுள்ள மிகவும் அதிகாரம்மிக்க ஷியோனிஸ சமய வாதிகளாலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலினுடைய கொள்கைள் மீதான வெளிப்படையான விமர்சகராக கருதப்படுபவர் முன்னாள் இஸ்ரேல் தத்துவார்த்த அறிஞர் யெஷாயாஹ_ லெய்போவிட்ஸ் என்பவராவார். ஆழ்ந்த யூத சமயவாதியான இவர் இஸ்ரேலினுடைய ஆக்கிரமிப்பை கடுமையான முறையில் கண்டித்துள்ளதுடன் இஸ்ரேல் படையினர் நாஷி படையினருடைய மனப்பாங்கினையும் மனிதாபிமானமற்ற போக்கினையும் கொண்டிருப்பதாக குற்றஞ் சாட்டியிருந்தார்.

இதேபோன்று மற்றுமொரு யூத மதவாதியும் இஸ்ரேல் சட்டசபையின் தலைவருமாக பணியாற்றிய அவ்ரஹாம் பேக், தனது நூலில்("The Holocaust Is Over") ஷியோனிசத்தை கடுமையாக விமர்சிக்கிறார். யூதர்கள் தமது சாம்பலிலிருந்து மீண்டெழ வேண்டும் எனக் கூறுகின்றார்.

21ஆம் நூற்றாண்டை நோக்கி…

இஸ்ரேலின் உள்ளேயும் வெளியேயுமுள்ள புலமைவாதிகளுக்கிடையே முரண்பாடு காணப்படுகின்ற போதிலும் இஸ்ரேலில் அல்லது பலஸ்தீனில் இடம்பெற்ற அண்டைய நிகழ்வுகள் வேறுபாடொன்டை பிரதிபளிக்கின்றது.

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனில் உள்ள இஸ்ரேலின் கொள்கைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இஸ்ரேலியரற்ற அனேகமான பிரபல்யம் மிக்க யூதப் புலமைவாதிகள் என்போரின் யூத செயற்பாடுகளுக்கான பதில்களை நோக்குகின்ற போது இந்த வேறுபாடு பிரதிபளிப்புச் செய்யப்படுகின்றது.

எலீ வீசல் (a Nobel Laureate), தனது நெருங்கிய நண்பர்களான பெரஸ், ஹென்ரி கிஸ்ஸிங்கர் மற்றும் பிரஞ்சு தத்துவார்த்தவியலாளரான போனார்ட் ஹென்ரி லெவி போன்றோருடன் இணைந்து இஸ்ரேலுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதில் கடுமையான போக்கினை கையாள்கின்றனர்.

இவர்கள் பொதுவாக இஸ்ரேல் இராணுவத்தின் செயற்பாடுகளை “ஜனநாயக இராணுவ செயற்பாடுகள்” என எதிர்காப்பு வாதங்களை முன்வைத்துள்ளனர். பெரஸின் புலமைத்துவ சமூகத்தில் அங்கத்தவரான பின்னர் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் கொள்கைகளை எதிர்க்காப்புச்செய்வதில் குறிப்பிட்டுக் கூறக்கூடியளவு தீவிரமானவர் ஹென்ரி லெவி ஆவார்.

இதேபோன்று “போரழிவுக் கைத்தொழிலின் தந்தை அல்லது குரு” என விமர்சிக்கப்படும் வீசல், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆள்புலங்களில், குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூஸலத்தில் இடம்பெறும் இஸ்ரேலின் இரத்தவெறி கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பதாகவும் எதிர்காப்புச் செய்வதாகவும் பலராலும் விமர்சிக்கப்படுகின்றது.

வீசல் ஒரு நியூ யோர்க் வாசியாவார். இதில் சுவாரசியமான விடயம் என்னவெனில், இவருக்கெதிராக முன்வைக்கப்டும் விமர்சனங்கள் ஜெரூசலத்திலுள்ள யூத வசிப்பிடங்களில் இருந்து வருபவை ஆகும்.

இவர்களுக்கு முற்றிலும் எதிரான கருத்துக்களை அனைத்துலகத்துவவாதிகள் (universalists) என அழைக்கப்படும் யூதர்கள் கொண்டுள்ளதைக் காண முடிகிறது.

ரிஷார்ட் fபோர்க் என்பவர் சர்வதேச சட்ட பேராசிரியரும் பலஸ்தீன் பிரச்சினை தொடர்பான ஐ.நா வின் அறிக்கையிடுபவருமாவார். மற்றும் நோம் சோம்கி என்ற பிரபல்யம்மிக்க யூத தத்துவர்த்தவியலாளர் 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் புலமைவாதிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் ஆவார்.

இவ்விருவரும் இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் போர்க்குற்றங்கள் உள்ளடங்களாக சகல இடங்களிலும் இடம்பொறும் பேர்க்குற்றங்களுக்கெதிராக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவருபவர்கள் ஆவர்.

இஸ்ரேலால் பலஸ்தீன் மற்றும் லெபனான் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் உள்ளடங்களாக வியட்நாம் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட யுத்தங்களுக்கெதிராகவும் மேற்கிலிருந்து மனிதாபிமானத்தை ஆதரித்து வெளியிடப்பட்ட பலமான கண்டனக்குரலாக இவர்கள் இருவரும் கருதப்படுகின்றனர்.

இதற்கிடையில், இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை ஆதரித்து குரல் கொடுப்பதுடன் அவற்றுக்கு நியாயப்படுத்தல் கற்பிக்கும் வீஸல் மற்றும் ஹென்ரி லெவி ஆகியோர் இஸ்ரேலுக்கு செல்லும் போது அங்கு மிக முக்கிய நபர்களுக்கா (VIP) கவனிப்பை பெறுகின்ற அதேவேளை fபோல்க் மற்றும் சோம்ஸ்கி ஆகிய புகழ்பெற்ற இவ்விரு இறிஞர்களும் இஸ்ரேலின் எல்லைக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றனர்.

இவ்வாறு பலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் குற்றங்கள் தொடர்பில் யூத அறிஞர்களுக்கிடையே வௌ;வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்ற அதேவேளை இஸ்ரேலின் குற்றங்களை பார்த்துக்கொண்டு அமைதிகாக்கும் பெரும்பான்மையான யூதர்கள் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பில் மேற்குலகின் பொதுமக்கள் அபிப்பிராயம் என்பனவே முக்கியமாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

அண்மையில் அல்-ஜெஸீரா தொலைக்கட்சி செய்தி வேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது ஒரு இளம் யூதப் பெண், இஸ்ரேல் யூத மக்களின் பெயரால் இத்தகைய மனிதாபிமானமற்ற குற்றங்களை மேற்கொள்வது இனிமேலும் அனுமதிக்கப்படக் கூடாது எனக் குறிப்பிட்டார்.

அனேகமான யூதர்கள், குறிப்பாக மதச்சார்பற்ற அல்லது நாஸ்திக கொள்கையையுடைய யூதர்கள் யூத மதத்துடன் இணைந்ததாக தமது அடையாளத்தை அல்லது அரசியலை கொள்கையை வெளிப்படுத்த விரும்புவதில்லை.

மற்றொரு வகையில் நோக்கினால், இஸ்ரேலின் பயங்கரவாத, மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கெதிராக குரல் கொடுப்பதென்பது இத்தகைய அமைதிகாக்கும் யூதர்களுக்கு இயலாத ஒரு காரியமாக இருக்கலாம். இதற்கு அரசியல் அடக்குமறை மற்றும் பயம் என்பன காரணமாக அமையலாம்.

எவ்வாறாயினும் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் என்னவெனில், பயங்கரவாதம் தொடர்பில் எவ்வாறு முஸ்லிம்களை குற்றம் சாட்ட முடியாதோ அதேபோன்று மேற்கு அரசுகளால் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும குற்றங்கள் தொடர்பில் எவ்வாறு கிருஸ்தவர்களை குற்றம் சாட்ட முடியாதோ அதேபோன்று ஹிட்லரின் இனப்படுகொலைக்கு எவ்வாறு ஆரிய மக்களை குற்றம் சாட்ட முடியாதோ அவ்வாறே சாதாரண பொதுமக்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் அவர்களின் பெயரைக் கொண்டு அவர்களின் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு யூதர்களை குற்றம் சாட்ட முடியாது.


References:

"What price Israel?", Alfred M. Lilienth
"The invention of the Jewish people", Shlomo Sand
"Jews against Israeli occupation', Marwan Bishara
Al-Jazeera Magazine

-Shahull Hameed Mohamed Rizvy
University of Colombo.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்