ஜெரூசல நகரிலுள்ள பலஸ்தீனர்களின் வீடுகளை இடித்துத் தகர்க்கும் இஸ்ரேலின் செயற்பாட்டினால் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் தமது வாழிடங்களை இழந்து இடப்பெயர்வுக்குள்ளாகும் அபாயநிலை தோன்றியுள்ளதாக ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்படி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனித ஜெரூசல நகரில் உள்ள இஸ்ரேலிய முனிஸிபல் கவன்ஸில் ஸில்வான் பகுதியைச் சுற்றியுள்ள பலஸ்தீனர்களின் வீடுகளைத் தகர்க்குமுகமாக 17 கட்டடத் தகர்ப்பு உத்தரவுகளை அண்மையில் வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
அண்மைக் காலமாக சுமார் 90 பலஸ்தீனர்களின் வீடுகள் தகர்ப்பு உத்தரவுகளைப் பெற்றிருப்பதாகவும் அதனால் அவற்றின் உரிமையாளர்கள் தமது வாழிடங்களை இழந்து இடப்பெயர்வுக்கு ஆளாகும் அவலநிலை தோன்றியிருப்பதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகையில், இஸ்ரேல் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் கிழக்கு
ஜெரூசலத்தில் சுமார் 75 பலஸ்தீனக் கட்டடங்களைத் தகர்த்ததன் மூலம் 131 குழந்தைகள் உட்பட 269 பலஸ்தீனர்கள் தத்தமது இருப்பிடங்களை இழந்து இடம்பெயர நேர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
நன்றி : PIC





0 comments:
Post a Comment