_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

லிபியாவில் கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் மக்கள் ஆர்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது கடாபிக்கு விசுவாசமான படைகளில் தாக்குதல்கள் மத்திலும் மக்கள் ஆர்பாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் பாய்டா, பெகாசி , டோப்றுக் போன்ற லிபியாவின் கிழக்கு பிரதேசங்கள் முழுவதுமாக மக்களின் கட்டுபாட்டில் இருப்தாகவும் அங்கு இராணுவம் மக்களுடன் மோதும் நிலை இல்லை என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை டோப்றுக் பிரதேசத்தில் இராணுவத் தளபதி தாம் தமது விசுவாசத்தை மாற்றிவிட்டதாகவும் தற்போது மக்களுக்கு விசுவாசமாக தானும் டோப்றுக் இராணுவமும் இருப்பதாகவும் அல் ஜஸீரா செய்தியாளருக்கு தெரிவித்துள்ளார் அல் ஜஸீரா செய்தியாளர்கள் குழுவொன்று எகிப்தில் இருந்து லிபிய எல்லையை கடந்து 140 கி. மீ பயணித்து டோப்றுக் பிரதேசத்தை அடைந்துள்ளது  விரிவாக தாம் பயணித்த எந்த பகுதிலும் எகிப்து , லிபியா எல்லை உட்டபட எங்கும் இராணுவத்தின் நடமாட்டம் காணப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

பாய்டா, பெகாசி பிரதேசங்களில் இரவு வேலைகளில் ஆயுததாரிகள் குறிப்பாக பிரான்ஸ் மொழி பேசும் ஆபிரிக்க மனிதர்கள் நடமாடுவதாக இவர்கள் சாட் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் மக்கள் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்