_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

லிபிய தேசிய தொலைக் காட்சியில் நேற்று மலை தோன்றிய கடாபி நாட்டின் கிளர்ச்சிக்கு எதிராக இறுதி வரை போராடுவேன் , லிபிய மண்ணில் வீரனாக மரணத்தை தழுவுவேன் நான் பதவி விலகுவதற்கு ஜனாதிபதியல்ல இந்த நாடு என்னுடையது இந்த நாட்டின் தலைவன் நான் நான் அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் எதிராக தொடர்ந்து போராடுவேன் நான் ஒரு புரட்சியாளன் நான் புரட்சி முகாமில் இருந்து வந்தவன் இறுதியில் வீரனாக மரணத்தை தழுவுவேன் மேற்குலகின் எந்த அழுத்ததுக்கும் அடிபணியமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

 

நான் எனது படைகளுக்கு பலவந்தத்தை பயன்படுத்துமாறு இன்னும் கட்டளை பிரபிக்கவில்லை ஒரு குண்டை சுடுமாரும் ஏவவில்லை நான் கட்டளையி டும்போது அனைத்தும் பற்றி எரியும் , எனது ஆதரவாளர்கள் வீடுகளை விட்டு வெளியே வாருங்கள் வீதிகளை நிரப்புங்கள் ஆர்பாட்டகாரர்களை தாக்குங்கள் நாளை – இன்று – முதல் பாதுகாப்பு படையின் முற்றுகை நீக்கப்படும் கடாபியை காதலிக்கும் நபர்கள் உங்களில் வீடுகளில் இருந்து வெளியில் வாருங்கள்   விரிவாக Video லிபிய மக்களும், மக்கள் புரட்சியும் லிபியாவை கட்டுப்படுத்தும் உங்களை எனது ஆதரவாளர்களாக அடையாளப்படுத்தி கொள்ள கையில் பச்சை துணி ஒன்றை கட்டிவாருங்கள் என்று தெரிவித்துள்ளார் பங்காசி முதலான பல நகரங்களில் கடாபிக்கு எதிரான மக்களில் செல்வாக்கு அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றது அதேவேளை இன்று லிபிய உள்நாட்டு அமைச்சர் இராஜினாமா செய்துள்ளதுடன் கடாபி தற்கொலை செய்துகொள்வார் அல்லது கொல்லப்படுவார் என்று தெரிவித்துள்ளார் .

தற்போது லிபியாவில் கடாபியின் நிர்வாகம் மக்கள் மத்தியில் பிரதேச வேற்றுமையை தூண்டவும் , மக்களிடம் வளர்ந்துள்ள மேற்கு உலகிற்று எதிரான மனநிலையை தமக்கு சாதகமான முறையில் திசை திருப்பவும் முயல்வதாகவும் அதேவேளை அல் காதா போன்ற அமைப்புகள் நிலைமையை பயன்படுத்தி இஸ்லாமிய குடியரசு ஒன்றை உருவாக்கி வருவதாகவும் இது மிக பாரிய ஆபத்தானது என்று காட்டும் நாடகங்களில் ஈடுபடுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிகாட்டுகின்றனர்

இதேவேளை கடாயின் நிர்வாகத்துக்கு எதிரான சர்வதேச நிறுவனமயப்படுத்தபட்ட அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றது டாக்டர் யூசுப் அல் கர்ழாவி 'லிபிய இராணுவத்தில் யாருக்கு கடாபி மீது சுட முடியுமோ அவர் அவ்வாறு செய்யவேண்டும்' என்றும் பொதுமக்களை கொலை செய்ய பிறப்பிக்கப்படும் கட்டளைகளுக்கு இராணுவம் அடிபணிய வேண்டாம் என்றும் லிபிய இராணுவத்தை கோரியுள்ளார் என்பதும் குறிபிடத்தக்கது.

courtesy to ourummah.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்