_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

லிபிய ஆர்பாட்டங்கள்..

கடந்த 14ஆம் திகதி தொடக்கம் நிகழ்ந்து வரும் ஆர்பாட்டங்கள் நேற்று திங்கள் கிழமை இரவு லிபிய தலைநகரிலும் தடைகளை உடைத்தவண்ணம் இடம்பெற்றுள்ளது நேற்று நடந்த மக்கள் ஆர்பாட்டங்கள் மீது கடாபியின் இராணுவம் சுட்டதிலும் , விமானம் மூலம் குண்டுகளை வீசியதிலும் 60 பேர் கொல்லபட்டுள்ளனர் கடாபிக்கு ஆதரவான இராணுவம் மக்களை கடுமையான முறையில் ஒடுக்கிவருகின்றது.


இது வரை 400 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள தெரிவித்துள்ளன.


இந்த இராணுவ கொலைகளை கண்டித்து லிபியாவின் நீதி அமைச்சர் இராஜினாமா செய்துள்ளார் அமெரிக்காவுக்கான லிபிய தூதுவர் படுகொலைகளை தான் கண்டிபதாக தெரிவித்துள்ளார் அதேவேளை ஐநா வுக்கான லிபிய ராஜதந்திரிகள் சர்வதேச நாடுகள் தலையிட்டு லிபிய அரசின் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

நடை பெரும் மனித படுகொலைகள் சர்வதேச சமுகத்தை தூண்டும் செயல் என்றும் ஐநா இந்த விடையத்தில் தலையிடவேண்டும் என்றும் குற்றவாளிகள் சர்வதேச இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும் என்றும் குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன இதேவேளை கடாபி நாட்டை விட்டும் வெளியேறி சென்றுள்ளார் என்ற தகவல் வெளியானது இதனை மறுக்கும் வகையில் லிபியா தேசிய தொலைக் காட்சியில் தோன்றிய கடாபி தான் திரிபோலியில்தான் இருப்தாகவும் சர்வதேச ஊடகங்கள் குரைக்கும் நாய்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து ஐநா பொது செயலாளர் பாகீ மூன் லிபியாவில் மனித உரிமை , மக்கள் ஒன்று கூடும் உரிமை , கருத்துரிமை ஆகியன கண்டிப்பாக முழுமையாக பாதுக்காக்கப் படவேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் இதேவேளை லிபிய இராணுவ அணி ஒன்று மக்களின் ஆர்பாட்டங்களுக்கு இராணுவ வீரர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்று அது வெளியிட்ட பிரசுரம் ஒன்றில் வலியுறித்தியுள்ளது நேற்று முன்தினம் லிபியாவின் 50 இமாம்கள் கூட்டாக லிபிய இராணுவத்துக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் பொதுமக்களை சுட்டு கொல்வதை நிறுத்துமாறும் பொது மக்களை கொலைசெய்வதை அல்லாஹ்வும் அவனில் தூதரும் தடுத்துள்ளார் என்றும் தெரிவித்திருந்தனர் என்பது குறிபிடத்தக்கது லிபியாவின் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களை சுட மறுத்த இராணுவ வீரர்கள் இராணுவத்தினால் கொலைசெய்யப்பட்டு எரிக்கபட்டுள்ள காட்சிகள் அடங்கிய வீடியோகள் youtube இல் வெளியாகியுள்ளது
கடாபியின் மகனின் தலைமயில் இராணுவம் மக்களை மிகவும் கடுமையாக ஒடுக்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன நேற்று லிபியா தேசிய தொலைக் காட்சியில் தோன்றிய கடாபியின் மகன் ஸைபுல் இஸ்லாம் அரசியல் மறு சீரமைப்பு ஒன்றை வாக்களித்ததுடன் அவர் தலைவர் கடாபி முன்வைக்கும் அரசியல் மறு சீரமைப்பை ஏற்றுகொள்ளுமாரும் தவறினால் லிபியா 30- 40 வருடங்கள் உள்நாட்டு யுத்தத்தை சந்திக்கும் என்றும் லிபியா துனுசியா அல்லது எகிப்து போன்றது அல்ல இறுதி வரை போராடும் என்றும் நாட்டின் இராணுவம் கடாபிக்கு பக்கபலமாக இருப்தாகவும் இறுதி துப்பாக்கி குண்டு இருக்கும் வரை போராடும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது இன்றும் மக்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது- இணையம் , தொலை தொடர்பு அனைத்து வகை தொடர்பாடல்களும் துண்டிக்கப்பட்டுள்ளது
லிபியாவின் மக்களின் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிகின்றன இது வரை 1000பேராவது கொல்லப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன என்று பிரஸ்டிவி தெரிவிக்கின்றது லிபியாவின் ராஜதந்திரிகள் பலரும் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதுடன் கடாபி பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளனர்.
ஆர்பாட்டம் செய்யும் மக்கள் நேரடியாக சுட்டு கொல்லப்படுகின்றனர் கடாபிக்கு ஆதரவான இராணுவம் மக்கள் வீதிக்கு இறங்கவேண்டாம் என்று ஒலி பெருக்கில் மூலம் அறிவித்து வருகின்றது.யுத்த களங்களில் பயன்படுத்தப்படும் விமானங்கள் திரிபோலி நகரங்களில் குண்டுகளை வீசி வருகின்றது இந்த நிலை தொடர்பாக அல் ஜஸீராவுக்கு கருத்துரைத்துள்ள சர்வதேச முஸ்லிம் புத்திஜீவிகள் அமைப்பின் தலைவரும் உலக புகழ்பெற்ற இஸ்லாமிய புத்ஜீவியுமான டாக்டர் யூசுப் அல் கர்ழாவி 'லிபிய இராணுவத்தில் யாருக்கு கடாபி மீது சுட முடியுமோ அவர் அவ்வாறு செய்யவேண்டும்' என்றும் பொதுமக்களை கொலை செய்ய பிறப்பிக்கப்படும் கட்டளைகளுக்கு இராணுவம் அடிபணிய வேண்டாம் என்றும் லிபிய இராணுவத்தை கோரியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்