_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...
பெப்ரவரி 11, வெள்ளிக்கிழமை : எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் தனது 30 வருடகால சாம்ராஜ்ஜியத்திலிருந்தும்,
தனது அதிபர் பதவியிலிருந்தும் தூக்கியெறியப்பட்ட நாளாக, ஓர் வரலாற்றுப்பதிவு நிகழ்ந்த தினமாக மாறிவிட்டது.
- தனது அனைத்து அதிகாரங்களையும், இராணுவத்தின் சுப்ரீம் கவுன்சிலுக்கு கையளித்துவிட்டு, முபாரக் அதிபர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக துணை அதிபர் ஒமர் சுலைமான் வெள்ளிக்கிழமை மாலை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.

- வீடு, உற்றம் சுற்றம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு 19 நாட்களாக தஹ்ரீர் சதுக்கத்தில் கூடாரம் அடித்து காத்திருந்த மக்கள் கூட்டம் இவ் அறிவிப்பு வெளியானதும், கண்ணீருடனும், வெற்றிப்பெருக்குடனும், மகிழ்ச்சியுடன், நன்றியுடன், பெருமையுடனும் ஒருவரை ஒருவரை ஆரத்தழுவிக்கொண்ட காட்சி படம் பிடித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களையும் நெகிழச்செய்தது.
- இப்பொழுது எகிப்திய அரசியல் மட்டத்தில் மட்டுமல்லாது, உலகமே கண்காணித்துக்கொண்டிருக்கும், புதிய நபர் எகிப்திய பாதுகாப்பு அமைச்சர் ஹுசெய்ன் தன்தாவி. மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கைக்குரியவராக இப்போது திகழ்பவர். இவர் இடையில் ஒரு நாள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச வந்த போது, எதிர்பாராத விதமாக ஆர்ப்பாட்டக்காரர்களே அவருக்கு உரிய பாதுகாப்பையும், தக்க மரியாதையும் அளித்திருந்தனர்.


- எதிர்க்கட்சி தலைவரும், நோபல் பரிசு வென்ற எழுத்தாளருமான மொஹ்மட் எல்படரெய், 'எகிப்திய மக்களின் கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்று கூறியுள்ளார்.
- எகிப்திய மக்கள் இன்று எப்படி உணர்கிறார்கள் என என்னால் கூறமுடியாது என அல்ஜசீரா செய்தி சேவைக்கு கூறிய அவர், எமது மனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் மீள் கட்டியெழுப்ப வேண்டிய தருணமிது என அவர் கூறினார்.
- எகிப்து புதிதாய் பிறந்தது போன்றும், அம்மக்கள் புதிதாய் பிறந்தது போலவும் காட்சியளிப்பதாகவும் இருக்கிறார்கள் என்கிறார்கள் தஹ்ரீர் சதுக்கத்திலிருக்கும் ஊடகவியலாளர்கள்!
- இது முபாரக்கை பதவியிலிருந்தி இறக்கிய தருணம் மட்டுமல்ல, ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்திய தருணமிது என எகிப்தின் இரண்டாவது மிகப்பெறும் நகரமான அலெக்ஸ்டாண்ட்ரியாவில் கூடியிருக்கும் ஆர்ப்பாட்ட காரர்களில் ஒருவர் தெரிவிக்கிறார்.
- ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளும் முபாரக்கின் முடிவுக்கு மரியாதை செலுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின், வெளிநாட்டு பிரிவு தலைவர் கதெரின் அஷ்டொன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம், எகிப்திய மக்களின், முயற்சிக்கு கௌரவமளிக்க வேண்டுமென தெரிவித்த அவர், இடைக்கால அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், எகிப்தை புதிய பாதையில் கட்டியெழுப்ப அனைத்து வகையிலும் உதவ தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
- இவ்வெள்ளிக்கிழமை இறுதி நாள் ஆர்ப்பாட்டட்தை, பிரியாவிடை ஆர்ப்பாட்டமாக மக்கள் அறிவித்துள்ளனர். முன்னைய வியாழக்கிழமை இரவு, தான் செப்டெம்பர் வரை பதவியில் தொடர்ந்து நீடிக்க போவதாக முபாரக் அறிவித்த போது, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்ட மக்கள் கூட்டம், ஆர்ப்பாட்டத்தை மேலும் அதிகரிக்கத்தான் போகிறது என்பதை முபாரக் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். வெள்ளிக்கிழமை, எகிப்து தேசிய தொலைக்காட்சி, அதிபர் மாளிகை, தஹ்ரீர் சதுக்கம் ஆகியவற்றை முற்றுகையிட்ட பொதுமக்கள் கூட்டத்தை பார்த்து, அன்றைய தினமே பதவிவிலகுவதை தவிர வேறு வழியில்லை என்பதை முபாரக் புரிந்துகொள்வார் என மக்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
- வேறு வழியில்லாது, இன்று வெள்ளிக்கிழமை முபாரக்கின் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடுவதற்கு மக்கள் கூட்டம் ஊர்வலமாக படையெடுக்கத்தொடங்கியதும், அதை தடுக்க இராணுவம் படாத பாடு பட்டதும், இக்கலவரங்களுக்கு இடையில் ஒருவர் உயிரிழந்ததும் முபாரக்கின் பதவி விலகல் முடிவை உடனடியாக எடுக்க வைத்திருக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
- அடுத்த மக்கள் தேர்தல் வரை, இடைக்கால அரசை தாம் பொறுப்பெடுத்துள்ளதாகவும், ஆக்கபூர்வமான முறையில் நாட்டைகட்டியெழுப்ப முனைவதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.
- எகிப்திய மக்கள் புரட்சி வெற்றிபெற்றது தொடர்பில் சவுதி அரேபியா, ஹமாம் இயக்கம், உட்பட இஸ்லாமிய நாடுகள் பலவும், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து உட்பட பிரான்ஸ் நாடுகள் பலவும், தமது வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
- அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலிருந்து இம்மக்கள் புரட்சியின் வெற்றியை தொலைக்காட்சி வழியாக பார்த்துக்கொண்டிருந்தார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா!
- இப்போது என்ன சொல்ல போகிறார் அவர்? மத்திய கிழக்கை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சித்த நாட்டிற்கு இப்போது கிடைத்திருப்பது தோல்வியா? அல்லது பாடமா?
- பதவி விலகிய முபாரக்கிற்கு தனது 30 வருட ஆட்சியில் இறுதியில் கிடைத்திருப்பது தோல்வியா? பாடமா?
-எகிப்திய மக்களின் விடிவுக்காக, உலகில் யாருக்கும் இலகுவில் கிடைத்திடாத கூகுள் நிறுவன உயர் பதவியையும் துறந்து, சிறைக்கு சென்று வந்து, உயிரை விடவும் தயார் என கூறிய ஆர்ப்பாட்டத்தை தொடங்க காரணமாக இருந்த இளைஞர் வேல் கோனிமுக்கு கிடைத்திருப்பது வெற்றியா? இல்லை வெகுமானமா?


Courtesy to 4tamilmedia

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்