_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...


ஐநா பாதுகாப்பு சபையில் காடாபி மக்கள் ஆர்பாட்டங்களை மோசமாக அடக்க முயன்றமைக்கு   எதிரான தீர்மானங்கள் நேற்று  15 உறுப்பு நாடுகளினாலும் ஆதரவை பெற்று நிறைவேறியுள்ளது லிபியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை தடை, கடாபியின் சொத்துக்கள் முடக்கம் அத்துடன் கடாபி ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களை மிகவும் மோசமாக் ஒதுக்கியமை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும் குற்றவாளிகள் தண்டிக்க படவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.


மேலும் கடாபி மற்றும் அவரின் வயது வந்த பிள்ளைகள்  அவரின் தளபதிகள் உதவியாளர்கள் போன்றவர்களுக்கு எதிராக  பிரயாணத்  தடை விதித்துள்ளது , அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடாபி உடனடியாக பதவி விலகவேண்டும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று தெரிவித்துள்ளார் விரிவாக  அதேவேளை கடாயின் அரசாங்கத்தில் நீதி அமைச்சராக   இருந்து  சில கடந்த வாரம் இராஜினமா செய்த    முஸ்தபா  அப்துல்  ஜலீல்    லிபியாவின் கிழக்கு பிரதேசத்தில் ஆர்பாட்ட தரப்புடன் பேசி வருவதாவும் ஒரு லிபிய இராணுவம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்யும் தரப்பையும்  உள்ளடக்கிய அமைப்பு  ஒன்று தேர்தலை எதிர்கொள்ள மூன்று மாதங்களுக்குள் தோன்றும் என்று தெரிவித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன இந்த முயற்சிகளுக்கு லிபியாவின் ஐநாவுக்கான் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவிதுள்ளதாகவும்   தெரிவிக்கப்படுகின்றது

அதேவேளை அனைத்து  வன்முறைகளையும் அடக்குவோம். நான் மக்கள் மத்தியில் இருக்கிறேன். தொடர்ந்து போராடுவேன். எந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளையும் தோற்கடிப்போம்  லிபியா பற்றி எரியும் என்று கடாபி நேற்று தெரிவித்துள்ளார்

அதேவேளை இஹ்வானுல் முஸ்லிமீன் அரபு நாடுகளில் வெளிநாடுகளின்   தலையீட்டை தாம் ஆதரிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

Courtesy to Ourummah

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்