_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

மேற்குலக நாடுகள், முக்கியமாக அமெரிக்கா, பதவியில் இருந்து விலக்க நினைக்கும் அரசத்தலைவர்களில் வட கொரியாவின் கிம் ஜொங், ஜிம்பாவேயின்ரொபேர்ட் முஹாபே, கியூபாவின் fஇடெல் காஸ்ரோ, லிபியாவின் மும்மர் கடாபி ஆகியோர் முக்கியமானவர்.

நீண்டகால ஆட்சியாளர்.
இப்போது உள்ள அரச தலைவர்களில் மிக நீண்ட காலம் பதவியில் இருப்பவர் லிபியத் தலைவர் மும்மர் கடாபி. மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர். உலகெங்கும் உள்ள பல விடுதலை இயக்கங்களுக்கு உதவுபவர் என்று பல மூன்றாம் உலகநாடுகளின் மக்களால் போற்றப் படுபவர் மும்மர் கடாபி. 1969-ம் ஆண்டு ஒர் ஆயுதப் புரட்சி மூலம் அப்போது அரசாராக இருந்த இட்றிஸை பதவியில் இருந்து அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியவர் மும்மர் கடாபி. அப்போது அவருக்கு வயது 27. அப்போது அவர் சிறந்த புரட்சியாள்ராகவும், புதிய சேகுவேராவாகவும் மதிக்கப்பட்டார்.
கடாபி இஸ்லாமையும் சோசலிசத்தையும் கலந்து பசுமைப் புரட்சி என்ற நூல் எழுதினார்.

விடுதலை இயக்கங்களுக்கு உதவிய கடாபி

காடாபி கறுப்பு செப்டம்பர் இயக்கத்திற்கு நிதி உதவுவதாக கூறப்பட்டது. 1972இல் ஜேன்மன் முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைக் கொன்றது கறுப்பு செப்டம்பர் இயக்கம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. கடாபி பல்வேறு விடுதலை இயக்கங்களுக்கு செய்த உதவியால் அவரை ஒரு பயங்கரவாதிகளிக்கு நிதி வழங்குபவராக அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது. முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரொனால்ட் ரீகன் கடாபியை மத்திய கிழக்கின் விசர் நாய் என்றும் அவரது லிபியா ஒரு பறையர் நாடு என்றும் விமர்சித்தார்.( தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு போன வார்த்தைகளுக்குள் பறையர் உம் ஒன்று).


கடாபியை கொல்ல முயன்ற ரீகன்
1986இல் அமெரிக்க விமானங்கள் லிபியாவின் கடாபியின் இருப்பிடங்களில் குண்டுகளை வீசி அவரைக் கொல்ல முயன்றன. நிலக்கீழ் அறையில் இருந்ததால் கடாபி உயிர் தப்பினார். கடாபியின் வளர்ப்பு மகன் அதில் கொல்லப்பட்டார்.

மும்மர் கடாபியின் மீது இப்போது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்:
  • அவரது ஆட்சி உலகிலேயே மோசமான அடக்கு முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட ஆட்சி
  • மும்மர் கடாபியின் லிபிய நாட்டில் எந்த பத்திரிகைச் சுதந்திரமும் இல்லை.
  • முறை கேடான ஆட்சி
  • பெண்பித்தர்.
மும்மர் கடாபி ஒர் உக்ரேய்ன் நாட்டு கவர்ச்சிகரமான மருத்துவத் தாதியுடன் காதல் வசப்பட்டதாக விக்கிலீக் தகவல்கள் கசியவிட்டது




.
இரு வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட பிள்ளைகள். சர்வாதிகார அடக்கு முறையாளராகினாரா இளம் புரட்சியாளர்?
லிபிய மக்கள் பலர் மும்மர் கடாபியின் ஆட்சியில் அதிருப்தி அடைந்து எகிப்து துனிசியா பாணி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் எண்னிக்கையையும் ஆவேசத்தையும் பார்க்கும்போது புரட்சியாளராக வந்தா கடாபி இப்போது ஒரு அடக்குமுறைச் சர்வாதிகாரியாக மாறிவிட்டார் என்பதை உறுதி செய்கிறது. மும்மர் கடாபியின் ஒரு மகனான சயிf கடாபி லிபியாவில் ஒரு மேற்கத்திய பாணி அரசு அமைவத விரும்புகிறார். ஆனால் அவரது தம்பி முத்தாசிம் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர். லிபியாவில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழத் தொடங்கியபின் இருவருக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்து விட்டதாக பெப்ரவரி 20-ம் திகதி சில வதந்திகள் பரவின. அதில் சயிf கொல்லப்பட்டதாகவும் வதந்திகள் பரவின. பின்னர் சயிf தொலைக்காட்சியில் தோன்றி தந்தையின் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்வோரைக் கடுமையாக எச்சரித்துள்ளார். கடைசி நிமிடம் வரை கடைசித் துப்பாக்கிக்குண்டு இருக்கும்வரை தாம் போராடுவேம் என்று அறிவித்தார். கடாபியின் மகன் கூறிய முக்கியமானவை:
  • நாம் துனிசியர்களோ அல்லது எகிப்தியரோ அல்லர்.
  • எமது நாட்டை இத்தாலியர்களுக்கோ அல்லது துருக்கியர்களுக்கோ விட்டுக் கொடுக்க மாட்டோம்.
  • சில படைத்தளங்கள் ஆயுதங்கள் கிளர்ச்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
  • லிபியப்பாரளமன்றம் இன்று(திங்கட்கிழமை) கூடி அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி ஆராயும்.
  • சில தடைகள் நீக்கப்படும்.
  • லிபியா விழ்ச்சியடைந்தால் இங்கு மேற்கு நாடுகள் தளம் அமைக்கும்.
சயிf கடாபியின் கூற்றை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. கடாபி அரசு மற்ற ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்த கூலிப்படையினரை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஏவி அவர்களைக் கொல்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. எகிப்தில் கொல்லப்பட்ட மக்களிலும் பார்க்க அதிக மக்கள் லிபியாவில் கொல்லப்படுகின்றனர். அரச படைகள் சில ஆயுதங்களுடன் பிரிந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து விட்டனர். லிபியாவின் வளம் மிக்க கிழக்குப் பகுதி ஆர்ப்பாட்டக்காரர்களின் கைகளில் விழுந்து விட்டது. மேலும் பல பகுதிகள் விழுந்து கொண்டிருக்கின்றன.

பென்காஜி ஆர்ப்பாட்டக்காரர்கள் வசம்
லிபியாவின் கிழக்குப் பிராந்திய நகரான பென்காஜி ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில். அங்குள்ள வானொலி நிலையத்தை அவர்கள் கைப்பற்றி வலைத்தளங்கள் மூலம் தங்கள் செய்திகளை பரப்பி வருகின்றனர்

மோசமான இரத்தக்களரி
எகிப்தைப் போலவோ அல்லது துனிசியாவைப்போலவோ லிபியாவில் அதன் தலைவர் கடாபி இலகுவில் பதவியில் இருந்து விலகிவிடப்போவதில்லை. அவருக்கு விசுவாசமான படையினர் கணிசமாக இருக்கின்றனர். கடாபிக்கு ஆதரவானவர்கள் கடாபிக்கு எதிரான ஆற்ப்பட்டக்காரர்கள்மீது தாக்குதல்கல் நடத்துகின்றனர். உலங்கு வானுர்தியில் வந்தும் கடாபியின் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்துகின்றனர். அரச படையில் இருந்து விலகியவர்க்ளுக்கும் அரசின் சிறப்புப் படையணிக்கும் மோதல் வெடித்தால் விளைவுகள் மோசமானதாக இருக்கும். வரும் நாட்களில் மோதல்கள் தீவிரமடையும். உயிரிழப்புக்களும் அதிகமாக இருக்கும்.











0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்