_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் புர்கா அல்லது நிகாப் என்று அழைக்கப்படும் முகத்திரை அணிவதை முற்றாக தடை செய்யும் சர்ச்சைக்குரிய இனவாத சட்டமொன்றை பிரான்ஸ் கடந்த திங்கட் கிழமை (ஏப்ரல் 11) அமுலுக்கு கொண்டுவந்துள்ளது. இச்சட்டமானது 2004 இல் இருந்து அமுலில் இருந்து வரும் பாடசாலைகளில் மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்யும் சட்டம் மற்றும் அரச அலுவலகங்களில் புர்கா அணிந்து வேலைசெய்வதை தடைசெய்யும் சட்டம் என்பற்றின் முற்றிலுமான நீடிப்பாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இச்சட்டத்தை மீறி புர்கா அணிபவர்களிடமிலுந்து 150 யூரோகள் அபராதமாக அறவிடப்படும் என்றும் நிகாப் அணிய வற்புறுத்துபவர்கர் எவரும் ஒரு வருட சிறைத்தண்டனைக்கும் 41000 டொலர்கள் அபராதமாக செலுத்த நேரிடும் என்றும் இச்சட்டம் குறிப்பிடுகின்றது.

பிரான்ஸ் 70 இலட்சம் முஸ்லிம்களை சிறுபான்மையாகக் கொண்ட நாடாகும். ஐரோப்பாவில் இது மிகப்பெரும் முஸ்லிம் பெரும்பான்மையாகக் கருதப்படுகின்றது. முஸ்லிம்கள் இங்கு சிறுபான்மையாக இருப்பதால் இப்புர்கா தடை சட்டம் இனவாத அல்லது இனத்துவேச சட்டமாகவே பலராலும் நோக்கப்படுகின்றது.



இச்சட்டம் அமுழுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து பாரிஸ் நகரில் இச் சட்டத்தின் மீதான தமது அதிருப்தியை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இத்தடை சட்டம் உலகம் பூராகவும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பையும் மேற்குலகின் மீதான அதிருப்தியையும் தோற்றுவித்துள்ளது.

ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள இஸ்லாத்தின் அதீத வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத இஸ்லாத்தின் எதிர்ப்பு சக்திகள் இஸ்லாத்தின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் பல்வேறு சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய இஸ்லாத்திற்கெதிரான சதி முயற்சிகளில் ஒன்றாகவே பிரான்ஸின் புர்கா தடையும் நோக்கப்பட வேண்டும்.


இத்தடை சட்டமானது பல்வேறு மனித உரிமை அமைப்புக்களால் மனித உரிமை மற்றும் சிறுபான்ம உரிமைகளின் ஒட்டுமொத்த மீறலாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இத்தடை சட்டம் மனித உரிமை தொடர்பான ஐரோப்பிய சமவாயத்திற்கு(European Convention on Human Rights-ECHR) முற்றிலும் முரணானதாகும். மத சுதந்திரம் (Freedom of religion), தனியாள் சுதந்திரம் (Personal liberty), கலாசார சுதந்திரம் என்பன பல்வேறு சர்வதேச சமவாயங்கள் மற்றும் உள்ளாட்டு சட்டங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன.

மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் ஜாம்பவான்கள் என்றும் முன்னோடிகள் என்றும் தம்மைத்தாமே புகழ்ந்துரைத்துக்கொள்ளும் மேற்கத்தியவாதிகள் தமது சொந்த நாட்டிலேயே முஸ்லிம்களின் மத சுதந்திரத்தையும் கலாசார சுதந்திரத்தையும் பட்டாப்பகலில் குழிதோன்றி புதைத்துவிட்டனர்.

பன்மைத்துவத்தை (Plurality) தமது நாடுகளில் முன்னேற்றுகின்றோம் என பெருமையடித்துக்கொள்ளும் மேற்கத்திய ஆட்சியாளர்ளர் சிறுபான்மை முஸ்லிம்களின் கலாசார, சமய அனுஷ;டானங்களையும் விழுமியங்களையும் இல்லாதொழித்து இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட எண்ணுகிறார்களா? அல்லது இவற்றின் மூலம் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முனைகின்றார்களா?

பேஷன் என்ற பேரிலும் மொடல்ஸ் என்ற பேரிலும் பெண்களை முழு நிர்வாணமாக்கி ஆண்களுக்கு காட்சிப்பொருட்களாகவும் பொதுச்சொத்துக்களாகவும் மாற்றி, அனாகரிகங்களையும் அசிங்கங்களையும் அதி சிறந்தவைகள் என்று மாயை போட்டு நவீன முட்டாள்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் மேற்கத்திய சடவாதம் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள அந்தஸ்தையும் கௌரவத்தையும் குறைத்து மதிப்பிடுகின்றது.

மேற்கு நாகரீகங்களோ அல்லது புகழின் உச்சத்தில் கொடிகட்டிப் பறந்த கிரேக்க நாகரிகமோ பெண்களுக்கு எந்தவொரு அந்தஸ்தையும் வழங்கவில்லை. சுருங்ககூறின், பெண்களை பெண்கள் என்றே கருதவில்லை. பெண்களை தாழ்ந்த படைப்புக்கள் என்றும் ஆண்களுக்கு அடிமைகள் என்றும் சாத்தான்களின் சின்னமாகவுமே அவை கருதின. இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு உரிய அந்தஸ்தை வழங்கியது. பெண் பிள்ளைகளை உயிரோடு புதைத்த ஜாஹிலிய்ய அரேபிய சமூகத்திலிருந்து பெண்களை மீட்டெடுத்தது. பெண்களுக்கு முதன் முதலில் சொத்துரிமை வழங்கிய மார்க்கம் இஸ்லாமே.

இஸ்லாம் பெண்களை தாய் என்ற நிலையிலும் மனைவி என்ற நிலையிலும் சகோதரி என்ற நிலையிலும் வைத்து கௌரவப்படுத்துகின்றது. பெண்களை சமூகத்தின் தூண்களாக முக்கியத்துவப்படுத்தி பெருமைப்படுத்துகின்றது. மேற்குலக நவீனத்துவ மற்றும் சடவாத கொள்கைகளை போன்று பெண்களை நிர்வாணப்படுத்திப் பார்க்காமல் அவர்களின் ஒழுக்கம் மகிமை என்பவற்றை முன்னேற்றுகின்றது.

பெண்கள் தமது உடலை வெளிக்காட்டுவதையே அவர்களின் சுதந்திரமாகக் கருதும் நவீன சடவாதம் ஒழுக்க விழுமியங்களை முற்றாக குழிதோன்றி புதைத்துவிட்டது.

முழு நிர்வாணம் (nudity or nakedness) அல்லது பொது இடங்களில் தமது உடலை காட்சிப்படுத்தல் (Public exposure) போன்ற குற்றங்களுக்கெதிராக தடைச்சட்டங்கள் எதனையும் கொண்டிராத பிரானஸ் முஸ்லிம் பெண்கள் நவீன அநாகரிகங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அணியும் புர்காவுக்கெதிரான முழுமையான தடைச்சட்டத்தை அமுழுக்கு கொண்டுவந்தமை தான் வேடிக்கையான விடயமாகும். இத்தகைய குற்றங்கள் மேற்கு நாடுகளில் மலிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கற்பழிப்பு, கன்னிகலைப்பு, குடும்ப உடலுறவு (Incest) போன்ற அசிங்கமான குற்றங்களின் தோற்றுவாய்கள் மேற்கு நாடுகளே. இவை இன்று சர்வசாதாரண விடயங்களாக மாறிவிட்டன. இவற்றுக்கெல்லாம் காரணம் மேற்குலகம் பெண்களுக்கு வழங்கியுள்ள மிதமிஞ்சிய பெருமானமற்ற சுதந்திரமாகும்.

மேற்குலகு பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பொருளற்றவை, பெருமதியற்றவை. அவை ஒழுக்க விழுமியங்களை உள்ளடக்காதவை. பெண்களின் சுபீட்சத்திற்கோ அவர்களின் முன்னேற்றத்திற்கோ எந்த வகையிலும் உதவியளிக்காதவை. அவை குற்றங்கைளை அதிகரிக்கச் செய்யும். அசிங்கங்களையும் அநாகரிகங்களையும் புதிது புதிதாக தோற்றுவிக்கவல்லவை.

பெண்களின் சுபீட்சத்திற்கும் முன்னேற்றத்திற்கும் இட்டுச்செல்லக்கூடிய பெருமானமுடைய, உன்னதமான, உண்மையான உரிமைகளையும் சுதந்திரத்தையும் இஸ்லாம் இவர்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் இவை 'குருடன் கண்களுக்கு யாவும் இருட்டுத்தான்' என்றாற் போல் மேற்கத்திய வாதிகளின் கண்களுக்கு பெண்கள் மீதான அடக்குமுறைகளாகவே காட்சியளிக்கின்றன. அதனால்தான் இவர்கள் புர்கா தடை போன்ற இஸ்லாத்திற்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களோ என்று சிந்திக்க தோன்றுகிறது.

S.H.M Rizvy LL.B(Col)
Freelance writer.

References:

Al-Jazeera.english.net
Abdullahhasan.net
Onislam.net


----------------------------------------

http://uthayem.blogspot.com/

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்