_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...
NATO starts Libyan surveillance, while U.S., UK, France mull no-fly zone

அமெரிக்கா உட்பட மேற்கு வல்லரசு நாடுகள் மனிதாபிமானத் தலையீடு என்ற போர்வையில் லிபியாவின் மீது மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக லிபியா மற்றுமொரு ஈராக் ஆகவோ அல்லது ஆப்கானிஸ்தானாகவோ போர்கள் நிறைந்த பூமியாக உருமாறி வருகின்றது. ஓய்வின்றி நாட்டின் நாலபாகங்களிலும் தொடரும் யுத்தத்தினால் மனிதாபிமான அவலங்கள் நாளுக்குக் நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடாபியின் ஆதரவு படைகளுக்கும் எதிர்ப்பு படைகளுக்குமிடையே மாறிமாறி இடம்பெற்றுவரும் மோதல்களால் அப்பாவி பொதுமக்கள் பலியாக்கப்பட்டுக்கொண்டிருக்கிரார்கள்.
பிரெஞ்சு, பிரிட்டிஷ், அமெரிக்க விமானங்கள் லிபியாவில் குண்டுவீசி கடாபியின் பிடியிலிருந்து மனித உயிர்களைக் காப்பாற்றுவது என்ற போலியான கோஷத்திட்கெதிராக ஆயிA Libyan youth who has joined the forces against Libyan leader Moammar Gadhafi helps organize ammunition at a military base in Benghazi, eastern Libya, Tuesday.க்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொள்ளப்பட்டுவருகின்றனர். சகல இராணுவ பலங்களையும் கொண்ட இராணுவ வல்லரசுகள் ஒன்றுசேர்ந்து கடாபியின் எதிர்ப்பு படைகளுடன் இணைந்து கடாபியின் ஆதரவுப்படைகளை இதுவரை தோற்கடிக்க முடியவில்லை. ஏகாதிபத்திய போட்டிகளுக்கு மத்தியில் அரசியல் பொருளாதார நலன்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் லிபியாவில் செயற்படும் வல்லரசு படைகள் தமது நலன்கள் அடையப்படும் வரை ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடந்ததைப் போன்று லிபியாவையும் யுதத்தக் களமாக்கி வேடிக்கை பார்க்கும் பழக்கத்தை தொரந்தும் முன்னடுத்துக்கொண்டிருக்கின்றன. இது ஓர் ஏகாதிபத்திய யுத்தமாகும். . லிபியா ஒரு ஒடுக்கப்பட்ட, முன்னாள் காலனித்துவ நாடாகும். இத்தகைய நாடுகளின்மீது ஏகாதிபத்திய சக்திகளால் நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் நாட்டில் ஒருபோதும் சுபீட்சத்தை ஏற்படுத்தாது. மாறாக அவை நாட்டை அழிவுப்பாதைக்கே இட்டுச்சென்று கொண்டிருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த யுத்தம் ஜனநாயகரீதியான எந்த அங்கீகாரமும் இல்லாமல் நடந்தேறி வருகின்றன. மேலும் சம்பந்தப்பட்ட நாடுகளின் மக்கள் இதனை ஆதரிப்பதான எந்த அறிகுறியும் தெரியவில்லை. சமூகத் திட்டங்களுக்கு பணமில்லை என்று அறிவிக்கும் அதே அரசாங்கங்களாலேயே மீண்டுமொருமுறை ஒரு யுத்தத்திற்கு பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது.

கடாபியின் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது தான் ஒரு இரத்தக்கறை படிந்த சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு ஜனநாயக எதிர்ப்பு இயக்கத்தை தாங்கிப் பிடிக்கும் என்று கூறுவோர் பின்வரும் கேள்விக்கு பதிலளித்தாக வேண்டும்: ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் எழும் அனைத்துவித எதிர்ப்புக்கு எதிராகவும் காட்டுமிராண்டித்தனமான வன்முறையைக் காட்டிவரும் ஆட்சிகளுக்கு எதிராக, இந்த பெரும் சக்திகள் ஏன் இதே மாதிரியான முன்னெடுப்புக்களை மேட்கொள்ளவில்லை? அடுத்து, அமெரிக்காவின் ஐந்தாவது கப்பற்படைத் தொகுதியின் தலைமையிடமாக இருக்கும் பஹ்ரெயினில், ஷேக் அல் கலீஃபா சவூதி ஆதரவுடன், நிராயுதபாணியான போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளி உள்ளார், அதற்கென்ன பதில்? காசாவில் என்ன நடக்கிறது, இதே சக்திகள் தானே இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்வதில் சேர்ந்து நிற்கின்றன? ஏமனில் என்ன நடக்கிறது, அங்கே மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சலே ஒரு சில வாரங்களுக்கு முன்னர் சுமார் 50 போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளினாரே? மேலும் சிரியாவில் பொதுமக்கள் தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கையால் பலியாக்கப்பட்டுக்கொண்டிருக்கிரார்களே   

துனிசிய ஆட்சியிலிருந்து ஜைன் எல் ஆப்தீன் பென் அலி, மக்கள் பேரெழுச்சியால் தூக்கிவீசப்பட்டு வெறும் இரண்டு மாதங்கள் தான் ஆகிய நிலையில் அதனைத் தொடர்ந்து அதற்கடுத்த ஒரு மாதத்திலேயே எகிப்திய ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கும்  தூக்கியெறியப்பட்டார். அவற்றின் விளைவு, மேற்கத்திய சக்திகள் அப்பிராந்தியத்தில் அவற்றின் முக்கியமான இரண்டு கூட்டாளிகளை இழந்துள்ளது. 

அமெரிக்காவும், ஐரோப்பாவும் கடாபியோடும், இந்த சர்வாதிகாரிகளோடும் கடைசி நிமிடம் வரையில் நெருக்கமாக இணங்கியிருந்தனர். லிபியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கைக்கு உரக்க கூச்சலிட்ட பிரான்ஸ், பென் அலிக்கு எதிராக முழுவீச்சில் எழுச்சிகள் நடிபெற்ற  போது அவருக்கு பொலிஸ் உதவியை அளிக்க முன்வந்தது.

ஒரு காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரியும், மேற்கத்திய சக்திகளின் ஒரு நெருங்கிய கூட்டாளியுமான கடாபிக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பு, தொடக்கத்தில் வேண்டுமானால் லிபிய மக்களின் நிஜமான மனக்குறைகளை வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால் அபிவிருத்தி குன்றிய பாலைவன அரசான லிபியாவில் பெரிய சக்திகளின் அசிங்கமான வேலைகளைச் செய்யத் தயாராக இருந்த சக்திகள் உடனடியாக ஒன்றுதிரண்டன. தேசிய இடைமருவு சபை (National Transitional Council)யின்  பிரபலங்களிடையே அந்த சக்திகள் காணத்தக்கதாய் இருந்தன, இவர்கள் நாட்டின் கனிம வளங்களை மறைமுகமாகச் சுரண்ட சர்வதேச எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவாதம் அளித்ததோடு மட்டுமில்லாமல், தங்களின் சொந்த நாட்டின்மீதே குண்டுவீசவும் அழைப்பு விடுத்தனர். தேசிய இடைமருவு சபை என்பது, ஏகாதிபத்திய சக்திகளின் நிலைப்பாட்டிலான நகர்வுக்குப் பதிலிறுப்பாக கடாபியிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்ட பழைய ஆட்சியின் மூத்த அதிகாரிகள் கொண்டதாகும்.    

பில்லியன் கணக்கில் வியாபார உடன்பாடுகளைப் பேச பாரீசில் பெரும் ஆரவாரத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கடாபியை வரவேற்ற ஜனாதிபதி சார்க்கோசி இப்போது, தனது நேட்டோ கூட்டாளிகளை விடுங்கள், தனது சொந்த வெளியுறவுத்துறை அமைச்சரைக் கூட கலந்தாலோசிக்காமல் தேசிய இடைமருவு சபையை (National Transitional Council) லிபியாவின் உத்தியோகப்பூர்வ பிரதிநிதியாக அங்கீகரித்துள்ளார்.

மத்தியதரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவின் மிக அண்மையில் இருக்கும் ஒரு நாடான லிபியாவில் ஒரு நீண்டகால யுத்தத்தால் ஏற்படக்கூடிய பொருளாதாரரீதியான, பூகோள-அரசியல்ரீதியான மற்றும் பாதுகாப்புரீதியான தாக்கங்களைக் குறித்து யாரும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை. இராணுவ நடவடிக்கையின் விளைவுகளைக் குறித்து எச்சரிக்கை விடுக்கும் பெரும்பான்மையினர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்குப் பின்னர், மற்றொரு இராணுவ சாகசத்தில் பெரிய விருப்பமில்லாத இராணுவத்தின் பழமைவாத வட்டாரங்களைச் சேர்ந்தவர்களாய் உள்ளனர். 
எகாதிபத்ய போட்டி

லிபிய ஏகாதிபத்திய தாக்குதலில் முக்கிய பங்காளர்களாக இருக்கும் அமெரிக்காவும், பிரிட்டனும், பிரான்ஸூம் எதிர்கால கொள்ளைப்பொருட்களை அவற்றின் கட்டுப்பாட்டில் பெறுவதற்காக ஒன்டோடொன்று போட்டியிட்டு வருகின்றன. இந்த மோதல், இராணுவ நடவடிக்கையை யார் கட்டுப்படுத்துவது என்பதன்மீது ஒரு முரண்பாட்டிற்கு இட்டுச் சென்றுள்ளது. லிபியாவில் குண்டுவீசுவதில் பங்கெடுத்திருக்கும் கூட்டணியில் உள்ள அனைவரும் இதில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென்ற பிரான்சின் முறையீட்டை விடுத்து, நேட்டோவின் கண்காணிப்பு இருக்கட்டும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னர், அந்த விஷயத்தில் வாஷிங்டனும், இலண்டனும் வெற்றி பெற்றன.

எவ்வாறிருப்பினும், லிபியாவின் மீதான கட்டுப்பாட்டைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் அதிகமாக, பல விஷயங்கள் பணயத்தில் உள்ளன. ஏகாதிபத்திய சக்திகள் மத்தியகிழக்கு மற்றும் ஒட்டுமொத்த ஆபிரிக்கா முழுமையையும் அவற்றின் நோக்கத்தில் கொண்டிருக்கின்றன.

தந்திரோபாய முக்கியத்துவம்
Libya calls for ceasefire in response to UN's no-fly zone resolution
உலகின் முக்கிய எண்ணெய்வள பிராந்தியமாக இருக்கும் மத்தியகிழக்கில் ஏகாதிபத்தியத்திற்கான தந்திரோபாய முக்கியத்துவம் குறித்து குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஆபிரிக்காவிலும் கணிசமான அளவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் கண்டறியப்பட்டுள்ளதால் இதுவும் பெரிய மதிப்பார்ந்த ஒரு பரிசாக கருதப்படுகிறது.

பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் 2008 எரிசக்தி ஆய்வின்படி, 2007இன் இறுதியில் ஆபிரிக்கா 117,481 பில்லியன் பரல்களை அல்லது உலக எண்ணெய்வளத்தில் 9.48 சதவீதத்தைக் கொண்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவின் எண்ணெய் உற்பத்தியில் நைஜீரியா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து மற்றும் அங்கோலா ஆகிய ஐந்து நாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவை ஆபிரிக்காவின் மொத்த உற்பத்தியில் 85 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன

பல தசாப்தங்களாக லிபியாவின் எரிசக்தி வளங்கள் ஏகாதிபத்திய சதிவேலைகளின் இலக்காக அந்நாட்டை மாற்றியிருக்கும் நிலையில், அங்கு இராணுவத் தலையீடு என்பது அங்கிருக்கும் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும், அப்பிராந்தியத்தில் ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுக்கு எதிராக தீவிரமாக திரும்பியிருக்கும் புரட்சிகர இயக்கங்களை அடக்கி வைக்கவும் இந்த யுத்தம் பயன்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கிழக்கில் எகிப்தையும், மேற்கில் துனிசியாவையும் எல்லைகளாக கொண்டிருக்கும் லிபியாவில் இராணுவத்தை நிறுத்துவதென்பது, அரபு உலகம் முழுவதிலும் உள்ள புரட்சிகர இயக்கங்களை மிரட்ட பெரிய சக்திகளுக்கு உதவியளித்துள்ளது..

அந்நாட்டில் வெளிநாட்டுத் துருப்புகள் இராணுவ ஆக்கிரமிப்பு செய்வதை நடவாமல் பார்த்துக் கொள்வது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானத்தில் உள்ள குறிப்பு வெறும் கண்துடைப்பாகும். இராணுவ அவசியமென்பது(Military necessity) அதன் சொந்த தர்க்கத்தைக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானும் சரி, ஈராக்கும் சரி அமெரிக்கத் துருப்புகளால் உத்தியோகபூர்வமாய் "ஆக்கிரமிக்கப்படவில்லை" என்பதால் அந்த இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான அமெரிக்க சிப்பாய்கள் நிரந்தரமான நிலைகொண்டிருக்கிரார்கள் என்ற உண்மையை மாற்றிவிடாது.
அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகள் இராணுவத் தலையீட்டில் இறங்க வசதியாய் "பிராந்திய ஆதரவு(Regional cooperation)" என்கின்ற போர்வையை அளிக்கும் வகையில், லிபியாவின்மீது பறக்கத்தடைவிதிக்கப்பட்ட வலயம்(No-fly zone) ஒன்றுக்கு அரபு லீக் தான் அழைப்புவிடுத்தது என்பது முக்கியமான விடயமாகும். தங்களின் சொந்த ஆட்சிக்கு எதிராக கிளர்தெளுந்துள்ள எதிர்ப்பாளர்களைக் கைது செய்யும், சித்திரவதைப்படுத்தும், சுட்டுத்தள்ளும் வேலைகளில் இருக்கும் சவூதி அரேபியா, பஹ்ரெயின், மற்றும் ஏனைய எமிரேட்களின் பிரதிநிதிகள் எல்லாம், லிபியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதான நோக்கத்தைக் கொண்டிருப்பதாய் கூறி இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்!

மேலும் உலக இயற்கை எரிவாயு வளங்களில் 8.22 சதவீதத்தைக் கொண்டிருக்கும் ஒரு இடமாகவும் இப்பிராந்தியம் விளங்குகிறது. பாக்ஸைட், கோபால்டு, தொழில்துறை வைரம், பாஸ்பரேட், பிளாட்டினம் மற்றும் ஜிர்கோனியம் போன்ற தரமான உலக கனிமங்களைக் கொண்டிருப்பதில் முதலாவதாகவோ அல்லது இரண்டாவதாகவோ இருக்கிறது. மேலும் கணிசமான அளவிற்கு தங்க படிமானங்களையும் இப்பிராந்தியம் கொண்டுள்ளது.

லிபிய மீதான ஐ.நா வின் தீர்மானம்

லிபியா மீதான ஐ.நா வாக்கெடுப்பை பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவை உள்ளடக்கிய BRIC நாடுகள் அனைத்துமே புறக்கணித்துள்ளன. அதன்பின்னர், இந்த குண்டுவீச்சு குறித்த சீனா அதன் "கவலையைத்" தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் People's Daily, "மனிதாபிமான தலையீடென்பது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் இராணுவ தலையீடு செய்வதற்கான ஒரு மன்னிப்பு மட்டும் தான்," என்று தெரிவித்துள்ளது. "நீதியால் உந்தப்பட்டது" என்று கூறுபவர்கள் "ஆழமான அரசியல் மற்றும் பொருளாதார நலன்களால் உந்தப்பட்டுள்ளனர்" என்பதற்கு ஓர் எச்சரிக்கையாக, ஈராக்கில் நடத்தப்பட்ட "இரத்தத்தில் ஊறிய தலையீட்டை" அந்த அறிக்கை மேற்கோளிட்டுக் காட்டியது.

"பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு(Responsibility for security)" என்ற அடிப்படையில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் 1973 தீர்மானத்தின் ஒரு புதிய நீட்சி, "உலக அரசியலமைப்பின்" மாதிரியில் இப்போது இருக்கிறது என்று கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி தெரிவித்தார்.

"இந்த நிமிடத்திலிருந்து சர்வதேச சமூகத்தின் மற்றும் ஐரோப்பாவின் பிரதிபலிப்பு ஒவ்வொரு முறையும் ஒரேமாதிரியாக தான் இருக்கும் என்பதை ஒவ்வொரு ஆட்சியாளரும், குறிப்பாக ஒவ்வொரு அரேபிய ஆட்சியாளரும் புரிந்துகொள்ள வேண்டும்," என்று சார்க்கோசி அறிவித்தார். ஐவரி கோஸ்ட் மற்றும் சிரியாவிற்கு தடைவிதிப்பதன் மூலமாக ஐ.நா தலையீடும் செய்யக்கூடுமென்றும் அவற்றின் பெயரை அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் ஹாக் கடந்த மாதம் , டைம்ஸ்  நாளிதழால் ஆதரவளிக்கப்பட்ட "ஆபிரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகள்" மாநாட்டில் பேசினார். "21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வுகளான 2008 நிதியியல் நெருக்கடி மற்றும் 9/11 சம்பவத்தினையும் வட ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு சம்பவங்கள் ஏற்கனவே தாண்டிச் சென்றுவிட்டன" என்ற அறிவிப்புடன் பேசியிருந்தார் .

இந்த "மிக முக்கியமான சம்பவங்கள் அரேபிய உலகின் எல்லைகளோடு நின்றுவிட வேண்டிய அவசியமில்லை," என்றார். "அவர்களின் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்குரிய பாதையில் தடையாய் நிற்கும்" கடாபி போன்ற "ஏனையவர்கள்" இருக்கும் நாடுகளான சூடான், சிம்பாவே, ஐவரி கோஸ்ட் ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.

.நா. பாதுகாப்பு சபையின் 1973 தீர்மானத்தை ஒரு திருப்புமுனையாக மேற்கோளிடுவது சார்க்கோசி மட்டுமல்ல. மேலும் "பாதுகாக்கும் உரிமை" (Right to Protect) அல்லது R2P என்றறியப்படும் கோட்பாட்டின் அடிப்படையில் இராணுவ நடவடிக்கைக்கு ஐ.நா. சபை அங்கீகாரம் அளித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

ஐக்கிய நாடுகள் சபையால் 2005இல் மட்டும் தான் R2P கையாளப்பட்டது. இந்த தீர்மானம் தேசிய இறையாண்மையைக் கடந்து "பொதுமக்களும், பொதுமக்கள் நிறைந்த பகுதிகளும் தாக்குதல் அச்சுறுத்தலின்கீழ் வரும் போது" அவர்களைக் காப்பாற்றும் அடித்தளத்தில், ஏகாதிபத்திய சக்திகளுக்கு எங்கெல்லாம் அவற்றிற்குப் பொருத்தமாக இருப்பதாக காண்கின்றனவோ அங்கெல்லாம் யுத்தம் தொடுக்க அவற்றிற்கு இத்தீர்மானம் முழு சுதந்திரம் அளிக்கிறது.

இராணுவ நடவடிக்கையை அனுமதிக்கும் ஐ.நா. சட்டவரைவின் 7ஆம் பிரிவின்கீழ் இருக்கும் "அமைதியின் மீது அச்சுறுத்தல்கள்", "தாக்குதல் நடவடிக்கைகள்" குறித்த தீர்மானங்கள், கடந்தமுறை ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் சியாரா லியோனில் (Sierra Leone) நடத்தப்பட்ட தலையீடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

தலையீட்டின் அரசியல் காரணங்கள்

ஜனாதிபதி சார்க்கோசியும் சரி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரோனும் சரி இருவருமே தலையீடு செய்வதில் அவர்களின் சொந்த உள்நாட்டு அரசியல் காரணங்களைக் கொண்டுள்ளனர். இன்னும் ஒரு வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கும் நிலையில், கருத்துக்கணிப்புகளில் வீழ்ச்சி கண்டிருக்கும் சார்க்கோசி, ஒரு மூர்க்கமான வெளிநாட்டு கொள்கை மூலமாக அந்நிலையைச் சரிசெய்து கொள்வதற்கு நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

தனது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு பெருகிய எதிர்ப்பை முகங்கொடுத்துவரும் கேமரோன், அவருடைய முன்மாதிரி மார்கிரட் தாட்சர் 1982 மால்வினாஸ் யுத்தத்தை செய்ததைப் போன்று, லிபியாவிற்கு எதிரான ஒரு யுத்தம் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் என்று நம்புகிறார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்களால் பிரிட்டிஷ் இராணுவம் பலவீனப்பட்டிருக்கும் நிலையில், சுயாதீனமாக தலையீடு செய்ய முடியாமல், கேமரோன் அமெரிக்காவை இதில் ஈடுபடுத்த பெரும் பிரயத்தனம் செய்துள்ளார்.


S.H.M Rizvy LL.B(Col.)

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்