_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...




பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள கடும் மழைவீழ்ச்சியால் இந்து நதி பெருக்கெடுத்துள்ளதுடன் பாகிஸ்தானின் தென் மாகாணமான சிந்த் மாகாணத்திலுள்ள நூற்றுக்கணக்கான நகரங்களும் கிராமங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதன் விளைவாக அங்குள்ள இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துவருகின்றனர். மக்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை பாரியளவில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சிந்த் மாகாணத்தின் ஜகோபாபாத் என்ற நகரில் கடந்த திங்கள் அன்று ஏற்பட்ட இந்து நதிப்பெருக்கெடுப்பால் மக்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டவாறு ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்பு செய்யப்பட்டனர்.

ஏற்கனவே இந்நகரை விட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதை வழியாக வெள்ளம் முழுமையாக நகரை துண்டிக்க முன்னர் வெளியேறி சென்றுள்ளனர்.

இதேவேளை ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை துரிதப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் கோறிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஐ.நா பேச்சாளர், 3.5 மில்லியன் சிறுவர்கள் வெள்ளப்பெருக்கால் பரவக்கூடிய உயிர்கொல்லி நோய் தொற்றுக்களுக்கு ஆளாகக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக கடந்த திங்கள் அன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே சிந்த் மாகாணத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களில் பல்லாயிரக்கணக்கானோர் உதவிகள் மிக தாமதமாகவே கிடைத்துவருவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உணவுப் பொதிகள் நாய்களுக்கு போன்று ஹெலிகொப்டர்கள் மூலம் வீசப்படுவதாகவும் அவற்றுக்காக மக்களிடையே சண்டையை ஏற்படுத்துவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்று சர்வதேச நிறுவனங்கள் இலட்சக்கணக்கான மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்ற போதிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதால் சில மக்களுக்கு இன்னும் உதவிகள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன அல்லது அறவே கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கு சுமார் 1500 உயிர்களையும் 7.9 மில்லியன் ஹெக்டேர் தானிய நிலங்களையும் காவுகொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.




Source: Al-Jazeera English

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்