_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

ஐரோப்பா முழுவதும் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் பாரபட்சமானது பாரிய அளவில் உயர்ந்தவண்ணமுள்ளது. இதற்கு பிரதான காரணம் உலகம் பூராகவும் நிலவும் முரண்பாட்டு சூழ்நிலையாகும் என உலகலரவிய ரீதியில் நிலவும் மனித உரிமை மீறல் நிலைமைகளை கண்டறியும் மனித உரிமை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை ஒருன்று தெரிவிக்கின்றது.

வெறுப்பின் பேரில் இழைக்கப்படும் குற்றங்கள் உள்ளடங்களாக ஐரோப்பாவில் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் பாரபட்சங்கள் அதிகரித்துச்செல்வதை எம்மால் காணமுடிகிறது என மனித உரிமைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையினை வெளியிட்டு வைக்கும் போது  ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்குமான துணை அரசுச்செயலாளர் மைக்கல் பொஸ்னர் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாரபட்சமான சம்பவங்களை சுட்டிக்காட்டுகின்றது. குறிப்பாக, மஸ்ஜித்களில் மினாரத் அமைப்பதை தடைசெய்து  சுவிட்ஸர்லாந்தில் அண்மையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

அவுஸ்திரேலியாவில் முஸ்லிம்களுக்கெதிராக மிதமிஞ்சிய பொலிஸ் பலப்பிரயோகம் மற்றும் தேர்தல் பிரசாரங்களில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு குரல்கள் என்பவற்றை இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

மேலும் முஸ்லிம் நிறுவனங்கள் தமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை மறுத்தல் மற்றும் முகத்திறை அணிந்து பாடசாலைகளில் வேலைசெய்யும் முஸ்லிம் பெண்களுக்கெதிரான நீதிமன்ற தீர்ப்பு போன்றவற்றை இவ்வறிக்கை ஜேர்மனி தொடர்பில் பாரபட்சமான சூழ்நிலையாக இனங்காண்கின்றது.

முக்கியமாக, தனது இரண்டு நெருங்கிய உறவு நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் என்பவற்றை அவற்றிலுள்ள முஸ்லிம் சிறுபான்மையினர் தொடர்பிலான மனித உரிமை பதிவுகள்  குறித்து அமெரிக்கா இவ்வரிக்கையில்  விமர்சிக்கின்றது.

ஐரேப்பாவின் மிகப்பெரும் முஸ்லிம் சிறுபான்மையினைக்கொண்ட பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவதற்கெதிரான தடையினை இவ்வறிக்கை பாரபட்சமாகக் குறிப்பிட்டுக்காட்டுகின்றது.

"தென் அமெரிக்க வழியுரிமையைக் கொண்ட குடிப்பெயர்வாளர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் பாரபடசங்களை அரபு முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் அனுபவித்து வருகின்றனர்."

தனிநபர்களுக்கும் சொத்துக்களுக்கும் எதிராக எண்ணற்ற வன்முறைச் சம்பவங்கள் பிரட்டனில் மேற்கொள்ளப்படுவதோடு முஸ்லிம்களுக்கெதிரான செய்திகளை தாங்கிய பொது ஒன்றுகூடல்களும்  பேரணிகளும் இங்கு நடத்தப்படுகின்றன.

தனிநபர்களின் ஒருமைப்பாட்டுக்கெதிரான மீறல்களாக இவை அமைந்துள்ளதாகவும் இத்தகைய இவ்வறிக்கை அந்தவகையில் 194 நாடுகளை சுட்டிக்காட்டுகின்றது.

2009ஆம் ஆண்டு இன, மத பதற்ற நிலையால் தூண்டப்பட்டு பல்வேறு வன்முறை சம்பவங்களும் மனித உரிமை மீறல்களும் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்பட்ட ஆண்டு என குறிப்பிடும் இப்பரந்த அறிக்கை சித்திரவதை மற்றும் நீதிமுறையற்ற கொலைகள் (extra-judicial killings) தொடர்பிலும் பல்வேறு சம்பவங்கள் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றது.

மேலும் சீன அரசாங்கம் உய்கர் முஸ்லிம் சீறுபான்மையினருக்கெதிராக பல்வேறு வழிகளில், குறிப்பாக கலாசார மற்றும் சமய ரீதியில் ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளவதாக இவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

இவ்வாறு பல்வேறு நாடுகளின் பனித உரிமை நிலைமைகளை சுட்டிக்காட்டி அமெரிக்கா அறிக்கை தயாரித்துள்ள போதிலும் தனது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இவ்வருடாந்த இறிக்கை எதனையும் குறிப்பிடவில்லை.

முஸ்லிமகளுக்கெதிராக தமது நாட்டில் மட்டுமன்றி அமெரிக்கா உலம் பூராகவும் முஸ்லிம்களுக்கெதிராக வன்முறை இழைத்துவருவதுடன் வன்முறைகளை கட்டவிழ்த்தும் தூண்டியும் அவ்வாறான செயல்களுக்கு உதவியளித்தும் வருவது முஸ்லிம் உலகம் அறிந்த உண்மையாகும்.

கியூபாவில் உள்ள குவாண்டனாமோ சித்திரவதைக்கூடத்தை அமெரிக்கா இன்று வரை மூடவில்லை. ஒபாமா நிர்வாகம் இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் தாலிபான்களுக்கெதிரக அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டுவரும் வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டுவருகின்றனர்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் பின்புலத்தில் நின்று அமெரிக்கா பாகிஸ்தானில் இடம்பெறும் ஒட்டுமொத்த வன்முறை சூழ்நிலைகளுக்கு சூத்திரதாரியாக அமைந்துள்ளது. இவ்வாறு பல்வேறு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் யுத்த சூழ்நிலைகளுக்கு முக்கிய காரணமான அமெரிக்கா முஸ்லிம்களுக்கெதிரான பாரபட்சம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பேசுவதென்பது வேடிக்கையான விடயமே.

Courtesy to Islamonline.com


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்