_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

இந்த வருடம் ரஜப் மாதம் 28ஆம் நாளுடன் கிலாபத் ஆட்சி வீழ்தப்பட்டு 89 வருடங்களாகும். கிலாபத் ஆட்சியியை மீளக்கட்டியெழுப்புவதனூடாக இஸ்லாமிய வழியிலான வாழ்க்கையினை மீள ஆரம்பிப்பதற்கான கடப்பாட்டினைக் கொண்ட உம்மத் என்ற வகையில் கிலாபத் வீழ்ச்சியின் 89 வருட பூர்த்தியை நாம் நோக்குவது பொருத்தமானது.

ஹிஜ்ரி 1342(கி.பி 1924)இல் கிலாபத் வீழ்ந்ததிலிருந்து முஸ்லிம் சமூகம், பல்வேறு கொடுங்கோல் ஆட்சியாளர்களினதும் அவர்களது வாரிசுகளினதும் ஆட்சிக்கு உட்பட்டுவந்துள்ளது. இவ்வாட்சியாளர்கள் தமது முதலாளித்துவ எஜமானர்களை திருப்திப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கில் செயற்பட்டனர். இச்சர்வாதிகார ஆட்சியாளர்கள் அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் ஆதரவிலும் பின்புலத்திலும் ஆட்சிசெய்தவர்கள் ஆவர். இவர்களில் சிலர் மேற்குலகினாலேயே ஆட்சிபீடத்திற்து கொண்டுவரப்பட்டவர்கள் என்பதும் உண்மை. இத்தகைய மேற்குலகின் அடக்குமுறை முஸ்லிம் உம்மத்தை அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் பல்வேறு இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் இட்டுச்சென்றுள்ளது. யுத்தம், வறுமை , ஊழல் என்பன இம்மேற்கு அதிகாரங்கள் முஸ்லிம் உம்மத்தின் மீதி திணித்த அடக்குமுரையினதும் மேலாதிக்கத்தினதும் விளைவுகளாகும். இதற்கு பல்வேறு ஆதாரங்களை முன்வைக்க முடியும்.


ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் முறையே இரண்டு மில்லியன் மற்றும் 744,000 பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா வின் அறிக்கைகள் கூறுகின்றன.


"தி இகொனமிஸ்ட்" சஞ்சிகையால் மேற்கொள்ளப்பட்ட 2002ஆம் ஆண்டு ஆய்வின் படி, ஐந்து அரபிகளில் நாள் ஒன்றிற்கு ஒருவர் இரண்டு டொலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இது 2008ஆம் ஆண்டு சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட முன்னர் நிலவிய சூழ்நிலையாகும்.

"டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல்" இனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட உலகில் மிகவும் ஊழலுக்குட்பட்ட ஒவ்வொரு 10 நாடுகளிலும் 8 நாடுகள் முஸ்லிம் நாடுகளாகும்.

இவற்றிலிருந்து  தெரியவருவது, கிலாபத் ஆட்சிக்காலத்துடன் ஓப்பிடுகின்ற போது தற்போதைய ஆட்சியின் கீழ் முஸ்லிம் சமூகம் இன்னல்களுக்கும் கஷ்டங்களுக்கும் முகங்கொடுத்துள்ளது என்பதுடன் இவற்றிலிருந்து மீளமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது என்பதாகும்.

கிலாபத் ஆட்சியுடன் ஒப்பிட்டு நோக்கும் போது இன்றைய முஸ்லிம் நாடுகளில் இடம்பெறும் ஆட்சி எந்தளவு தூரம் இஸ்லாத்தைவிட்டு, சுன்னாவைவிட்டு விலகிச்சென்றுள்ளது என்பதை தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.


கலீபா உமர் பின் அப்துல் அஸீஸ்(றஹ்) அவர்களுடைய ஆட்சியின் கீழ் ஸகாத்தை பெறுவதற்கு தகுதியான எவருமே இல்லாத அளவு அரச திரைசேரி நிதியினால் நிரம்பிவழிந்தது.


மேலும் உமர் பின் அப்துல் அஸீஸ்(றஹ்) அவர்களுடைய ஆட்சியின் கீழ் நல்லாட்சி நடத்தப்படது. உமர்(ரழி) அவர்களுடன் ஒரு மனிதர் தனது சொந்த விடயங்கள் தொடர்பில் பேசுவதற்காக வந்த போது உமர்(ரழி) அவர்கள் அரச மெழுகுதிரியை அணைத்துவிட்டு தனது சொந்த மெழுகுதிரியை ஏற்றி அம்மனிதருடன் உரையாடினார். எனவே அரச விடயம் தவிர்ந்த வேறு சிறு விடயற்களுக்கு கூட அரச சொத்துக்களை பயன்படுத்த உமர்(ரழி) அவர்கள் விரும்பவில்லை.

ரோமானிய படை வீரர் ஒருவரால் முஸ்லிம் பொண் ஒருவரின் ஹிஜாப் மீரப்பட்ட போது அப்பாசிய ஆட்சிக்கால கலீபாவான முதாஸிம்(றஹ்) அவர்கள் அப்பெண்ணின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்காக முழு இராணுவத்தினையும் தயாராக்கினார்கள். இது அரசு மக்கள் மீது கொண்டுள்ள பாதுகாப்பு எனும் கடமையினை எடுத்துக்காட்டுகின்றது.



எனவே இன்றைய முஸ்லிம் சமூகத்தில் இத்தகைய பிரச்சினைகளுக்கு காரணமாகவுள்ள விடயங்களை கண்டறிய வேண்டியது அவசியமாகும்.


வறுமை மற்றும் அடக்குமுறை அல்லது மேலாதிக்கம் என்பவற்றின் கீழ் முஸ்லிம் உம்மத் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இந்த நூற்றாண்டில் இந்த உம்மத்தின் நேர்மையான அங்கத்தவர்கள் சிலர் இச்சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணமான விடயங்களை இனங்காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பொருளாதார செழிப்பின்மை உண்மையான பிரச்சினைகளுக்கான அடிப்படைக்காரணம் என்பது நிதர்சனமான உண்மையாகும். இருந்தும் வளங்கள் எனும் நோக்கிலிருந்து பார்க்கின்ற போது, உலகின் எண்ணை வளங்களில் சுமார் 60 சதவீதமானவை முஸ்லிம் நாடுகளிலேயே காணப்படுகின்றது. மேலும் பாகிஸ்தானை நோக்குகின்ற போது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளினதும் நிலப்பரப்புக்கு சமனான நிலப்பரப்பை இந்நாடு கொண்டுள்ளது. உலகில் 6வது மிகப்பெரிய சனத்தொகை பாகிஸ்தானே கொண்டுள்ளது.


மேலும் பாகிஸ்தான், ஈரான், துருக்கி, எகிப்து, இந்தேனேஷியா, சிரியா, சவூதி அரேபியா மற்றும் மொரோக்கோ ஆகிய முஸ்லிம் நாடுகளின் இராணுவ சனத்தொகையை ஒன்றுசேர்த்து நோக்குகின்ற போது முன்று மில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையான படைகளைக் கொண்டுள்ளது என்பதுன் இது ஈராக்கில் ஆரம்பத்திலிருந்த அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை காட்டிலும் 10 மடங்கு பெரியதாகும். தெளிவாகக் கூறினால், எண்ணை வளம், கனிய வளம், நில வளம் போன்ற வளங்கள் முஸ்லிம் நாடுகளில் ஒருங்கே அமைந்துள்ளது.


இவ்வாறு அதிகமான வளங்கள் முஸ்லிம் நாடுகளில் செறிந்து காணப்படுகின்றது எனில் ஏன் முஸ்லிம் சமூகம் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கின்றது என்ற வினா எழுப்பப்படுவது நியாயமானதாகும். பொருளாதார பிரச்சினைகள் எப்பொழுதும் நேர்மையான சிறந்த தலைமைத்துவத்துடன் ஒண்றித்துக்காணப்படுகின்றது. முஸ்லிம் உம்மத்தின்
இன்றைய ஆட்சியாளர்கள் தமது நாடுகளிலுள்ள செல்வங்களை அல்லது வளங்களை அல்லாஹ்வுடைய கலாமாகிய அல்-குர்ஆனின் கட்டளைகளுக்கிணங்க நிர்வகிக்கத்  தவறிவிட்டனர் என்பதே உண்மையாகும். மாறாக தமது அமெரிக்க மற்றும் ஐரேப்பிய எஜமானர்களின் கட்டளைகளுக்கிணங்க நிர்வகிக்கின்றனர்.


எனவே
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் வறுமை உட்பட பொருளாதார பிரச்சினைகளுக்கு காரணம் வளப்பற்றாக்குறை அல்ல. மாறாக "இஸ்லாமிய தலைமைத்துவம்" இன்மையே இதற்கு அடிப்படை காரணமாகும். எனவே எம்மிடம் பற்றாக்குறையாக இருப்பது என்னவெனில், நபி(ஸல்) அவர்கள் தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ள எம்மைப்பணித்த கேடயமாகும். பின்வரும் கதீஸில் அக்கேடயம் விபரிக்கப்பட்டுள்ளது:

"நிச்சயமாக, இமாம் (கலீபா) உங்களுக்கு ஒரு கேடயமாகும். அதன்பின்னால் இருந்து நீங்கள் போராடுகின்றீர்கள். அதன் முலம் நீங்கள் பாதுகாக்கப்படுகின்றீர்கள்." (ஷஹீஹ் முஸ்லிம்)


ஆட்சி விடங்கள், பொருளாதார விடயங்கள், மக்களின் பிரச்சினைளளுக்கு தீர்வு காணும் விடயங்கள் அல்லது வேறெந்த விடயங்களாக இருப்பினும் குர்ஆனையும் சுன்னாவையுமே பின்பற்ற வேண்டியது எமது கடமையாகும். குர்ஆன் மற்றும் சுன்னா படி ஆட்சி செய்யாத சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆட்சியை முஸ்லிம் சமூகம் சகித்துக்கொண்டிருக்கின்ற வரை தற்போதைய நிலை தொடர்ந்தும் நீடிக்கும் என்பது நிச்சயம். அல்லாஹ் அல்-குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

"இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக." (5:49)


ஆட்சி முறை, கல்வி, நீதிமன்ற முறைமை மற்றும் ஏனைய சமூக நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய அல்-குர்ஆனையும் சுன்னாவையும் அடிப்படையாகக் கொண்ட பரந்துபட்ட முறைமையான கிலாபத்தை மீள தாபிப்பதே அன்னியவர்களுடைய ஆதிக்கத்திலும் செல்வாக்கிலுமிருந்து முஸ்லிம் சமூகம் விடுதலை பெறுவதற்கும் தமது நாளாந்த வாழிவில் இஸ்லாத்தை மீளக்கொண்டுவருவதற்குமான ஒரே வழியாகும்.


"அல்லாஹ் விரும்பும் காலம் வரை சர்வாதிகரம் முஸ்லிம் சமூகத்தின் மீது செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கும்"
என்ற முஸ்லிம் சமூகத்தின் மீது சர்வாதிகார ஆட்சி நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தற்போதைய நூற்றாண்டு முஹம்மத்(ஸல்) அவர்களால் இமாம் அஹ்மத்(ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்த கதீஸில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இதே கதீஸில் இந்த சர்வாதிகார ஆட்சியின் பின்னரான நிகழ்வுகளும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது, "அதன்பின்னர் நபித்துவத்தின் வழியில் ஒரு கிலாபத் உருவாகும்" என நபி(ஸல்) அவர்கள் தொடர்து கூறினார்கள்.

மேலும் அல்லாஹ் அல்-குர்ஆனிலே பின்வருமாறு கூறுகின்றான்;


"உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்.." (24:55)

அல்லாஹ் ஒருபோதும் தனது வாக்குறுதியில் தவறுவதில்லை. எனவே அல்-குர்ஆன் வசனமும் மேற்படி கதீஸ_ம் கிலாபத் ஆட்சி ஒன்றுக்கான எதிர்பார்பை முஸ்லிம் சமூகத்திற்கு அளிக்கின்றது. எனினும் கிலாபத் ஆட்சி ஒன்று மீண்டும் ஏற்படும் என்று கூறிவிட்டு அதற்கான முயற்சிகள் எதுவுமின்றி விலகி இருப்பததை இவை ஆதரிக்கவில்லை. பதிலாக எமது அன்றாட வாழ்வை இஸ்லாம் கூறும் வழிமறையில் முழுமையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுடன் நபி(ஸல்) அவர்களுடைய சுன்னா எமது வாழ்வில் முழுமையாக பிரதிகளிக்க வேண்டும்.


மட்டுமன்றி, இஸ்லாமிய தலைமைத்துவத்திற்கான சிறந்த அடிப்படைகள் உருவாக்கப்படவேண்டும் என்பதுடன் கிலாபத்தை மீள்உருவாக்கம் செய்வதற்கு அதிகாரத்திலுள்ள மற்றும் செல்வாக்குமிக்க மக்களின் ஆதரவை திரட்டுவதுடன் பொதுமக்கள் அபிப்பிராயமும் இது தொடர்பில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதற்காக அல்-குர்ஆன் அஸ்ஸ_ன்னாவினுடைய வழியை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்பதோடு சடவாதக்கொள்கைகளான முதலாளித்துவமோ, தாராண்மைவாதமோ அல்லது மாக்ஸிஸமோ எதுவும் இது தொடர்பில் தேவையில்லை. 



References: 
Khilafah.com
                   Al-Jazeera news blog
                  "Historical perspective of Khilafah- an analysis"
                  "Fall of the Khilafah( Caliphite) in the light of Al-Quran and Al-Hadith"
                  "Need for a Khilafah in the Mislim Ummah"
                  "Muslim nations in the dominace of Western powers"

-Shahull Hameed Mohamed Rizvy-



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்