_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...
ஒன்றுபட்ட சமுதாயம் எப்போது சாத்தியம்?நபி காலத்து முஸ்லிம்களின் நிலை:அன்று அல்லாஹ், அவர்களையும், அவர்கள் அல்லாஹ்வையும் முழுமையாகப் பொருந்திக்கொண்ட நபிதோழர்கள் நிறைந்திருந்தது போல், உதட்டளவில் இஸ்லாத்தை ஏற்ற நயவஞ்சக முஸ்லிம்களும், இறை நம்பிக்கை உள்ளத்தில் நுழையாத போலி முஸ்லிம்களும், நபி தோழர்களாக இருக்கவே செய்தனர். இந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுக்கு 21:92,93, 23:52,53 இந்த நான்கு இறைவாக்குகளையும் இறக்கி, சமுதாயம் பிரிந்து சிதறும் என்ற நிலையையும், அப்போது நபி(ஸல்) எவ்வாறு நடக்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.

சத்தியத்தை-நேர் வழியை எடுத்துச் சொல்லுவது மட்டுமே நபியின் கடமை. மற்றபடி மக்களை நேர்வழிக்குக் கொண்டு வரும் பொறுப்போ, நேர்வழிக்கு வராதவர்கள் பற்றி இவ்வுலகில் தீர்ப்பு அளிக்கும் அதிகாரமோ நபிக்கும் இல்லை என்பதை 3:20, 5:92,99, 13:40, 14:52, 16:35,82, 24:54, 29:18, 36:17, 42:48, 46:35, 64:12, 3:128, 28:56 போன்ற இறைவாக்குகளைப் படித்துப் புரிகிறவர்கள் நிச்சயமாக விளங்க முடியும்.

(நபியே!)… உம்முடைய கடமையெல்லாம் (நம்முடைய கட்டளைகளை அவர் களிடம்) சேர்ப்பிப்பதுதான்ளூ (அவர்களிடம்) கணக்கு வாங்குதல் நம்மிடமே இருக்கிறது. (அர்ரஃது 13:40)

…. எனவே (நம்) தூதர்களுக்கு (தம் தூதுத்துவத்தை) தெளிவாக அறிவிப்ப தைத் தவிர வேறு ஏதாவது பொறுப்பு உண்டா? இல்லை. (அந்நஹ்ல் 16:35)

எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்துவிட்டால் (நீர் கவலையுறாதீர்) நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவல ராக அனுப்பவில்லை. (தூதுச் செய் தியை) தெளிவாக எடுத்து வைப்பதுதான் உம்மீது கடமையாகும்… (அஷ;ஷ_றா 42:8)

(நபியே!) நம் தூதர்களில் திட சித்த முடையவர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக. இவர்களுக்காக (வேதனையை இவ்வுல கில் வரவழைக்க) அவசரப்படாதீர். இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப் பூமி யில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள் இது) தெளிவாக அறிவிக்க வேண்டியதே.. (அல் அஹ்காஃப் 46:35)

(நபியே!) உமக்கு இதில் ஒரு அதிகாரமும் இல்லை, அவன் அவர்களை மன்னித்து விடலாம், அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம். நிச்சயமாக அவர்கள் (பெரும்) வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (ஆல இம்ரான் 3:128)

எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிகிறார். யாராவது(இவ்வாறு கீழ்ப்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்ப வராக அனுப்பவில்லை. (அன்னிசா 4:80)

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள், நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை. இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர். (அல்அன்ஆம் 6:107)(மேலும் பார்க்க 6:104, 11:57,86, 42:6, 17:54)

இந்த இறைக் கட்டளைகள் அனைத்திற்கும் அடிபணிந்து இந்த சமுதாயத்தை நபி(ஸல்) அவர்கள் ஒன்றுபட்ட நிலையில் எப்படிக் கட்டிக் காத்தார்கள் என்று பார்ப்போம்.

அல்ஹுஜ்ராத் 49:14-ல் நாட்டுப்புறத்து அரபிகள் நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று சொன்னபோது, உங்களுடைய உள்ளங்களில் நம்பிக்கை நுழையவில்லை. எனவே நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆயினும் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள் என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து நபி(ஸல்) அவர்கள் அந்த நாட்டுப் புறத்து அரபிகளை முஸ்லிம்களாகவே ஏற்று தமது சமுதாயத்தைக் கட்டிக் காத்தார்கள்.

அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு முரணாக நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நீங்கள் முஷ;ரிக், காஃபிர், உங்கள் பின்னால் யாரும் நின்று தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுத்து அவர்;களை முஸ்லிம் சமுதாயத்திலிருந்து வெளியேற்றவில்லை. அல்லாஹ்வின் 21:92, 23:52 கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து நடந்தார்கள்.அடுத்து நபி(ஸல்) அவர்களது காலத்து முனாஃபிக்கள் என்ற நயவஞ்சகர்களின் நிலையைப் பார்ப்போம்.

பக்கரா 2:8லிருந்து 20 வரை படித்து உணர்கிறவர்கள், அவர்களை விட கேடுகெட்ட முஷ;ரிக், காஃபிர் நபி(ஸல்) அவர்களது காலத்திற்குப் பிறகு யாரும் இருந்ததில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். 2:8-ல் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்று அல்லாஹ் உறுதிபடக் கூறுகிறான். அல்லாஹ்வையும், இறை நம்பிக்கையாளர்களையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கிறார்கள் என்று 2:9-ல் அல்லாஹ் கூறுகிறான். அவர்கள் பூமியில் பெருங் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டு நாங்கள் சமாதானவாதிகள் என பொய்யுரைத்தனர். (2:11)

தூய இஸ்லாத்தைக் குழிதோண்டிப் புதைக்க அந்த நயவஞ்சகர்கள் குறைஷி காஃபிர்களுடனும், கிறிஸ்தவர்களுடனும், யூதர்களுடனும் சேர்ந்து செய்த சதிச் செயல்கள் ஏட்டிலடங்கா. ஆயிஷா(ரழி) அவர்கள் பற்றி பெரும் அவதூறைக் கிளப்பி, நபி(ஸல்) அவர்களை சுமார் 50 நாட்கள் புழுவாகத் துடிக்க வைத்தனர். தூக்கத்தையும், நிம்மதியையும் இழக்கச் செய்தனர்.

இஸ்லாத்திற்கு விரோதமாக, இறைவனது தூதருக்கு விரோதமாக கொடிய முறையில் செயல் பட்டவர்கள் என்று உலகில் இவர்களை விட வேறு யாரையும் அடையாளம் காட்ட முடியாது. 2:8,10, 13,14,15,16,18,19 இந்த இறை வாக்குகளை நேரடியாகப் படித்து உணர்கிறவர்கள் நபி காலத்து நயவஞ்சகர் களை விட கொடிய முஷ;ரிக்குகள், காஃபிர் கள் அதன் பின்னர் இஸ்லாமிய சமுதாயத்தில் யாருமே இருந்ததில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகித மவ்லவிகள் சமுதாயத்தைப் பிளவு படுத்தும் கெட்ட நோக்கத்துடன் நபிகாலத்து நயவஞ்சகர்கள் முனாஃபிக்குகள் மட்டுமே, அவர்கள் முஷ;ரிக்கோ, காஃபிரோ இல்லை என சப்பைக் கட்டு கட்டுவார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல, நபிகாலத்து நயவஞ்சகர்களைவிட மிகக் கொடிய முஷ;ரிக்குகள், காஃபிர்கள் அதன் பிறகு இந்தச் சமுதாயத்தில் யாருமே இருந்ததில்லை என்பதை, இந்த நயவஞ்சகர்கள் நரகின் ஆக அடித்தட்டில் கிடந்து வேகுவார்கள் என்ற 4:145 இறைவாக்கும், மேலும் 9:67,68, 33:73, 48:6, 57:13 போன்ற சுமார் 25 இறைவாக்குகளைப் படித்து விளங்குகிறவர்கள் அறிய முடியும்.


இன்றைய முஸ்லிம்களின் நிலை:

இன்று, இணை வைக்கும் முஸ்லிம்கள் இறந்து போன மனிதன், கழுதை போன்ற பிராணிகள், கட்டை, கம்பு போன்றவை புதைக்கப்பட்டிருக்கும் இடங்களில் தர்கா-சமாதி கட்டி வைத்துக்கொண்டு, அங்கு போய் முறை யிடுகிறார்கள், தங்கள் தேவைகளைக் கேட்கி றார்கள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் இடைத்தரகர்களாக்கி வணங்கி வழிபட்டு மிகக் கொடிய முஷ;ரிக்குகளாகவும், காஃபிர் களாகவும் இன்றைய நிலையில் இருக்கின்றனர்.இந்த உலகில் நபிமார்களுக்கோ, உலமாக் களுக்கோ, முஷ;ரிக், காஃபிர் ஃபத்வா கொடுக் கவோ, முஸ்லிமீன் என்று அல்லாஹ் பெயர் சூட்டியிருக்கும் நிலையில் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி இறை நம்பிக்கை உள்ளத்தில் நுழையாத நாட்டுப்புற அரபிகள், மற்றும் முனாஃபிக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பிறிதொரு தனிப்பெயரை சுயமாகச் சூட்டிக் கொள்ளவோ மார்க்கத்தில் அனுமதி இருந்தால், நபி(ஸல்) அவர்கள் அவற்றைச் செய்து நமக்கு வழிகாட்டி இருப்பார்கள்.
அன்று அவ்வாறு நபிகாலத்து நயவஞ்சகர்களுக்கு முஷ;ரிக், காஃபிர் ஃபத்வா கொடுத்து முஸ்லிம் சமுதாயத்திலிருந்து அவர்களை வெளியேற்றி இருந்தால், வஹீ வந்து கொண் டிருந்த அக்காலத்தில், இஸ்லாத்திற்கும், அதை நிலைநாட்ட பாடுபட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டுக் கொண் டிருந்த மிகப் பெரும் சிரமங்களிலிருந்தும், பின்னடைவுகளிலிருந்தும் பெரிதும் விடுபட்டி ருக்க முடியும்.

வெளியே இருக்கும் எதிரியை விட உள்ளே இருந்து நண்பனாக நடிக்கும் நயவஞ்சகன் பெரிதும் ஆபத்தானவன் என்பது உலகம் அறிந்த பேருண்மையாகவும், இந்த நிலையிலும் முஸ்லிம் என உதட்டளவில் சொல்லிக் கொண்டு குறைஷி ஷைத்தான்களுடன் இணைந்து லாத், மனாத், உஸ்ஸா, ஹுபல் சிலைகளை வணங்கிக் கொண்டு, இஸ்லாத்திற்கும், நபி(ஸல்) அவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பெரும் கேடுகளை விளைவித்துக் கொண்டிருந்த, அல்லாஹ்வே அவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை.

முஷ்ரிக்குகள், காஃபிர்கள், நாளை மறுமையில் நரகின் அடித்தட்டில் இருப்பார்கள் என்று தெளிவாக அறிவித்திருக்கும் நிலையிலும், நபி(ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்கள் முஷ்ரிக்குகள், காஃபிர்கள், அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுத்து முஸ்லிம் உம்மத்திலிருந்து அவர்களை வெளியேற்ற முற்படவில்லை.

ஆம்! 21:92. 23:52 மற்றும் பல இறைக் கட்டளைகள் மூலம் சமுதாயத்தைப் பிளவுபடுத்துவது மாபெரும் குற்றம், அல்லாஹ்வின் தனி அதிகாரத்தில் தலையிடுவதாகும். அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே அத்தீர்ப்பை நாளை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கும் நிலையில், முஸ்லிம் என்று ஈமான் உள்ளத்தில் நுழையாத நிலையிலும், உதட்டளவில் முஸ்லிம் என்று சொல்கிறார்கள் என்பதற்காக இவ்வுலகிலேயே அப்படி ஷிர்க், குஃப்ர் தீர்ப்பளிப்பது அல்லாஹ்வுக்கே அல்லாஹ்வாகும் (நவூதுபில்லாஹ்) மிகமிக ஆபத்தான செயல் என்பதை நபி(ஸல்) தெளிவாக உணர்ந்திருந்தார்கள்.

குறிப்பாக 42:21, 49:16, 3:128, மற்றும் மேலே நாம் எடுத்தெழுதியுள்ள இறை எச்சரிக்கைகள் நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடுங்க வைத்தன.

நபி(ஸல்) அவர்களிடமே நிச்சயமாக, நான் அல்லாஹ்வுடைய தூதன்(நபி) என்று நீங்கள் சான்று பகர்கிறீர்களா? என்று நேரடியாகக் கேட்ட இப்னு ஸையாத் என்ற பொய் நபிக்குக் கூட நபி(ஸல்) அவர்கள் முஷ்ரிக், காஃபிர் ஃபத்வா கொடுக்கத் துணியவில்லை. உமர் (ரழி) அவர்கள் அவனைக் கொல்ல முற்பட்ட போதும் நபி(ஸல்) அவர்கள் அதைத் தடுத்து விட்டார்கள். (இப்னு உமர்(ரழி) புகாரீ, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ) அல்ஹதீஸ் 792.

இன்னொரு சமயத்தில் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் என்ற கொடிய நயவஞ்சகன் சமுதாயத்தைப் பிளவுபடுத்த முற்பட்டபோது, உமர்(ரழி) அவனைக் கொல்ல அனுமதி கேட்டனர் முஹம்மது தனது தோழர்களையே கொல்கின்றார் என்ற அவப் பெயர் ஏற்பட்டுவிடும் என்று கூறி நபி(ஸல்) தடுத்து விட்டார்கள். (பார்க்க புகாரீ ர.அ. 4ஃ3518)

தன்னை நபி என நபி(ஸல்) அவர்களிடமே வாதிட்ட பொய்யன் முஸைலமாவுக்கும் நபி(ஸல்) குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுக்க முற்படவில்லை. (பார்க்க புகாரீ ர.அ.4ஃ3620)

இன்றைய ஆபத்தான ஒற்றுமையற்ற நிலை:இந்த நிலையில் உளப்பூர்வமாக அல்லாஹ்வையும், அவனது தூதரையும், அவனது இறுதி வழிகாட்டல் நெறிநூல் அல்குர்ஆனையும் ஏற்றி ருக்கும் முஸ்லிம்கள், சில புரோகித மவ்லவிகளின் தவறான போதனைகளை ஏற்று தர்கா சடங்குகள் மூலம் ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் மூழ்கி இருக்கிறார்கள் என்பதற்காக முஷ்ரிக், காஃபிர் ஃபத்வா கொடுப்பதோ, அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று தீர்ப்பளிப் பதோ நபிவழியாக இருக்க முடியுமா? அல்லாஹ் ஏற்றுக்கொள்வானா? நபிமார்களின் வாரிசுகளான உண்மையான உலமாக்கள் இத்தீச் செயலை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.

ஆம்! நபிமார்களின் வாரிசுகளான உண்மை உலமாக்கள் ஒருவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு தர்கா-சமாதிச் சடங்குகளில் மூழ்கி இருந்தாலும், சபரி மலைக்கே சென்று வந்தாலும், இன்னும் அல்குர்ஆன் கடுமையாகக் கண்டித்துக் கூறும் ஷிர்க், குஃபர், பித்;அத்களில் மூழ்கி இருந்தாலும், ஷிஆ, காதியானி, அஹ்ல குர்ஆன், 19 போன்ற வழி கேட்டுப் பிரிவுகளில் இருந்தாலும், அவனுக்கு அழகிய முறையில் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை எடுத்துக் காட்டி, இதே நிலையில் அவன் மரணித்தால் நிரந்தரமாக நரகில் தங்க நேரிடும் அதில் விடுதலையே கிடைக்காது பெரும் இழப்புக்கும் தண்டனை களுக்கும் ஆளாவாய் என மீண்டும், மீண்டும் ஓயாது, மனம் தளராது அறிவுரைக் கூறிக் கொண்டே இருப்பார்கள். அதுவே தம்மீது சுமத்தப்பட்ட கடமை என விளங்கிச் செயல் படுவார்கள்

மற்றபடி மீண்டும், மீண்டும் பலமுறை எடுத்துக் கூறியும் அவன் கேட்பதாக இல்லை திருந்துவதாக இல்லை. ஷிர்க், குஃப்ர், பித்அத் செயல்களை வேண்டுமென்றே வரட்டுப் பிடிவாதத்துடன் செயல்படுவதை எங்கள் கண்களால் பார்க்கிறோம். எனவே அவன் முஷ்ரிக், காஃபிர் என ஃபத்வா கொடுக்க ஒரு போதும் துணியமாட்டார்கள்.மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு வயிறு வளர்க்கும் தீய உலமாக்கள் அபூ ஜஹீலின் வாரிசுகளாக இருப்பதால், இப்படிப் பட்ட ஷிர்க், குஃ;ப்ர் ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவு படுத்துகிறார்கள் அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுத்துத் தனிப்பள்ளி கட்டத் துணிகிறார்கள் அந்த முஸ்லிம்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்ட ஜாக் என்றும் ததஜ என்றும் தனித்தனி பெயர்களை சுயமாகச் சூட்டிக் கொண்டு 22:78, 41:33, 33:21,36 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து 30:32, 23:53, போன்ற வசனங்கள் கூறுவது போல் தங்கள் பிரிவுகளைக் கொண்டு மகிழ்வடைகிறார்கள். அவர்கள் இருக்கும் வழி கேட்டை 23:54,55,56 இறைவாக்குகளை முறைப்படி படித்து விளங்கினால் உணர முடியும்.
இன்று மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு, சம்பளத்திற்கு மார்க்கப் பணி புரியும் புரோகித மவ்லவிகளில் எந்த ஒரு மவ்லவி கூட்டத்தையாவது, இன்னொரு கூட்டத்திற்கு முஷ;ரிக், காஃபிர் ஃபத்வா கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று காட்ட முடியுமா? நிச்சயமாக அவர்களில் ஒரேயொரு கூட்டத்தையும் காட்ட முடியாது. ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டால், அவர்கள் பிழைப்பு நடத்த முடியாது.

எனவே சமுதாய ஒற்றுமைக்கு, முஸ்லிம்கள் அவர்களது வசீகர வலையிலிருந்து விடுபட்டு அல்குர் ஆனைப் பற்றிப் பிடித்து அதிலுள்ளதை உள்ள படி செயல்படுத்த முன்வந்தால் மட்டுமே சமுதாய ஒற்றுமை சாத்தியமாகும். ஆம்! முஸ்லிம்கள் இந்த புரோகித மவ்லவிகளின் பிடியிலிருந்து விடுபடாதவரை சமுதாய ஒற்றுமை ஒரு போதும் சாத்தியமே இல்லை, கானல் நீரே அல்லாஹ் காப்பானாக.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்