_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

உணரப்படாத தீமை சினிமா!

-ஷரஹ் அலி

நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டனர். அவர்கள் எத்தகையவரென்றால் தங்கள் தொழுகையில் மிக்க உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

இன்னும், அவர்கள், வீணான(பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். (அல்குர்ஆன் 23:1,2,3)

இன்றைய உலகில் சினிமா நாகரீகம் என்ற போர்வையில் உலகிற்கு ஒழுக்கக்கேட்டை மொத்தமாக சப்ளை செய்யும் ஸ்தாபனமாக விளங்குகின்றது. அதன் மோகம்-மாயைய லிருந்து தப்பிய மனிதனை காண்பதென்பது அதிசயமான, ஆச்சரியமான விஷயமாக உள்ளது. சினிமா பார்ப்பது கூடாது என்று கூறுபவர்கள், நவீன காலத்திற்குப் பொருந்தாத வர்கள், நாகரீகம் தெரியாதவர்கள்-பிற்போக்கு வாதிகள், என்று சொல்லும் அளவிற்கு சினிமாப் பைத்தியம் பிடித்து மனித வர்க்கம் அலைகிறது.
புகைப் பிடிப்பது-லாட்டரி போன்ற தீய பழக்கங்களுக்கு விளம்பரம் செய்வதில்லை என்று சொல்லுகின்ற ஒரு சில பத்திரிக்கைகளும் சினிமாவை தவறு என்று மக்களுக்கு சொல்லுவதில்லை. மாறாக அது இல்லாமல் பத்திரிகை நடத்துவதென்பதே முடியாத காரியம் என்று எண்ணி அதற்கு வக்காலத்தும் வாங்குகின்றன. மத பத்திரிகைகளும் அதைப் பற்றி மனித குலத்திற்கு அறிவுரை கூறுவதில்லை. (சில இஸ்லாமிய இதழ்களை தவிர்த்து)

அரசியல்வாதிகளைப் பற்றி கேட்க வேண்டியதே இல்லை. அவர்களின் மூலதனமே அதுதான். ஒழுக்கக் கேட்டையும், நேர்மை யின்மையையும் உலகிற்கு ஊட்டி ஆதாயம் தேடுபவர்கள் இதைப் பற்றிச் சொல்வார்கள் என்று எண்ணுவது அறிவீனமே. சுருங்கச் சொல்லின் சினிமா மனித வர்க்கத்தால் தீமை என்றே உணரப்படாத ஒரு தீமையாக விளங்க கிறது. சரி, மாற்று மதத்தவர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், கைரஉம்மத்-நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் சிறந்த சமுதாயம் என்று இறைவனால் சிறப்பித்துக் கூறப்பட்ட முஸ்லிம்களும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. மாறாக சில முஸ்லிம்கள் சினிமா ஹராம் என்று குர்ஆன், ஹதீஸ் கூறுகின்றதா? என்ற வாதத்திற்குச் செல்வது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். சினிமா என்ற பதத்தை போட்டால்தான் இவர்கள் தவறு என்று ஏற்றுக்கொள்வார்களா?

சகோதர சகோதரிகளே! நாம் செய்யும் தவறை நியாயப்படுத்துவதற்காக, சினிமாவைக் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. உதாரணத்திற்கு போதை தரும் பொருட்கள் அனைத்தும் ஹராம் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இன்றைய உலகில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத பல நவீன போதைப் பொருட்கள்-மருந்துகள், வந்துவிட்டனவே! இதைப் பற்றி எல்லாம் இஸ்லாம் சொல்லவில்லை என்று நாம் கூறி அதையெல்லாம் ஹலால் என்று கூற முடியுமா? முடியாது.

நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக் கேடான விஷயங்களையும் தீமைகளையும் விட்டுத் தடுத்துவிடும். (அல்குர்ஆன் 29:45)

மேலே உள்ள இறைவசனத்திலிருந்து யார் தொழுகையாளிகளாக இருந்து கொண்டு மானக்கேடான-தீமையான காரியங்களிலிருந்து விலகவில்லையோ உண்மையில் அவர்களுடைய தொழுகை உயிரற்ற தொழுகையாகவும் – வெறும் சடங்காகவும் தான் இருக்க முடியும் என்பது உறுதியாகிறது. ஏனெனில் இறை வசனம் பொய்யாகாது.

தீமைகளை விட்டுவிலகி இருக்க வேண்டும் என்று வெறும் தடை மட்டும் செய்வதோடு இஸ்லாம் நின்றுவிடாமல் அதை நடைமுறைப் படுத்தவும் மனிதனுக்கு உகந்த பல சட்ட திட்டங்களை நபி(ஸல்) அவர்கள் மூலமும், அல்குர்ஆன் மூலமும் நமக்குச் சொல்லிக் காட்டுகிறது, அவற்றைக் காண்போம்.

முதலாவதாக மனிதன் விபச்சாரத்தின் பக்கம் விழுந்துவிடாமல் இருக்க திருமணத்தை வலியுறுத்துகின்றது. நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், திருமணம் என்பது எனது வழிமுறை எனது வழிமுற யைச் செயல் படுத்தாதவர் என்னைச் சார்ந்தவர் அல்லர். ஆதாரம்: ஆயிஷா(ரழி) நூல்: இப்னுமாஜ்ஜா

திருமணம் முடிப்பதற்குரிய வசதி படைத்தவர் உடனே திருமணம் செய்து கொள்ளட்டும். வசதி இல்லையாயின் நோன்பு வைக்கட்டும். அது அவரைக் கட்டுப்படுத்தும் சாதனமாகும். ஆதாரம்: ஆயிஷா(ரழி) நூல்: இப்னுமாஜ்ஜா

திருமணத்தை இஸ்லாம் வலியுறுத்துவதிலிருந்து அது மனிதனை விபச்சாரத்தின் பக்கம் நெருங்கிவிடாமல் தடுக்கும் கேடயமாக விளங்குகிறது என்பதை அறியலாம். இதன் பிறகும் ஒரு மனிதனுக்கு திருப்தியில்லை என்றால் சில நிபந்தனைகளோடு இரண்டு, மூன்று, நான்கு மனைவிகள் வரை மணமுடிக்க பின்வரும் இறைவசனம் கூறுகின்றது.

நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான பெண்ணை மணந்து கொள்ளுங்கள்!- இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்நான்காகவோ, ஆனால் நீங்கள் (அவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணோடு போதுமாக்கிக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 4:3)

எந்தக் காரணம் கொண்டும் மனிதன் விபச்சாரத்தில் விழுந்து விடக்கூடாது என்று எண்ணியே இறைவன் இவ்வளவு பெரிய கிருபையை-சலுகையை மனிதனுக்குச் செய்துள்ளான். இத்தகைய சலுகைகளையும் மீறி மனிதன் மிருகமாக மாறும்போது இஸ்லாம் கடுமையான சட்டத்தின் மூலம் அத்தீமையை மனிதவர்க்கத்தை விட்டு அகற்ற முற்படு கின்றது. இங்கே தனி மனிதனுக்கு காட்டப்படும் கருணையை விட முழு சமூகத்தின் அமைத யையே இஸ்லாம் பெரிதாக கருதுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

மணமாகாத ஆணும், பெண்ணும் விபச்சாரம் செய்வார்களேயானால், அவர்களுக்கு தலா நூறு கசையடியும், ஓராண்டு ஊரைவிட்டும் அப்புறப்படுத்துவதுமாகும். மணமாகிய ஆணும், பெண்ணும் விபச்சாரம் செய்தார்களேயானால் அவர்களுக்கு தலா நூறு கசையடியும், அவர்களைக் கல்லால் அடித்துக் கொல்லுவதுமாகும். ஆதாரம்: உபாத துப்னுஸ்ஸாமித் (ரழி) நூல்: முஸ்லிம்

மனிதன் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் சுற்றுப்புற சூழ்நிலைகள் அவனை விபச்சாரத்தின் பக்கம் இட்டுச் செல்லக்கூடியதாக அமைந்து விடும் என்பதைக் கருத்தில் கொண்டு கீழ்வரும் பல சட்டங்களையும் கூறுகின்றது.
(அந்நியப் பெண்களை) கண்ணால் (தீய இச்கையுடன்) பார்ப்பதும் விபச்சாரமாகும். ஆதாரம்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி.

பெண்களே! நளினமாகப் பேசாதீர்கள். அது ஆண்களின் மனதில் கிறுகிறுப்பை ஏற்படுத்தக் கூடும். பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத் தில் நோய் இருக்கிறதோ அவன் மோகம் கொள்வான். (அல்குர்ஆன் :33:32)

சலங்கை ஒலி ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் செல்லக் கூடாது தாங்கள் மறைத்து வைத்துள்ள அலங்காரத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக தங்கள் கால்களைத் தட்டி நடக்க வேண்டாம். (அல்குர்ஆன் 24:30)

நறுமணம் பூசிக்கொண்டு ஓர் கூட்டத்தின் பக்கம் செல்பவள் அப்படி உள்ளவளே, (ஒரு வகையில்) விபச்சாரியே! ஆதாரம்:அபூமூஸா (ரழி) நூல்: திர்மிதி.

கணவன் இல்லாத நிலையில் உள்ள பெண்களிடம் (தனிமையில்) செல்லாதீர்கள். ஆதாரம்: ஜாபிர்(ரழி) நூல்: திர்மிதி.

அந்நியப் பெண்களைத் தொடுவது கை செய்யும் விபச்சாரமாகும். ஆதாரம்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்.

பெண்களின் கைகளைத் தொடும் ஷெய்குகள் ஏராளம். இது தவறாகும். இச்செயல் இஸ்லாத்தில் உள்ளதுதான் என்று நியாயப்படும் புரோகித மௌலவிகளும் இருப்பது அதைவிடப் பெரிய தவறாகும். திரையின்றி ஆணும், பெண்ணும் கலப்பது கூடாது. அப்பெண்களிடம் எப்பொருளையும் கேட்டால் திரைக்கு அப்பாலிருந்து கொண்டே அவர்களைக் கேளுங்கள் (அல்குர்ஆன் 33:53) ”Co-Education” தேவையே என்பவர்கள் இதை பற்றி சிந்திக்கவும்.

ஆடை விஷயத்திலும் ஆண் தொப்புளுக்கும், முழங்காலுக்கும் இடையில் உள்ள பகுதியையும், பெண் முகத்தையும், இரண்டு மணிக்கட்டுகள் வரையுள்ள கைகள் பகுதியையும் தவிர்த்து மற்ற அனைத்தையும் மறைக்க வேண்டும் என்கிறது இஸ்லாம். இன்றைய உலகில் யார் அதிகம் மறைக்க வேண்டுமோ அவர்கள் தான் அதிகம் திறந்து காட்டுவதோடு நில்லாமல், அதுதான் நாகரீகம் என்றும் துணிந்து கூறுகின்றார்கள். ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்ற முது மொழி கூட இன்று இவர்களிடம் பழமையாகி விட்டது போலும். (ஒருக்கால் இது மனிதனுக் குத்தான் பொருந்தும்; மனுஷிக்குப் பொருந தாது என நினைக்கிறார்கள் போலும்) மேலே கூறிய இவையணைத்தும் மனிதவர்க்கம் விபச்சாரத்தில் விழுந்துவிடாமல் இருக்கவும் அதன் பக்கமே நெருங்காமல் இருக்கவும் சட்டமாக்கி இருக்கிறது.

இன்றைய சினிமா, அரைகுறை ஆடைகள் – ஆபாச நடனங்கள்-ஆண், பெண் கட்டி அணைப்பது-முத்தமிடுவது-காதல் காட்சிகள்-படுக்கையறை நிகழ்ச்சிகள் இப்படி ஆபாசத்தை யெல்லாம் அள்ளித் திணிக்கின்றது இன்றைய நவீன காலத்துச் சினிமா, இவையனைத்தும் இஸ்லாத்திற்கு பொருத்தமானவைதானா? மனித நாகரீகத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்றவை தானா? என்பதை சிறந்த சமுதாயம் என்று இறைவனால் சிறப்பிக்கப்பட்ட முஸ்லிம்கள் ஏன் உணர்வதில்லை? அதைப் பிற மக்களுக்கு எடுத்துச் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை ஏன் அறியவில்லை?
ஆனால் சில முஸ்லிம் வாலிபர்கள் இளைஞர்கள் இவையெல்லாம் உலகத்தில் இயல்பாக உள்ளதுதானே? நடிகர், நடிகைகள் ஆபாசமாக நடித்தால் அதற்கு நாம் என்ன பொறுப்பு? என்றெல்லாம் வாதம் பேசுகின்றனர். இவை அனைத்தும் தவறான எண்ண மேயாகும். ஏனெனில், எல்லாம் உலகத்தில் நடப்பதுதான் என்று கூறும் இவர்கள் தங்கள் வீட்டில் நடப்பதை உலகிற்கு வெளிக்காட்ட வார்களா? நடிகைகள் ஆபாசமாக நடிப்பதைப் பார்க்க விரும்புபவர்கள், அதே நடிகை தன்னுடைய மனைவியாகவோ, தாயாகவோ, சகோதரியாகவோ இருந்தால் பார்க்க விரும்புவார்களா? நிச்சய மாக விரும்பமாட்டார்கள். அப்படியானால் இது பெரிய சுயநலம். தனக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி என்றால் நிச்சயமாக இது ஓரவஞ்சனைத்தானே! இதற்கு எடுத்துக் காட்டாக கீழே வரும் நபிமொழியை காண்போம்.

அபூஉமாமா(ரழி) அறிவித்துள்ளார்கள். ஒரு வாலிபர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விபச்சாரம் செய்வதற்கு அனுமதியளியுங கள் என்றார். அப்போது (அங்குள்ள) மக்கள் அவரை விரட்ட ஆரம்பித்தனர். நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள்! என்று கூறிவிட்டு, அவரை தன் பக்கத்தில் அழைத்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்கள் பக்கத்தில் வந்து அமர்ந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி, அதை உமது தாயிடம் செய்ய நீர் விரும்புகிறீரா? என்றார்கள். அப்போது அவர் அல்லாஹ் என்னை தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக (அவ்வாறு நான் பெற்ற தாயிடம் ஒருபோதும் நடக்க) விரும்பமாட்டேன் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எந்த மனிதரும் தமது தாயிடம் இவ்வாறு நடந்து கொள்ள விரும்பவே மாட்டார்கள் என்றார்கள்.

அப்படி என்றால் அதை உனது மகளிடம் செய்ய நீர் விரும்புகிறீரா? அல்லது உமது சகோதரியிடம் சின்னம்மா-பெரியம்மாவிடம் செய்ய விரும்புகிறீரா என்றார்கள். அதற்கு அவர் அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணம் செய்வானாக! அல்லாஹ்மீது ஆணையாக நான் அதை செய்ய விரும்ப மாட்டேன் என்றார். நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு எந்த மனிதனும் செய்ய விரும்பமாட்டான் என்று கூறிவிட்டு, தமது கையை அவர் மீது வைத்து யா அல்லாஹ் இவர் பாவத்தை மன்னித்தருள்! இவரது உள்ளத்தை தூய்மையாக்கு! மேலும் இவரது அபத்தை பாதுகாப்பு செய்! என்றார்கள். அதன் பின்னர் அந்த வாலிபர் ஏற்கனவே இருந்தது போன்றில்லாது, எந்த பக்கமும் தீய சிந்தனை அற்றவராகிவிட்டார். (அஹ்மத்)

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் தான் விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கும் விரும்பாதவரை ஒருவர் உண்மையுள்ள விசுவாசியாக மாட்டார். (அறிவிப்பு: அனஸ் (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்)

நம்முடைய மனைவி யையோ, மகளையோ, தாயையோ, சகோதரி யையோ, பிற ஆடவன் கட்டியணைப்பதையும், முத்தமிடுவதையும் ஏன் தொடுவதைக்கூட அனுமதிக்காத நாம், நம்மை மகிழ்விப்பதற்காக வேறொருவனின் மனைவியோ, சகோதரியோ அப்படிச் செய்தால் அதை நான் பார்ப்பேன்-வரவேற்பேன் என்றால் நபி(ஸல்) அவர்களின் கூற்றுப்படி நாம் எல்லாம் உண்மை விசுவாசிகள்தானா என்பதை ஈமான் கொண்ட நாம், ஏன் சற்றும் சிந்தித்துப் பார்ப்பதில்லை?

சினிமா ஆபாசத்திற்கு மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை, வன்முறை, கற்பழிப்பு, தற்கொலை போன்ற பல ஒழுக்கக் கேடுகளையும், சீர்கேடுகளையும் மக்களுக்கு போதிக்கும் நச்சுக் கருவியாக விளங்குகிறது. சில வருடங்களுக்கு முன் 9 கொலைகளை படுபயங்கரமாக செய்த ஜெயப் பிரகாஷ்; தன்னுடைய வாக்குமூலத்தில் தன்னை கொலை செய்யத் தூண்டியதே 24 மணி நேரம் என்ற சினிமா படம்தான் என்று கூறியதிலிருந்து கொலைக்கு காரணமாக சினிமா விளங்குகிறது என்று சான்று பகரலாம்.

சில வருடங்களுக்கு முன் டில்லியில் நடந்த Sexologist Conference (பாலியல் கருத்தரங்கில்) Teenage Violence என்ற Teenage இல் உள்ளவர்கள் அதிகம் பேர் கற்பை இழந்தவர்களாக இருப்பது வளர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் சினிமா தான் என்று தனது ஆய்வில் கூறுகிறது. மேலும் சினிமா தற்கொலை செய்வது எப்படி? கடத்தல் செய்வது போன்ற தீய பழக்கங்களையும் மனித சமுதாயத்திற்கு படித்துக் கொடுக்கும் பாடசாலையாக விளங்குகின்றது. அது மட்டும் அல்ல, அதற்காக ரசிகர் மன்றங்கள், அதற்காக தங்கள் உயிரையே வேண்டுமானாலும் கொடுக்கவும் தயார் என்று கூறும் இஸ்லாமிய இளைஞர்களும் ஏராளம். உடல் மண்ணுக்கு, உயிர் ரஜினிக்கு இவன் அப்துல்லாஹ், அஹ்மத், ரஜினி ரசிகர் மன்றம் என்று அச்சிட்ட போஸ்டர்களையும் நம்மால் காணமுடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒருவர் அல்லாஹ்வையும், அவனது தூதரை யும் மற்றவர்கள் அனைவரையும் விட அதிகமாக நேசிக்காதவரை உண்மையான நம்பிக் கையாளராக ஆக முடியாது. அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்.

மக்களைத் திருத்த வேண்டிய சமுதாயமே இப்படி மதிகெட்டுப் போனால் யார்தான் இந்த மனித சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்? ஆக இப்படி பல ஒழுக்கக் கேட்டிற்கு மூலகர்த்தா வாக இருக்கும் சினிமாவை விட்டொழிப்போம். தவறு என்று உணர்ந்து விட்டால் முதலில் நாம் பார்ப்பதை நிறுத்துவோம். பின் நம் குடும்பம், உற்றார், சுற்றத்தார் பின் மனித சமூகமே அந்த தீமையிலிருந்து விடுபட முயற்சிப்போம், வல்ல நாயன் நம்மனைவரையும் நேர்வழி நடக்கும் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக!

இவ்வுலகம் மிக அற்பமானதே! அல்குர்ஆன் :

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக் கையுமேயன்றி வேறில்லை! எனினும் பயபக்திய டையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (6:32)

(இறைவன் மறுமையில் மனிதர்களையும் ஜின்களையும் நோக்கி) மனிதர்கள் ஜின்கள் கூட்டத்தாரே உங்களில் தோன்றிய நம்முடைய தூதர்கள் உங்களிடம் வந்து நம்முடைய வசனங்களை உங்களுக்கு படித்து காண்பித்து நீங்கள் நம்மைச் சந்திக்கும் இந்நாளைப் பற்றி உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லையா? என்று கேட்பான். அதற்கவர்கள் (எங்கள் இறைவனே! உண்மைதான்) இவ்வுலக வாழ்க்கை எங்களை மயக்கி விட்டது என்று தங்களுக்கு எதிராக சாட்சியம் கூறுவதுடன், நிச்சயமாக தாங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததாகவும் தங்களுக்குத் தாமே எதிராக அவர்கள் சாட்சியம் கூறுவார்கள். (6:130)

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் (அவ்வாறு புறப்படாமல்) நீங்கள் ஊரில் தங்கிவிடுவதன் காரணமென்ன? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே! (9:38)

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத் திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். (11:15)

அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு ஏராள மாகக் கொடுக்கிறான் (தான் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் கொடுக்கிறான். எனினும், (நிராகரிப்பவர்கள்) இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே சந்தோஷமடைகின்றனர். இவ்வுலக வாழ்க்கையோ மறுமையுடன் (ஒப்பிட்டுப் பார்த்தால்) மிக்க அற்பமேயன்றி வேறில்லை. (13:26)

மனிதர்களே! நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும் தான். தவிர உங்களுக்கிடையில் ஏற்படும் வீண் பெருமையும், பொருளிலும் சந்ததி யிலும் அதிகரிக்க வேண்டுமென்ற வீண் எண்ண மும்தான்.
(இதன் உதாரணமாவது:) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அந்த மழை யினால் முளைத்த பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிக்குக் களிப்பை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகிவிடுவதைக் காண்கின்றான். (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக் கின்றது) மறுமையிலோ (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும் (சிலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை. (57:20)

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்