அது பிரச்சினை! "சிலுவைப் போர்" என்ற வாசகமே பிரச்னை. உள் நாட்டில் பொதுமக்களிடம் கிளர்ச்சியை உண்டாக்கும். அமெரிக்காவிடம் சங்காத்தம் வைத்துக் கொண்டு இராக், ஆப்கன் போருக்குத் தோள் கொடுப்பதற்கு மக்கள் சங்கடம் விளைவிப்பார்கள். தலையில் அடித்துக் கொண்ட புஷ்ஷின் அதிகாரிகள் அமெரிக்கக் காங்கிரஸிற்கு வாக்குத் தெரிவித்தார்கள் - "இது இஸ்லாத்திற்கு எதிரான போர் எல்லாம் கிடையாது. உலக ஞானம் குறைவாயுள்ள நம் ஐயா சற்று தட்டுக் கெட்டுச் சொல்லிவிட்டார், தீவிரவாத கெட்டப் பிள்ளைகளுக்கு எதிரான போர் மட்டுமே இது". அரபு மன்னர்களும், "ஆமாமாம். அதிபர் தப்பாய் சொல்லிவிட்டார். இது இஸ்லாத்திற்கு எதிரான போர் அல்ல. எனவே தோள் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம், நட்பின் இலக்கணம்" என்று தமது நாட்டில் அமெரிக்கப் படைகளுக்கு அனைத்து சௌகரியங்களும் செய்து கொடுத்தனர். போர் தொடங்கியது. பின்னர் ஈராக்கில் சிறைக்கூடங்களில் நடந்தேறிய அவலங்களும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளும், குர்ஆன் அவமதிப்பு நிகழ்ச்சிகளும் - அவையெல்லாம் தனிக் கதை, தனி நாவல். சென்ற வருடம், ஆவணப்படம் தயாரிக்கும் அமெரிக்கர் ஒருவர் ஆப்கன் பாக்ராம் ராணுவ விமான தளத்தில் அமெரிக்க ராணுவ மதகுருமார்களின் உரையாடல் ஒன்றைத் தெரிந்தோ தெரியாமலோ பதிவு செய்து விட்டார். ஆப்கனியர்கள் பேசும் புஷ்த்து மொழியில் அச்சிட்டுள்ள பைபிளை எப்படி விநியோகம் செய்வது என்ற ஆலோசனை அளவளாவல் அது. எப்படியோ அல்-ஜஸீரா தொலைக்காட்சிக்கு அந்தப் பதிவு வந்து விட்டது. உடனே செய்தியை வெளியிட்டு விட்டார்கள். [வாசிக்க: http://english.aljazeera.net/news/asia/2009/05/200953201315854832.html] ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷா அஹ்மத்ஸை (Ahmed Shah Ahmedzai), "அமெரிக்கா இங்கு என்ன செய்ய வேண்டுமோ அதிலிருந்து முற்றிலும் வழி தவறி வேறு நோக்கத்துடன் நடந்து கொள்கிறது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டமே இதற்கு ஒத்துக் கொள்ளுமா என்று தெரியவில்லை" என்றெல்லாம் தைரியமாகப் பேசி, "அமெரிக்க வீரர்கள் முஸ்லிம்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயல்கின்றனர். அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கருத்துத் தெரிவித்தார். ஆனால், "ஆப்கானியர்களை மதம் மாற்றும் திட்டமெல்லாம் ராணுவத்திற்கு இல்லை. பொறுப்பற்ற முறையில் செய்தி நிறுவனம் நடந்து கொள்கிறது" என்று அமெரிக்க கர்னல் க்ரெக் ஜுலியன் (Greg Julian) காட்டமாய் பதில் பேட்டி அளித்து முடித்து விட்டார். [வாசிக்க: முஸ்லிம்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள்!] போர் தொடர்ந்து கொண்டிருந்தது. க்ளைன் பின்டான் (Glyn A.J. Bindon) என்பவர் தெற்கு ஆப்பிரிக்காவில் பிறந்தவர். 1950களில் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். பிரமாதமான பொறியியல் வல்லுநர். பட்டப்படிப்பு முடிந்த கையோடு நியூயார்க்கிலுள்ள ஒரு சிறு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தவர் அமெரிக்கக் கப்பல் படையின் F-8U Crusader எனும் போர் விமானத்தின் வால் பகுதிக்குச் சிறப்பான ஷாக் அப்ஸார்பர் (shock absorber) ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார். அதன்பின் படிப்படியாய் உயர்ந்தவர் Trijicon Inc. எனும் நிறுவனம் தொடங்கினார். இவர் செப்டம்பர் 2003ஆம் வருடம், தனது சிறு விமானத்தில் பயணம் செய்யும் போது விபத்துக்குள்ளாகி இறந்து போனார். ![]() புரிந்து கொள்ளக் கஷ்டமென்றால், டிவி சினிமாவிலெல்லாம் காண்பிப்பார்களே சுடுவதற்கு முன் இலக்கின் மேல் கூர்மையான சிவப்பொளி ஒன்று பாய்ந்து நிலைகுத்துமே, அது. இதுவும் அமெரிக்க ராணுவம் கொள்முதல் செய்யும் மற்றொரு சரக்கு. சிறப்பான இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1995-லிருந்து வாடிக்கையாளர். மாபெரும் வாடிக்கையாளர். 2009ஆம் ஆண்டு மட்டும் ஒன்றல்ல, இரண்டல்ல 66 மில்லியன் டாலருக்குச் சரக்குகள் வாங்கியுள்ளனர். இந்த ராணுவ தயாரிப்புகளில் ஒரு கருவியில் யோவான் 8:12 (மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்) என்ற வசனத்தின் குறியீடும், மற்றொன்றில் II கொரிந்தியர் 4:6 (இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப் பண்ணும் பொருட்டாக,எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்) என்ற வசனத்தின் குறியீடும் இடம் பெற்றுள்ளன.
யோக்கியமான பேச்சு!
Courtesy to Satyamarkam |
_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment