ஆப்கனின் ஆக்கிரமிப்பு படை வீரர் ஒருவர் தலைநகர் காபூலுக்கு சுமார் 140 கி.மீ தூரத்தில் லோகர் மாகாணத்தில் அமைந்துள்ள படைத்தளம் ஒன்றிலிருந்து துப்பாக்கி வேட்டு ஒன்றை தீர்த்த பின் அவ்விடத்தை விட்டும் நகர்வதை படத்தில் காணலாம். (REUTERS/Nikola Solic) , September 25, 2009.
தாலிபான்களின் தாக்குதலின் சேதமுற்ற அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் யுத்த தாங்கி ஓன்று லோகார் மாகணத்திலுள்ள எபர் எனும் கிராமத்திலுள்ள வீதி ஒன்றினூடாக கொண்டுவரப்படுகிறது. (REUTERS/Nikola Solic), September 26, 2009
காபுலிலுள்ள நேடோ படைகளின் இராணுவ விமான நிலையத்தின் வாயிலில் தாலிபன்களால் நடாத்தப்பட்ட தட்கொளைக்குண்டுத் தாக்குதலில் காயமுற்ற படை வீரர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதில் ஆபிகான் படைகள் உதவியளிப்பதை காணலாம். (Pajhwok Photo Service/AFP/Getty Images), September 8, 2009
ஆப்கானின் எதிர்கட்சி வேட்பாளர் அப்துல்லாஹ் அப்துல்லாவின் ஆதரவாளர்கள் காபுலில் அவருக்கு சார்பாக நடாத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்தப்படுவதை செவியுற்ற வண்ணம் உள்ளனர். (REUTERS/Ahmad Masood), September 27, 2009.
ஆப்கான் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாகி கூடாரங்களில் தங்கியுள்ள இலட்சக்கணக்கான மக்களில் மலைக்குகை ஒன்றிலிருந்து ரெஸா தனது மகளை ஏந்திய வண்ணம் தாக்குதல் சம்பவங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார். (Photo Paula Bronstein/Getty Images), September 7, 2009 .
ஆப்கனில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் பணியாளர் ஒருவர் பணியில் ஈடுபட்டுள்ளதை காணலாம். (Paula Bronstein/Getty Images), September 2 , 2009 .
பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் மஹ்மூத் கிலானியின் பிரச்சார வாகனத்தொடர் பிரச்சாரப் பணிகளை முடித்து விட்டு தூரப்பிரதேசமான தெசி அனும நகரை விட்டுச்செல்வதை காணலாம். (John Moore/Getty Images), September 15, 2005 .
ஆபிகானின் மத்திய மாகாணமான கேஒர் மாகாணத்தில் வசிக்கும் ஆப்கன் சிறுமி அப்தாப் யுனிசெப் இனால் நாடு பூராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலியோ தடுப்பு மருந்து வழங்கும் நிகழ்வில் தடுப்புமருந்துக்காக காத்து நிற்பதை காணலாம். (REUTERS/Maria Golovnina), September 13, 2009.
ஆப்கனின் பெயசாபத்திலுள்ள ஆறு ஒன்றினூடாக ஆப்கான் வாசி ஒருவர் நடந்துசெல்வதை காணலாம். (AP Photo/Anja Niedringhaus), Sept. 12, 2009.
பெம்யான் மாகாணத்திலுள்ள பாபா மலையை நோக்கி பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட சமாதானத்திற்கான அணிவகுப்பு ஊர்வலத்தில் ஆப்கான் வாசி ஒருவர் பட்டம் ஒன்றை பறக்க விடுவதை காணலாம். (MASSOUD HOSSAINI/AFP/Getty Images), September 25, 2009.
கந்தகார் மாகணத்திலுள்ள பஞ்ச்வாய் எனும் கிராமத்திலுள்ள 8 சிறார்கள் வெடிமருந்தை சாப்பிட்டதனால் ஏற்பட்ட கடும் வருத்தத்தால் முன்னணி இராணுவ தளத்திற்கு எடுத்துவரப்பட்ட போது கனேடிய இராணுவ மருத்துவர் ஒருவர் அதில் ஒரு சிறாரை பரிசோதிப்பதை காணலாம். (REUTERS/Finbarr O'Reilly), September 12, 2009.
குண்டு வைத்து தகர்க்கப்பட்ட காபூலிலுள்ள அரச அரண்மனைக்கு முன்னாள் ஆப்கான் வாசிகள் கால்பந்து விளையாடுவதை காணலாம். (AP Photo/Manish Swarup), Sept. 23, 2009.
0 comments:
Post a Comment