_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...
வாஷிங்டன்:உலகத்தில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு அந்த
சமூகத்தவரின் ஜனத்தொகை அதிகரித்துள்ளது.சமீபத்தில் மத அமைப்பு ஒன்று
ஆய்வு மேற்கொண்டது. இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


உலகம் முழுவதும் 232 நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.157 கோடி
முதல் 180 கோடி வரை முஸ்லிம் சமூகத்தவரின் எண்ணிக்கை உள்ளது. லெபனான்
முஸ்லிம் நாடு. இருப்பினும் இந்த நாட்டை விட ஜெர்மனியில் அதிக
முஸ்லிம்கள் உள்ளனர். இதே போல சிரியா முஸ்லிம் நாடு. ஆனால் இந்தநாட்டை
விட சீனாவில் முஸ் லிம்கள் அதிகம் உள்ளனர். ஜோர்டான் மற்றும் லிபியாவை
விட, ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானிலும், எதியோப்பியாவிலும் சரிவிகிதத்தில் முஸ்லிம்கள்
வசிக்கின்றனர். உலகம் முழுவதும் 220 கோடி கிறிஸ்துவர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் சமூகத்தினர் தான் அதிக அளவில்
உள்ளனர்.

அதாவது மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு
முஸ்லிம் சமூதாயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அரபு நாட்டவர்கள்
தான் முஸ்லிம்கள் என்ற நிலை தற்போது மாறி விட்டதாக பிரின்ஸ்டோன் பல்கலைக்
கழக பேராசிரியர் அமானே ஜமால் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களில் ஷியா, சன்னி பிரிவு வேறுபாடு ஒரு சில நாடுகளில் மட்டுமே
அதிகமாக காணப்படுகிறது. ஈரான், ஈராக்,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளில்
அதிக அளவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.இவ்வாறு ஆய்வறிக்கை
கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்