_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

மே 2-ம் தேதி. அதிகாலை நேரம். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து இரண்டு மணிநேர பயண தூரத்தில் உள்ள அபோதாபாத் நகரத்தில் இருக்கும் காக்கூல் இராணுவ பயிற்சி மையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் அந்த பெரிய கட்டிடத்தை நான்கு உலங்கு வானூர்தியில் வந்த 79 அமெரிக்க சீல்(seals) படையினர் தாக்குகின்றனர். நாற்பது நிமிடங்கள் நீடித்ததாகச் சொல்லப்படும் அந்த சண்டையின் இறுதியில் தமது இலக்கைத் தாக்கியழித்து விட்டு அமெரிக்க வீரர்கள் 'வெற்றியுடன்' திரும்புகின்றனர்.

அதற்குச் சற்று நேரத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் பாரக் ஒபாமா, அமெரிக்கர்களுக்கு நீதி கிடைத்து விட்டது என்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக வலை வீசித் தேடி வந்த உலகின் நம்பர் ஒன் தீவிரவாதியான ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் அபோதாபாத்தில் நடந்த சண்டையில் கொன்று விட்டனர் என்று தெரிவிக்கிறார். அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்ற பயங்கரவாதிக்கான நீதியை வழங்கி விட்டதாகவும், ஆனாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான தமது போர் தொடரும் என்றும் அறிவிக்கிறார்.

அதைத் தொடர்ந்து இந்த விசயம் உலகெங்கும் உள்ள ஊடகங்களில் ஒரு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. உலகத்தின் நாகரீக சமூகத்திற்கே ஆகப் பெரிய சவாலாக விளங்கிய படுபயங்கரமான தீவிரவாதி கொல்லப்பட்டதை உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ ஊடகங்கள் கொண்டாடின. ஆனால், இவர்களுக்கும் முன்னதாக இந்த 'நரகாசுரவதத்தைக்' கொண்டாடத் துவங்கியது அமெரிக்கர்கள் தான். செய்தி வெளியானதும் வெள்ளை மாளிகையைச் சூழ்ந்து கொண்ட நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்துள்ளனர். தேசிய வெறி முழக்கங்களைத் தெரிவித்து மகிழ்ந்துள்ளனர்.

இன்னொரு பக்கம் பாகிஸ்தானில் திரளான மக்கள் ஒசாமா கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்க எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியுள்ளனர். புனிதப் போராளியான ஒசாமா பின்லேடனுக்கு சொர்கத்தில் இடம் நிச்சயம் என்று சொல்கின்றனர். வசதியான வீட்டுப் பிள்ளையான ஒசாமா, இசுலாத்தையும் இசுலாமியர்களையும் காப்பதற்காகவே தனது சுகவாழ்க்கையைத் தியாகம் செய்து காடு மலையெல்லாம் அலைந்து திரிந்தார் என்று இவர்கள் நம்புகிறார்கள். அமெரிக்கா என்றாலே இசுலாமிய எதிர்ப்பு என்பது பட்டவர்த்தனமாக நடந்து வரும் வேளையில் ஒரு சராசரி முசுலீம் கூட பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து வருந்துவார் என்பதில் ஆச்சரியமில்லை. அதைத் தவறாக எண்ணவேண்டிய அவசியமும் இல்லை.

பொதுவில் அமெரிக்காவின் இந்த சாகச நடவடிக்கையைப் போற்றிப் புகழும் ஊடகங்களை விடுத்துப் பார்த்தால், வெகு சில அமெரிக்க எதிர்ப்பு ஊடகங்களிலோ இது மொத்தமும் பெரிய மோசடியென்கிறார்கள். ஒசாமா பின்லேடன் ஏற்கனவே மரணமடைந்து விட்டாரென்றும், இப்போது அமெரிக்கா சொல்வதே பச்சையான பொய் என்றும் சொல்கின்றனர். சர்வதேசப் பெருமந்தம் என்கிற பெரும்  பொருளாதாரப் புதைகுழியிலும் ஆப்கான் போர் என்கிற இராணுவரீதியிலான புதைகுழியிலும் மீளமுடியாமல் சிக்கியிருக்கும் அமெரிக்கா, அதிலிருந்து  மக்களின் கவனத்தை திசை திருப்பவே இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இவர்களில் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், எதிர்வரும் தேர்தலுக்குள் சரிந்து போன தனது செல்வாக்கை நிமிர்த்தும் முகமாகவே பராக் ஒபாமா இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஒசாமா பின்லேடனை அமெரிக்கத் தயாரிப்பு என்று ஒப்புக் கொள்ளும் சிலரும் கூட, அவரால் அமெரிக்கா படுபயங்கரமான பாதிப்புக்குள்ளாகி விட்டதைப் போன்றும், அவர் அமெரிக்காவுக்கு தீர்க்க முடியாத ஒரு பெரும் சவாலாக விளங்கினார் என்றும் இப்போது படாதபாடெல்லாம் பட்டு அமெரிக்கா அவரைத் தீர்த்துக் கட்டியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இந்த அம்சங்களை நாம் தனித்தனியே பிரித்துப் பார்த்து பொருள் கொள்ள முடியாது. ஒசாமா யாருக்காக வாழ்ந்தார் என்பதைப் புரிந்து கொள்வதில் இருந்து தான் அவர் யாருக்காக செத்தார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். யாருக்காக செத்தார் என்பதை விளங்கிக் கொள்ளும் போது தான் எதற்காகச் சாக வேண்டும் என்பது தெரியவரும். இந்தப் பரிசீலனைகளின் நீட்சியாக எப்போது செத்தார் என்கிற ஆராய்ச்சியின் தேவையும் தேவையின்மையும் அதன் மெய்யான பொருளில் நமக்கு விளங்கும்.

ஒசாமா இறந்தாலும் ஆயிரம் பொன், இருந்தாலும் ஆயிரம் பொன்!

ஒப்பீட்டளவில் ஒசாமாவைக் காட்டிலும் உள்நாட்டு மக்களிடையே ஓரளவு செல்வாக்கு பெற்றிருந்த சதாம் உசேன் பிடிபட்டதையும், விசாரணை என்கிற பெயரில் அவர் அவமானப்படுத்தப்பட்டதையும், பின்னர் அவர் அநீதியான முறையில் கொல்லப்பட்டதையும் வீடியோக்களாக 'கசிய' விட்டு ஈராக்கியர்களிடையே பயபீதியை ஏற்படுத்திய அமெரிக்கா, ஒசாமா கொல்லப்பட்டதும் அவரது உடலை வெளியே காட்டாமல் அவசர அவசரமாக கடலில் வீசியெறிந்து விட்டதாகச் சொல்கிறது.

ஒசாமாவைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் ஜெரோனிமா பற்றிய தகவல்களைக் கூட அமெரிக்க சி.ஐ.ஏவின் உயரதிகாரிகளும் வெள்ளை மாளிகளை அதிகாரிகளும் முன்னுக்குப் பின் முரணாகத் தான் சொல்லி வருகிறார்கள். ஒசாமாவோடு அவரது மனைவியும் மகனும் கொல்லப்பட்டார்கள் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள் – பின்னர் இல்லையில்லை அது அவரது கூட்டாளியின் மனைவியும் மகனும்  என்று மாற்றினார்கள். அடுத்து, ஒசாமாவே துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சண்டையிட்டார் என்றார்கள். ஒசாமாவின் உடல் நலிவைப் பற்றி ஊடகங்கள் எழுதத் துவங்கிய பின் இல்லையில்லை அவர் கைது நடவடிக்கையை எதிர்க்கும் விதமான செய்கைகளைச் செய்தார், எனவே தற்காப்புக்காக கொன்றோம் என்கிறார்கள்.

இப்படி மாற்றி மாற்றி அமெரிக்கர்கள் உளறிக் கொட்டுவதைச் சுட்டிக் காட்டும் சிலர், இது மொத்தமுமே ஒரு நாடகம் என்கிறார்கள். ஒசாமா 2001 டிசம்பரிலேயே கொல்லப்பட்டு விட்டதாகவும், தமது 'தீவிரவாதத்துக்கு எதிரான'  போருக்கு மக்களிடையே ஒரு ஆதரவு தளத்தை உண்டாக்கவும், ஒசாமாவை மோசமான எதிரியாகச் சித்தரித்து அமெரிக்கர்களிடையே போருக்கு ஆதரவானதொரு பொதுக் கருத்தை காட்டமைக்கவே இத்தனை நாளும் அதை மறைத்தார்கள் என்று இவர்கள் கருதுகிறார்கள்.

இரட்டை கோபுரத் தகர்ப்புக்குப் பின் பகிரங்கமாக ஒசாமா வெளியே தலைகாட்டாமல் இருந்ததையும் அதன் பின் வெகு சில சந்தர்பங்களில் வெளியான அவரது வீடியோக்களின் நம்பகத்தன்மை சுயேச்சையான ஆய்வுகளில் (ஃபோரன்சிக் ஆய்வு) கேள்விக்குள்ளாக்கப் பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டும் இவர்கள், இப்போது ஆப்கானில் இருந்து வெளியேற முடியாமல் அமெரிக்கா தவிப்பதாகவும், போருக்கான செலவினங்கள் அதிகரித்து அமெரிக்கப் பொருளாதாரத்தின் கழுத்தை நெறிப்பதாகவும், இதனால் ஆப்கான் போரை ஒரு கவுரவமான வெற்றியாக சித்தரிக்கும் முகமாகவே இப்போது ஒசாமா கொல்லப்பட்ட நாடகம் நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். இது இன்னொரு பக்கத்தில் ஒபாமாவின் சரிந்து போன செல்வாக்கை உயர்த்தவும் பயன்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.

மேற்கண்ட வாதங்கள் முழுமையும் பொய் என்று ஒதுக்கிவிட முடியாது. ஆனால், ஒரு அடிப்படையான அம்சத்தை இவர்கள் காணத் தவறுகிறார்கள். போரிலிருந்து பின்வாங்குவது தான் அமெரிக்காவின் நோக்கம் என்றால், இப்போது லிபியாவின் மேல் ஏன் போர் தொடங்க வேண்டும்? அடுத்து சிரியாவின் மேல் ஏன் குறிவைக்க வேண்டும்? நிதர்சனம் என்னவென்றால்,ஏகாதிபத்தியம் போர்களில் இருந்து விலகுவதன் மூலம் தனது நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்ள விளைவதில்லை – அது மேலும் மேலும் போர்களில் ஈடுபடுவதன் மூலமே தனது நெருக்கடிக்கான தீர்வை அடைய விரும்புகிறது. அதுதான் ஏகாதிபத்தியங்கள் உயிர்வாழ்தலின் ரகசியம்.

அதே நேரம் ஒசாமா கொலை பற்றி அமெரிக்கர்கள் மாற்றி மாற்றி முரண்பட்ட தகவல்களை அளிப்பதையும், 2007-க்குப் பிறகு ஒசாமா வீடியோ / ஆடியோ உள்ளிட்ட எந்த ரூபத்திலும் தலைகாட்டாத எதார்த்த உண்மையையும், இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பின் நடந்ததாகச் சொல்லப்படும் 'இசுலாமிய தீவிரவாத' தாக்குதல்கள் எதையும் ஒசாமாவின் நேரடிக் கட்டளையின் பேரில் நடக்கவில்லை என்று ஏகாதிபத்தியவாதிகளே சொல்வதையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.

ஆக, உண்மை என்பது இந்த இரண்டுக்கும் இடையில் தான் இருக்கிறது.

ஒசாமா 2001-ல் இறந்தாரா – இல்லை 2011-ல் இறந்தாரா என்பதைப் பற்றிய பரிசீலனைக்குள் போவதற்கு முன், ஒசாமா பின்லேடன் என்கிற பெயர், அதைச் சுற்றி கவனமாக கட்டப்பட்ட பிம்பம், அந்த பிம்பத்தைப் பற்றி அமெரிக்க மற்றும் உலக மக்களின் பொதுக்கருத்தில் முதலாளித்துவ ஊடகங்களால் தொடர்ச்சியாகத் திணிக்கப்பட்ட பயபீதி, இந்த பயபீதியினால் ஏற்பட்ட விளைவுகள் என்ன – அது யாருடைய நலனுக்கு சேவை புரிந்துள்ளது என்பதைக் குறித்து நாம் புரிந்து கொண்டால் தான் முந்தைய கேள்விக்கான பதில் நமக்கு விளங்கும்.

அமெரிக்க அரசின் இயக்கமும் அதன் செயல்பாடுகளும் – அந்தச் செயல்பாடுகளினால் விளையும் நன்மைகளும் முழுக்க முழுக்க பன்னாட்டு முதலாளிகளின் நலன் சார்ந்த ஒன்று. போர் என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம்? போர் என்றால் அப்பாவி மக்கள் சாவார்கள். ஒன்றுமறியாத குழந்தைகள் அநியாயமாகச் சாவார்கள். போர் என்றால் ஒரு சமூகத்தின் சர்வநாசம். அதன் சமூகப் பொருளாதாரக் கட்டமைவின் பேரழிவு. இப்படித்தான் போரைப் பற்றி ஓரளவுக்கு விவரம் புரிந்தவர்கள் கூடப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சரிதானே?

ஆனால், முதலாளிகளைப் பொருத்தளவில் போர் என்பது ஒரு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம். போர் என்றால் ஆயுத விற்பனை – ஆயுத வியாபாரிகள் கொழிப்பார்கள். போரின் அழிவு என்றால் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு – கட்டுமானக் கம்பெனிகளின் கொழிப்பு. போரின் இறுதியில் தோற்றுப் போகும் நாட்டின் வளங்களின் மறுபங்கீடு. தமது பொருட்களுக்கான சந்தை. இதையெல்லாம் கடந்து வெல்லப்பட்ட நாட்டின் மீது வென்ற நாட்டின் மேலாதிக்கம்.

ஒசாமா பின்லேடன் என்று ஒருவர் இல்லாமல் போய் – இரட்டை கோபுரம் தகர்க்கப்படாமல் இருந்திருந்தாலும் கூட ஆப்கான் போர் என்பது சர்வ நிச்சயமாய் நடந்திருக்கும். அதற்கு இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பதையும் மனிதகுலத்துக்கே சவால் விடுக்கும் 'படுபயங்கர' சாத்தானாகச் சித்தரிக்கப்படும் ஒசாமா பின்லேடனையும் கடந்து பல்வேறு தேவைகளும் காரணங்களும் அமெரிக்காவிடம் இருந்தன. அந்தக் காரணங்கள் என்னவென்பதைப் பற்றி நாம் விரிவாக விளக்கும் முன்,  ஈராக் போருக்கான முக்கியமான காரணமாக அமெரிக்காவால் சொல்லப்பட்ட பேரழிவிற்கான ஆயுதங்கள் என்பது ஒருபோதும் ஈராக்கில் கண்டெடுக்கப்பட்டதில்லை என்பதை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பும், அல்-காய்தா, தாலிபான் உருவாக்கமும்: ஒரு சுருக்கமான வரலாறு!

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளாயிருந்த மத்திய ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் நிலங்களின் அடியில் அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உஸ்பெகிஸ்தானில் கொட்டிக் கிடக்கும் தங்கம், தஜிகிஸ்தானில் புதைந்து கிடக்கும் ஏராளமான வெள்ளி, கஜாக்கிஸ்தானின் யுரேனிய இருப்பு ஆகிவற்றைக் கடந்து, இந்நாடுகளின் நிலத்தினடியில் ஏராளமான இயற்கை எரிவாயு ரிசர்வும் உள்ளது. கஜாக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், அசர்பெய்ஜான் ஆகிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் கன மீட்டர் எரிவாயு நிலத்தினடியில் இருக்கிறது.

கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கே துர்க்மெனிஸ்தான், வடக்கே உஸ்பெக்கிஸ்தான் மற்றும் தாஜிகிஸ்தான், வட கிழக்கே சீனாவின் ஜின்சியாங் மாநிலம் ஆகியவற்றைத் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கும் ஆப்கான் போர்தந்திர ரீதியில் ஒரு புவியியல் கேந்திரமான இடத்தில் அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின் எரிவாயுவை ஐரோப்பியச் சந்தைக்குக் கடத்திச் செல்ல வேண்டுமானால் ஒன்று ஈரான் வழியே கொண்டு சென்றாக வேண்டும் அல்லது ஜார்ஜியா வழியே கொண்டு சென்றாக வேண்டும்.

ஈரான் அமெரிக்காவுக்குப் படியாத நாடு என்பதைக் கடந்து, ஈரான் வழியே துருக்கியை குழாய் மூலம் இணைப்பது என்பது துருக்கிக்கும் ஈரானுக்கும் பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவானதொரு நட்புறவு தோன்றி விட அடிப்படையாய் அமைந்து விடும். ஈரானைத் தனிமைப்படுத்துவதைத் தனது அடிப்படையான மத்தியகிழக்குக் கொள்கையாகக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்த கதையாகி விடும்.

ஜார்ஜியா வழியே குழாய் அமைக்கலாம் என்றால் அங்கே ஆயுந்தாங்கிய மாஃபியா கும்பலின் தொல்லை. அதுவுமின்றி ஜார்ஜியாவின் தெற்கு எல்லைப் பிராந்தியமான ஒஸ்ஸேடியாவை ரசியா சொந்தம் கொண்டாடுகிறது. இவ்விரு நாடுகளுக்குள்ளும் இருக்கும் எல்லைத் தகறாரின் காரணமாக ரசியா அவ்வப்போது ஜார்ஜியாவின் மேல் ராணுவத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. ஜார்ஜியாவை நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைப்பதையும் ரசியா எதிர்த்து வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ரசியாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையாகத் தோற்றமளித்தாலும், ஜார்ஜியாவின் ஊடாக மேற்கு நாடுகள் எண்ணைக் குழாய் அமைத்து விடக் கூடாது என்பதில் ரசியா குறிப்பாக இருப்பது புரியும்.

இவ்விரு பாதைகளும் அடைபட்டதும் அமெரிக்காவின் முன் இருக்கும் எஞ்சிய வாய்ப்பு ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக்கடல் என்கிற குழாய்ப் பாதை தான். மேலும் இது  மேலே சொல்லப்பட்ட இரண்டு பாதைகளையும் விட குறைந்த செலவு பிடிக்கக் கூடியது. அரபிக்கடலில் இருந்து ஐரோப்பியச் சந்தைக்கும் இந்தியச் சந்தைக்கும் கப்பல் மூலம் எண்ணையை ஏற்றுமதி செய்வது சுலபம். இறுதியாக அமெரிக்காவின் போட்டியாளர்களாக உருவெடுத்து வரும் ரசியா, சீனா இரண்டு நாடுகளையும் கண்காணிப்பதற்கும், பயமுறுத்துவதற்கும், தேவையான இராணுவத் தளங்களை ஆப்கானில் வைத்திருப்பதும் முக்கியமானது.

ஆப்கானின் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால் தான் பனிப்போர் காலத்திலேயே சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்திருந்த சோவியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆப்கானைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் எழுபதுகளின் இறுதியில் ரசியாவின் கை ஓங்கியிருந்தது. அப்போது அங்கிருந்து ரசியாவை விரட்ட அமெரிக்கா பெற்றெடுத்த சொந்தப் பிள்ளைகள் தான் தாலிபானும் அல்-காய்தாவும்.

நாத்திகர்களான கம்யூனிஸ்ட்டுகளை இசுலாமிய மண்ணான ஆப்கானில் இருந்து விரட்டுவதற்காகப் பல்வேறு இசுலாமிய நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பாகிஸ்தானில் குவித்தது அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அங்குள்ள மதரஸாக்களில் வைத்து அவர்களுக்கு சித்தாந்தப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் அளித்தது பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. இதற்கு தேவையான நிதி உதவியை அமெரிக்க அடிமைகளான சவுதி ஷேக்குகள் அளித்தனர். இப்படியாகத் தான் அரபு நாடுகளில் கட்டுமானத் தொழிலின் மூலம் பெரும் செல்வம் ஈட்டி சவூதி அரச குடும்பத்துக்கு நிகரான பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமா பின்லேடன் ஆப்கான் வந்திறங்கினார்.

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமாவே சுகவாழ்க்கையை விடுத்து நாத்திகர்களை எதிர்த்து ஜிஹாத்தில் குதித்துள்ளார் என்கிற பிரச்சாரம் ஏழை முசுலீம்களிடம் சிறப்பாக எடுபடும் என்பது அமெரிக்காவின் கணக்கு. அமெரிக்காவின் அந்தக் கணக்கு தப்பவில்லை; ஆனால், அவர்கள் கணக்குப் பண்ணிப் பார்க்க வேண்டும் எண்ணியிராத எதிர்பாராத ஒரு இலக்கிலிருந்து தான் அடுத்த தாக்குதல் இறங்கியது. கம்யூனிச 'அபாயத்தைக்' களையும் நோக்கத்திற்காகப் அமெரிக்கா பெற்றுப் போட்ட தாலிபானும், அல்-காய்தாவும் தமது பிறவி நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர். எண்பதுகளின் இறுதியில் சோவியத் படைகள் ஆப்கானில் இருந்து பின்வாங்கின.

அல்-காய்தாவுக்கும் ஆப்கான் போரில் பங்கேற்க முஜாஹிதீன்களைத் திரட்டவும் இசுலாமிய நாடுகளின் இளைஞர்களிடையே ஒரு பிரச்சார முழக்கமாக அமெரிக்கா முன்வைத்திருந்த சித்தாந்தமான இசுலாமிய சர்வதேசியம் பூமராங் போல் திருப்பித் தாக்கும் சந்தர்பமும் உடனடியாக வந்து சேர்ந்தது அமெரிக்காவே எதிர்பார்த்திராத ஒரு சுவாரசியமான திருப்பம். ஆப்கான் போர் முடிந்து சவூதி திரும்பிய பின்லேடனை ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பு எதிர்கொள்கிறது.

இவ்விவகாரத்தில் அமெரிக்கத் தலையீட்டை பின்லேடன் எதிர்க்கிறார். ஈராக்கை தனது அல் காய்தாவையும் முஜாஹித்தீன்களையும் வைத்தே எதிர்கொள்ளலாம் என்கிற பின்லேடனின் விருப்பம் நிராகரிக்கப்படுகிறது. மேலும் சவூதி அரசின் அமெரிக்க விசுவாசமும் சவூதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளும், வரலாற்று ரீதியிலான யூத இசுலாமிய முரண்பாடுகளின் பின்னணியில் பின்லேடனுக்கு இருந்த இசுரேல் எதிர்ப்பும், அதற்கு எண்ணை வார்க்கும் இசுரேலின் பிராந்திய ரவுடித்தனமும், அந்த ரவுடித்தனத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் தாதாத்தனமும் பின்லேடனுக்குள் ஆழமான அமெரிக்க எதிர்ப்புணர்வை  உண்டாக்குகிறது. இது பின்லேடனுக்குள் மட்டுமல்ல மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க அடிமை ஆட்சியாளர்களைத் தவிர்த்த இசுலாமிய மக்கள் அனைவருக்குள்ளும் உருவாகிறது.

என்னதான் அமெரிக்கத் தயாரிப்பாக இருந்தாலும் – அமெரிக்கப்  பாடதிட்டமான இசுலாமிய சர்வதேசியத்தைப் பயின்றிருந்தாலும் பின்லேடன் அதை உணர்வுப்பூர்வமாக பற்றி நின்றிருக்கிறார். இங்கே பின்லேடனிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் பொதுவில் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனநாயக சக்திகளிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் அடிப்படையிலேயே வேறு வேறானது. பின்லேடனிடமோ தாலிபானிடமோ வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வு என்பது மக்கள் விடுதலை உரிமை என்கிற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதல்ல – அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடத்தில் இசுலாமை மாற்றீடு செய்ய வேண்டும் – இழந்த தமது மேண்மையை மீட்க வேண்டும் என்கிற நோக்கத்தின் மீது கட்டப்பட்டது. அரபுலகில் மக்களது ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்பது அல் காய்தாவின் கோரிக்கையல்ல. அங்கிருக்கும் ஆட்சியாளர்களைத் துறத்திவிட்டு தூய இசுலாமிய சர்வாதிகாரத்தை நிறுவுவதுதான் அவர்களது நோக்கம்.

அதன் பின் 1996-ல் ஆப்கான் திரும்பும் ஒசாமா, தாலிபான்களின் பராமரிப்பில் தனது அமெரிக்க எதிர்ப்புப் போருக்கு ஆயத்தமாகிறார். தாலிபானின் பச்சையான மனித உரிமை மீறல்கள் மற்றும் காட்டுமிராண்டித் தனமான சட்டங்களின் காரணமாக அமெரிக்காவால் ஆப்கான் அரசை வெளிப்படையாக அங்கீகரிக்க முடியா விட்டாலும் அமெரிக்க அடிவருடிகளான பாகிஸ்தானும் சவூதியும் ஆப்கானை அங்கீகரித்திருந்தன. இவர்கள் மூலம் அமெரிக்கா ஆப்கானுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டிருந்தது. எண்ணை ஒப்பந்தங்களுக்காக தாலிபான்களின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கும் சென்றுள்ளனர்.

வெளிப்படையான அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பின்லேடனின் போரை ஆரம்பத்தில் தாலிபான்கள் தங்கள் சொந்தப் பிரச்சினையாகக் கருதவில்லை. முல்லா ஓமர் 98-ன் மத்தி வரையில் பின்லேடனின் இந்த முடிவை எதிர்த்துள்ளதாக அவரை மூன்று முறை பேட்டி கண்ட பாக்கிஸ்தான் பத்திரிகையாளர் ரஹிமுல்லாஹ் யூஸுஃப்ஸாய் தெரிவிக்கிறார். ஆனால் இந்த முரண்பாடு ஓரளவுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. தூய இசுலாமிய அடிப்படைவாதத்தின் மேல் கட்டப்பட்ட தாலிபான்களும் அவர்களின் முஜாஹித்தீன்களும் ஓரளவுக்கு மேல் அமெரிக்காவோடு உறவாடுவது அவர்களின் அடிப்படையையே அசைத்து விடக்கூடிய அபாயம் கொண்ட விளையாட்டு. தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் ஆப்கானில் இருந்தவாறே பின்லேடன் அமெரிக்கத் தூதரகங்களின் மேல் தொடுத்த தாக்குதல்களை தாலிபான்கள் தடுக்கவில்லை. பின்லேடனின் சர்வதேசிய இசுலாமிய முன்னணியின் செயல்பாட்டையும் முடக்கவில்லை.

இது ஆப்கானை எளிதில் மேய்ந்து விட்டுப் போய்விடலாம் – அதைத் தொடர்ந்து மத்திய ஆசிய எண்ணை வயல்களை சுலபத்தில் வளைத்துப் போட்டு விடலாம் – என்றெல்லாம் நாக்கில் எச்சில் ஊற கணக்குப் போட்டுக் காத்திருந்த அமெரிக்காவுக்கு ஆத்திரத்தைக் கிளப்புகிறது. தொண்ணூறுகளின் இறுதியிலிருந்தே ஆப்கானைத் தாக்கிக் கைப்பற்ற அமெரிக்கா தருணம் பார்த்துக் காத்துக் கிடந்த நிலையில் தான் இரட்டை கோபுரத் தகர்ப்பு நடக்கிறது.

உலக வரலாற்றில் மிகவும் ஆச்சரியப்படவைக்கும் இந்தத் தாக்குதலை அல் காய்தா நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த தாக்குதல் நடப்பதை அமெரிக்க அறிந்து தனது அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே  நடக்க அனுமதித்தது என்றெல்லாம் கூட சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ இந்த தாக்குதலை வைத்து அமெரிக்கா அறுவடை செய்த அரசியல் நடவடிக்கைகள்தான் நம்மைப் பொறுத்த வரை முக்கியமானது.

ஆப்கானின் மேலான அமெரிக்க நிலைப்பாடு பற்றியெறியத் தயாரான நிலையில் இருந்த காய்ந்து போன வைக்கோல் போர் என்றால், இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பது அதன் மீது விழுந்த சிறு பொறி. அதன் பின் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான தனது போரைத் துவக்குகிறது. அதுவரை தானே தனது நலனுக்காக ஊட்டி வளர்த்த இசுலாமிய சர்வதேசியத்தையும் முஜாஹிதீன்களையும் இப்போது புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது நலனுக்காகவே வில்லனாகச் சித்தரிக்கத் துவங்கியது  அமெரிக்கா. இப்படித்தான் விடுதலைப் போராளிகள், பயங்கரவாதிகளாக மறு நாமகர்ணம் சூட்டப்பட்டார்கள்.

தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் முதலில் ஆப்கான் மேலும் அதைத் தொடர்ந்து ஈராக் மேலும்  குண்டுகளைப் பொழிந்ததும், அவற்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததையும், அப்போரில் அநியாயமாய்க் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவிகள் பற்றியும் நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டீர்கள் – ஆனால், இதில் நீங்கள் கேள்விப்படாத இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஆப்கான் போருக்காக மட்டும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவிட்டு வருகிறது. இன்றைய நிலையில் ஈராக் மற்றும் ஆப்கான் போர்களுக்காக சுமார் 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படும் இத்தொகையானது ஆயுதக் கம்பெனி முதலாளிகளும், கட்டுமானக் கம்பெனி முதலாளிகளுக்கும், எண்ணைக் கம்பெனிகளுக்கும் தான் பாய்ச்சப்படுகின்றன. இது இந்தப் போரின் பொருளாதார முகம்  என்றால், இந்தப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது அதன் இராணுவ முகம்.

ஆக, இசுலாமிய தீவிரவாதம் என்கிற வளர்த்த கடா அமெரிக்கா விரும்பிய திசையில் பாய்ந்த போதும் சரி  – திரும்பி அமெரிக்காவின் மார்பிலேயே பாய்ந்த போதும் சரி; அதன் பலன்கள் என்னவோ அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அதன் ஆன்மாவாக இருக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கும் தான்.

இந்தப் போரின் ஒரு இடைக்கட்டமாக இப்போது ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்தாலும், அந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதியான 'தீவிரவாதத்திற்கு எதிரான போர் இன்னமும் ஓயவில்லை' என்பதே நமது அக்கறைக்கும் கவனத்திற்கும் உரியதாகும். கடந்த பத்தாண்டுகளாக போதுமான அளவிற்கு ஒசாமா பின்லேடன் என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டியே அமெரிக்கர்களிடம் பயபீதியை உண்டாக்கி ஒரு பொதுக்கருத்தை கட்டமைத்து போர் நடத்தியாகிவிட்டது. இப்போது எதார்த்தம் சாமானிய  அமெரிக்கர்களைச் சுடும் நேரம் வந்து விட்டது.

இனிமேலும் இந்தப் பூச்சாண்டியைக் காட்டி கிளைமேக்சே இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க பட்ஜெட்டிலும் மக்கள் நலத்திட்டங்களைச் சுருக்கி நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலாளிகளுக்குப் படையலிட்டுக் கொண்டிருக்க முடியாது. அதவாது மக்கள் தொட்டறியத்தக்க ஒரு வெற்றி வேண்டும். ஆக, அமெரிக்கா நடத்தி வரும் மெகா சீரியலில் இப்போதைக்கு ஒரு வில்லனைக் காவு கொடுத்து நேயர்களை கொஞ்சம் மகிழ்ச்சிப் படுத்தியாக வேண்டிய தருணம் வந்துள்ளது – ஒசாமா வதமும் நிகழ்ந்துள்ளது.

பின்லேடன் கொல்லப்பட்டதை அறிவித்த பராக் ஒபாமா, அந்த வாக்கியத்தின் இறுதியிலேயே போர் இன்னமும் முடியவில்லை என்பதைத் தெளிவாக அறிவித்திருக்கிறார். இனிமேல் வெறுமனே தீவிரவாதத்தை மட்டுமே  எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருப்பது என்பது சராசரி அமெரிக்கர்களின் பொதுக்கருத்தைத் திரட்டுவதற்குப் போதுமான அளவுக்குப் பயனளிக்காது. எனவே, தீமையை அழித்த நன்மையானது அடுத்து தனது நிலையை ஸ்திரப்படுத்திக்  கொள்ள வேண்டுமல்லவா? எனவே எங்கெல்லாம் நன்மை போதுமான அளவுக்கு இல்லையோ அங்கெல்லாம் அமெரிக்க ஏவுகணைகள் நன்மையின் நற்செய்தியைச் சுமந்து செல்கின்றன. லிபியாவிலும், சிரியாவிலும் அமெரிக்கத் தலையீடுகள் இப்படித்தான் நியாயப்படுத்தப்படுகின்றன – அதாவது 'மனிதாபிமான அடிப்படையிலான' தலையீடு.

சீரியலின் ஒரு எபிசோடில் இருந்து அடுத்த எபிசோடுக்குச் செல்லும் முன் ஒரு சுப முடிவு தேவை – அந்த சுப முடிவு தான் தீமையின் வடிவமான ஒசாமா பின்லேடனின் கொலை. இதில் ஒசாமா இப்போது செத்தாரா முன்பே செத்தாரா என்பதற்குள் நாம் விரிவாக ஆராயத் தேவையில்லை.  இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் கடந்த பத்தாண்டுகளில் ஒசாமா பின்லேடன் என்கிற பெயர் அமெரிக்காவுக்கு அள்ளிக் கொடுத்தது என்னவென்பதும் இப்போது கொல்லப்பட்ட பின் அள்ளிக் கொடுக்கப்போவது என்னவென்பதும் தான் நமது கவனத்திற்குரியது. ஒருவேளை முன்பே செத்திருந்தாலும் அது அமெரிக்க நலன்களுக்கே பயன்பட்டுள்ளது – இப்போது செத்ததும் அமெரிக்க நலன்களுக்கே பயன்படப் போகிறது.

கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்க முதலாளிகளுக்குப் பொன்முட்டையிடும் வாத்தாக இருந்த அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கான ஒரு நொண்டிச் சாக்காக ஒசாமா இருந்தார் என்றால் இனி அடுத்து வரப்போகும் 'நல்லெண்ண அடிப்படையிலான' போர்களுக்கு அமெரிக்கர்களை உளவியல் ரீதியில் தயார்படுத்த இப்போது செத்துள்ளார்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் ஒசாமா பின்லேடனின் வாழ்வும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே இருந்தது – இப்போது அவரது சாவும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே அமைந்துள்ளது.

யார் பயங்கரவாதி? அல் காய்தாவா, அமெரிக்காவா?

பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அச்செய்தியை வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியாளர்களுக்கு அறிவித்த பராக் ஒபாமா, அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் அநியாயமாகக் கொன்ற ஒரு பயங்கரமான தீவிரவாதியை ஒழித்து நீதியை நிலைநாட்டி விட்டதாகவும், இத்தோடு நில்லாமல் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்கப் போர் தொடரும் என்றும் அறிவித்துள்ளார். அதாவது இதுவரை நிலைநாட்டியதைக் கடந்து இன்னமும் நிலைநாட்டப்படுவதற்கு இன்னமும் நீதியை அமெரிக்கா ஸ்டாக் வைத்துள்ளது என்பதே அந்த அறிவிப்பின் உள்ளார்ந்த அர்த்தம்.

பராக் ஒபாமாவின் வார்த்தைகள் ஒரு அம்சத்தில் உண்மையானது தான் – அதாவது அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொல்பவன் ஒரு பயங்கரமான தீவிரவாதியாகத் தான் இருக்க முடியும். அவன் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்கிற ஒபாமாவின் ஆசையைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது – அது நியாயமானது தான். எமது ஆசையும் கூட அதுவே தான். நாம் எமது வாசகர்களையும் பொதுமக்களையும் ஒபாமாவின் இந்த ஆசையை நிறைவேற்றி வைக்குமாறு கோருகிறோம். ஆனால், ஒசாமா பின்லேடன் ஒழிந்த பின் இப்போது உலகிலேயே பயங்கரமான தீவிரவாதி யாராக இருக்கும் என்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அது நியாயமானது தான். எனவே அப்படியொரு தீவிரவாதியை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது வினவின் தலையாய கடமையாக  கருதுகிறோம்.

இந்த பயங்கரவாதியை நீங்கள் லேசில் எடை போட்டு விடலாகாது. உலகின் அத்துனை கண்டங்களிலும் அதன் சகல மூலைகளிலும் இந்த பயங்கரவாதி கால் வைத்த இடத்திலெல்லாம் சர்வநாசத்தை விளைந்துள்ளான். அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இளம் பெண்கள் தம் பெற்றோர் கண்முன்னேயே கற்பழிக்கப்பட்டுள்ளனர். தாய்மார்கள் தமது பிள்ளைகள் முன்பே மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். ஒன்றுமறியாத சிறு பிள்ளைகள் இந்த பயங்கரவாதி வீசிய குண்டுகளில் சிதைந்து போயுள்ளன. கருவிலிருக்கும் சிசு வரையில் ஊடுருவும் வீரியம் மிக்க அந்த குண்டுகளினால் பிறக்கும் குழந்தைகள் உருவமற்ற வெறும் சதைக்கோளங்களாகப் பிறந்துள்ளன.

ஒசாமா பின்லேடனாவது எந்த நீதிமன்றத்தாலும் விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டவனில்லை – ஆனால், நாங்கள் அடையாளம் காட்டுவதோ சர்வதேச நீதிமன்றத்தாலேயே குற்றவாளி  என்று தீர்ப்பளிக்கப்பட்ட பயங்கரவாதியை. இன்னமும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உலாவும் அந்தத் தீவிரவாதி வேறு யாரும் இல்லை – அது அமெரிக்கா தான். உலகெங்கும் ஒரு ஆக்டோபஸின் கரங்களைப் போல் விரியும் அமெரிக்காவின் பயங்கரவாதக் கொலைக் கரங்கள் விளைவித்த சர்வநாசங்களைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பை இங்கே வழங்குகிறோம். முதலில் அமெரிக்காவின் கொல்லைப்புறமான லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து துவங்குவோம்.

அமெரிக்க பயங்கரவாதம்

அமெரிக்க பயங்கரவாதம் – தென் அமெரிக்க சாட்சியங்கள்!

வட அமெரிக்க கண்டத்தையும் தென்னமெரிக்க கண்டத்தையும் இணைக்கும் மெல்லிய நிலப்பரப்பில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறிய நாடு நிகரகுவா. 1936-ல் தொடங்கி சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தது சோமோசா சார்வாதிகார கும்பல். இன்றைக்கு உலகமக்களுக்கு ஜனநாயக விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இதே யோக்கிய அமெரிக்கா தான் அன்று மக்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த சோமோசா கும்பலுக்கு உற்ற பங்காளி.

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை உணர்வுகள் ஒரு பௌதீக வடிவமாக ஸான்டினிஸ்ட்டா புரட்சியாளர்கள் வடிவில் உருக்கொண்டு எழுந்து சூறாவளியாய்ச் சுழன்றடித்ததில் சோமோசா குடும்பத்தின் கடைசி வாரிசும் அப்போது அதிகாரத்திலிருந்த கொடும் சர்வாதிகாரியுமான அனடேஸியோ சோமோசா டெபாயேல் 1979-ம் ஆண்டு அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார். மக்களின் விடுதலை உணர்வுகள் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பதை அமெரிக்கா உணர்ந்திருந்தது. 77-ம் ஆண்டே இதை முன்னறிந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இராணுவ உதவிகளை வழங்கியிருந்தார். ஆனாலும் சுழன்றடித்த மக்களின் கோபக் கனலில் சோமோசா சர்வாதார ஆட்சி கவிழ்ந்து சான்டினிஸ்ட்டா புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சோமோசா கும்பலுக்கு விசுவாசமான கூலிப்படையினரைப் பொறுக்கியெடுத்த அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ, அவர்களுக்கு கான்ட்ராஸ் என்று பெயரிட்டு பயங்கரவாத நாசவேலைகள் செய்வதற்கு பயிற்றுவித்தனர். இதற்காகவே "ஸ்கூல் ஆப் அமெரிக்கானாஸ்" என




0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்