_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...


 http://blogs.state.gov/images/Dipnote/behind_the_scenes/2011_0414_civilians_libya_m.jpg
லிபிய பொதுமக்கள்

http://www.dw-world.de/image/0,,2021021_1,00.jpg
அனாதைகள்

http://emajmagazine.files.wordpress.com/2010/07/turkish-gastarbeiter-wdr-de.jpg
வெளிநாட்டு வேலையாட்கள்

http://www.centree.cn/en/images/b_2_4.jpg
மீண்டும் வீடு நோக்கி...!!



லிபிய பொதுமகனின் நீண்ட பயணம்

"நேட்டோ படைகள் லிபிய பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்கும்"
இவ்வாறுதான் எங்களுக்கு சொல்லப்பட்டது...
எந்த பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்கப்படும்??
கடாபிக்கு ஆதரவளிக்கும் பொதுமக்களுக்குமா??..... அவ்வாறு நான் நினைக்கவே இல்லை!!

அவ்வாறாயின், கடாபியை எதிர்க்கின்ற பொதுமக்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பளிக்கப்பட வேண்டும்.

ஆனால் கடாபியை எதிர்க்கின்ற ஒரு பொதுமகன் ஆயுதம் தரித்து போராடத் தொடங்கினால்...?
அவன் அப்போதும் "பொது மகனாகவே" கருதப்படுவானா??... நான் அவ்வாறு நினைக்கவே இல்லை!!
இருப்பினும், நேட்டே படைகள் அவனுக்கு பாதுகாப்பளிக்கும். ஏனெனில்,
"நேட்டோ படைகள் லிபிய பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்கும்"
அவ்வாறுதான் அவர்களுக்கும் சொல்லப்பட்டது.

ஆனால்,
சில லிபிய பொதுமக்கள் மீன்பிடி வள்ளங்கள் மூலம் இத்தாலியின் தென் பகுதியை அபாயங்களுடன் சென்றடைந்து அங்கு அரசியல் தஞ்சம் கோரினால்...?
 அவர்களுக்கு அது வழங்கப்படுமா??.....இல்லை, நான் அவ்வாறு நினைக்கவே இல்லை!!
அவர்கள் கடத்தப்படுவார்கள்,
அல்லது பிரான்ஸின் எல்லைகளில் அனாதைகளாக கைவிடப்படுவார்கள்.
பின்னர் அவர்களுடைய எசமான்கள் அவர்களை லிபியாவுக்கு திருப்பியனுப்பும் வரை பிரான்ஸ் அவர்களை ஜேர்மனிக்கு சட்டவிரோத தொழிலாளர்களாக கள்ளக்கடத்தல் செய்து பொதுமகனுக்குரிய சிவில் உரிமைகளை களையும்! (மற்றும்படி, அவர்கள் சட்டவிரோத வேற்றுவாசிகளாகவே அறியப்படுவர்.)

மீண்டும் ஒருவேளை லிபியாவுக்கு அவர்கள் திரும்பி வந்தால்...?
கடாபி அவர்களுக்கு வீடு கொடுத்து வரவழைப்பார்?
தொழிலும் கொடுத்து அவர்களின் பிள்ளைகளுக்கு இலவச கல்வியும் கொடுப்பார்?
அவ்வாறு ஒருவேளை  கொடுத்தாலும், அவர்களுடைய பிள்ளைகள் வளர்ந்து பெரியாட்கள் ஆனதும் மீண்டும் கடாபியின் கொடுங்கோண்மையை அகற்றும் படியே கோறுவர்...
ஏனெனில்...ஏனெனில் கடாபி சார்கோஸியைப் போன்றோ அல்லது பேர்லுஸ்கோனியைப் போன்றோ ஜனநாயகவாதி அல்ல!!
...நான் அவ்வாறு நினைக்கவும் இல்லை.



(This is a translation of a novel by novolist Sherlock Hommos)
Translated by me, S.H.M Rizvy.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்